Tuesday, May 23, 2017

அஷ்டமாதிபதி தசை புக்தி என்ன கேடுகளை தரும்

அஷ்டமாதிபதி தசை புக்தி என்ன கேடுகளை தரும் ?

Nava Girahas


ஜாதகத்தில் 8ம் வீடு எதை குறிப்பிடுகிறது?

எட்டாம் வீடு ஆயுள். அவமானம். கண்டம். மரணம். இயற்கையான மரணம். கெட்ட பயம். வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு. வட்டி கட்டுதல். உதவிப் பணம். திடீர் அதிஷ்டம். தடை உயில். கெட்ட செயல். தானாக தொலைந்து போதல். வரதட்சணை. சீர். மாங்கல்யம். ஆப்ரேஷன். கசாப்பு கடைகள். மலக் கழிவிடம். கர்பப் பை.

ஒரு ஜாதகத்தில் 8 ஆம் இடத்தை கொண்டு ஆயுளை பற்றியும் 2 , 7 ஆம் இடத்தை கொண்டு மாரகத்தை பற்றியும் கூறமுடியும் .மாரக தசை அல்லது புத்தி வரும் காலங்களில் மிக கவனமுடன் இருப்பது அவசியம்.

Sri Laxmi Narashimar


எட்டாம் வீட்டு அதிபதி கஷ்டமான பலன்களையே கொடுப்பார்.  மரணம், விபத்தில் அடிபடுதல், கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை, வறுமையான சூழல், அவமானங்கள், சிறுமை, மன அமைதியின்மை ஆகியவற்றை ஏற்படுத்துபவர் அவரே!

அவர் (அதாவது எட்டாம் அதிபதி - 8th lord) வலிமையோடு, எந்த சுபக்கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை இன்றி இருந்தால், மேற்கூறியவைகள் அதிகமாகும். இல்லையென்றால் குறைந்துவிடும்.

அஷ்டமாதி என்னும் 8ம் இடத்து அதிபதியின் தசை புக்தி நடைபெறும்போது ஜாதகருக்கு சொல்லான துன்பங்கள் ஏற்படுகின்றன. 

அஷ்டமாதிபதி தசை நடக்கும்போது நாம் எந்த புது முயர்ச்சியும் செய்யலாகாது. கடன் வாங்கவே கூடாது.கொடுக்க்கவும்கூடாது.

Sri Pulipani Rishi


புலிப்பாணி அஷ்டமாதிபதி தசை புக்தி பற்றி என்ன சொல்கிறார் ?

கேளப்பா பீசத்தில் நோயுண்டாகும்
கெதியுள்ள குழவிக்கு ரோகங்கிட்டும்
வீளப்பா தொங்கிடுவன் வெகுபேர்காண
விளங்குகின்ற தூக்குமரக் கோலில் தானும்
பாரப்பா பீரங்கி வெடியால் கேடு
பலதுன்பம் விளையுமடா பொருளும் நஷ்டம்
நீளப்பா நீர்ப்பயமும் தீயால்வேதை
நீரிடியும் விழுகுமடா நிசஞ்சொன்னோமே.


அட்டமாதிபதியால் மேலும் ஏற்படும் துன்பங்களைக் கூறுவேன் கேட்பாயாக! பீசத்தில் நோய் உண்டாதலும், நற்கதியுள்ள குழவிக்கு பலவித ரோகங்கள் ஏற்படுதலும், பல பேரும் கண்டு அனுதாபப்படுமாறு தூக்கில் தொங்கி மரணமடைதலும், மற்றும் பீரங்கி முதலிய வெடிகளால் ஏற்படும் துன்பங்களும் போன்ற பலவும் ஏற்படுவதோடு அனேகப் பொருள் நஷ்டமும், ஜலத்தில் கண்டமுள்ளதாதலால் பயமும் தீயால் துன்பமும் நீரில் இடி விழுதலும் நேர்ந்து மிகத்துன்பம் உண்டாகும் என்பதையும் போகரது அருளாணையாலே புலிப்பாணி கூறினேன். 
Sri Pazhani Dhandapani


இரு மாரகத்தான் தசை என்றல் என்ன ?

எட்டவன் திசையுமாகின் இரு மாரக பொசிப்புமாகின்
நாட்டங்கள் மிகவும் யுண்டாகும்

என்கிறது ஒரு சோதிட பாடல்.

அதாவது , ஜாதகருக்கு அஷ்டமாதி தசை நடைபெற்றாலும் , இரு மாரகத்தான் தசை    நடைபெற்றாலும் நட்டங்கள் நிறைய உண்டாகும்.

ஒரு கிரகாம் இரு மாரக ஸ்தானங்களுக்கு அதிபதி ஆகும் நிலை ஏற்படும்பொழுது. உதாரணமாக , சர லக்கினத்திற்கு , மாரகாதிபதி   2 ம் மற்றும் 7ம் அதிபதி ஆவார். சர லக்கினமான  மேஷ லக்கினத்திற்கு ஷுக்ரன்  2ம் மற்றும் 7ம் அதிபதியாகி இரு மாராகத்தான்  என்ற நிலையை அடைகிறார். அதுபோல் , துலா   லக்கினத்திற்கு மாரகாதிபதி   2மற்றும்  7ம் அதிபதி ஆன செவ்வாய் ஆவார். ஆக , துலா   லக்கினத்திற்கு  இரு மாரகத்தான் தசை ஆன செவ்வாய் மற்றும் மேஷ லக்கினத்திற்கு மாரகாதிபதி யான ஷுக்ரன் தசை புத்திகள் நடை பெரும் பொழுது அதிகமான தீய பலன்கள் ஜாதகருக்கு ஏற்படுகிறது.

அஷ்டமாதிபதிக்கு சுப கிரஹங்கள் பார்வை ஏற்பட்டாலும் அல்லது சேர்க்கை ஏற்பட்டாலும் ஷுப பலன்கள் அஷ்டமாதி தசை மற்றும் புக்தி காலங்களில் ஏற்படுகிறது. அஷ்டமாதிபதிக்கு பாப  கிரஹங்கள் பார்வை ஏற்பட்டாலும் அல்லது சேர்க்கை ஏற்பட்டாலும் அஷுப  பலன்கள் அஷ்டமாதி தசை மற்றும் புக்தி காலங்களில் ஏற்படுகிறது.

Raasi Chakra

அஷ்டமாதிபதி தசையைப் பற்றி பழைய ஜாதக நூலில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது:

‘‘அட்டமத்தான் திசை வரும் காலத்தில் அந்நிய தேசத்தில் புகழ் பெறுவான் நட்டதெல்லாம் பாழ் விழலுக்கிரைத்த நீர்.

அஷ்டமாதிபதி எந்த நட்சத்திரத்தின் சாரம் பெற்றுள்ளார் என்பதை கவனிக்க வேண்டும் . ஸுப  நட்சத்திரத்தின் சாரம் பெற்றால் நல்ல பலன்களையும் அஷுப நட்சத்திரத்தின் சாரம் பெற்றால் தீய பலன்களை தருவார்.


அஷ்டமாதிபதி தசை அல்லது புத்தி நடப்பவர்கள் மஹாம்ருத்யுஞ்சய மந்திரம் சொல்லி வந்தால் கேடு பலன்கள் குறையும்.  

No comments:

Post a Comment