Wednesday, December 14, 2022

ஜாதகத்தில் பிரம்ம யோகம் யோகம் ஏற்படும் அமைப்பு

 ஜாதகத்தில் பிரம்ம யோகம்  ஏற்படும் அமைப்பு

ஜாதகத்தில் குரு 9ம் அதிபதிக்கு கேந்திரத்திலும், சுக்கிரன் 11ம் அதிபதிக்கு கேந்திரத்திலும், புதன் லக்கினாதிபதிக்கோ அல்லது 10ம் அதிபதிக்கோ கேந்திரத்தில் அமர்ந்தால் அது பிரம்ம யோகம் எனப்படும்.

சுப கிரஹங்களான குரு , சுக்கிரன் , புதன் வலுபெறவேண்டும்

இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகருக்கு , குரு 9ம் அதிபதியான சுக்கிரனுடன் இணைந்த காணப்ப டுகிறார். சுக்கிரன் 11ம் அதிபதி யான குருவுடன் இணைந்து காண ப்படுகிறார். புதன் லக்கினாதிபதி யுடன் இணைந்து காணப்படுவ தால் இவருடைய ஜாதகத்தில் பிரம்ம யோகம் அமைந்து காணப்படுகிறது.

பிரம்ம யோகம் - ஒரு அபூர்வ யோகம்

இந்த பிரம்ம யோகம் எல்லா ஜாதகங்களில் அமையாது. ஏனென்றால் குரு 9ம் அதிபதிக்கு கேந்திரத்திலும், சுக்கிரன் 11ம் அதிபதிக்கு கேந்திரத்திலும், புதன் லக்கினாதிபதிக்கோ அல்லது 10ம் அதிபதிக்கோ கேந்திரத்தில் அமர்ந்தாலதான் இந்த யோகம் ஏற்படுகிறது.

பிரம்ம யோகத்தில் பலன்கள்

இந்த யோகம் அமைந்த ஜாதகர் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களுக்கு அதற்கான வசதி வாய்ப்பும் , ஆரோக்கியம் , செய்யும் தொழிலாளி மேன்மை , ஆரோக்யமான உடல் அமைப்பு கொண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் நீண்ட ஆயுள் உண்டாயவர்கள் உயர் கல்வி கற்றவர்கள் . நல்ல நடத்தை உள்ளவர்கள் .

எல்லா லக்கினத்திற்கும் பிரம்ம யோகம் ஏற்படுமா ?

இந்த பிரம்ம யோகம் எல்லா ஜாதகங்களில் அமையாது. மேஷ லக்கின காரர்களுக்கு குருவே 9ம் அதிபதியாக வருவதால் 9ம் அதிபதிக்கு குரு கேந்திரம் என்பது சாத்தியமில்லை

கடக லக்கினம்

கடக லக்கின‌ காரர்களுக்கு குரு மற்றும் சுக்கிரனே 9 மற்றும் 11ம் அதிபதியாக வருவதால் இங்கு பிரம்ம யோகத்திற்கான முதல் இரண்டு விதிகள் அமையாது .

கன்னி மற்றும் தனுசு லக்கினம்

.கன்னியா லக்கின காரர்களுக்கு புதனே 10ம் அதிபதியாக வருவதா லும், தனுர் லக்கினகரர்களுக்கு புதன் மற்றும் சுக்கிரனே 10 மற்றும் 11ம் அதிபதியாக வருவதாலும் மேலே சொல்லப்பட்ட விதிகள் படி இந்த யோகம் அமைய சாத்தியமில்லை.

கடகம், கன்னி மற்றும் மேஷ லககினகாரர்களை தவிர

கடகம், கன்றும் மேஷ லக்கினகா ரர்களை தவிர மற்ற அணைத்து லஞன காரர்களுக்கு இந்த யோகம் முழுமையான பலன்களை தரும்.

இந்த யோகம் முழுமையாக பலன் தரவேண்டும் என்றால்

இந்த யோகத்தின் மூன்று விதிக ளும் ஒன்றாக அமைந்தால் தான் யோகம் முழுதாக பயன் கொடுக்கு ம் மாறக எதோ ஒன்றிரண்டு விதிகள் ஒத்து போனால் முழு யோகம் இல்லாவிட்டாலும், 50% அளவில் பலன் கொடுக்கலாம்.

ஜாதகம் பார்க்க என்னுடைய whatsup No 7904719295 இதில் உங்களுடைய பிறந்த தேதி மாதம் வருடம் பிறந்த ஊர் , பிறந்த நேரம் அனுப்பவும். நான் போனில் உங்களிடம் அரை மணி நேரம உங்கள் ஜாதக பலன்களை விரிவாக அலசுவேன் 35 பக்க உங்கள் ஜாதகம் மற்றும் நான் சொல்லும் பலன்கள் அனைத்த்தும் தமிழில் உங்களுக்கு அனுப்பி வைக்கபடும். கட்டணம் உண்டு . இலவசம் இல்லை நன்றி ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

May be an image of text that says "கேது லக்கினம் பிரம்ம யோகம் சூரியன் 17-01 17-01-1960 சந்திரன் புதன் சனி செவ்வாய் குரு சுக்கிரன் ராகு"

No comments:

Post a Comment