Thursday, December 29, 2022

அதீத காம வேட்கையை தரும் சுக்கிரன், செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கை

 

அதீத காம வேட்கையை தரும் சுக்கிரன், செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கை

வேத ஜோதிடத்தில் சுக்கிரன், செவ்வாய் மற்றும் ராகு இணைந்த ஜாதகர் மிகவும் வெறித்தனமான காம ஆர்வம் உடையவர்.

ஜோதிடத்தில் சுக்கிரன்

காதல், உறவு, ஆசை, இன்பம், காமம் மற்றும் பாலியல்.உறவு மற்றும் ஈடுபாட்டை குறிப்பார்

ஜோதிடத்தில் செவ்வாய்:

முயற்சிகள், ஆற்றல், மன உறுதி, வலிமை, ஆர்வம், சண்டை திறன், மனக்கிளர்ச்சி, விபத்துக்கள், காயங்கள், விளையாட்டு, விளையாட்டு வீரர், தற்காப்பு கலைகள், ஆயுதம், பொறியாளர் மற்றும் காமகேளிக்கைகளை .குறிப்பார்

ஜோதிடத்தில் ராகு:

மாயை, தடையை உடைப்பவர், வழக்கத்திற்கு மாறானவர், ஏமாற்றுபவர், மந்திரவாதி, வெளிநாட்டு பொருட்கள் மற்றும் இடங்கள், அரசியல்வாதி, பரந்த தொடர்பு மற்றும் கணினி தொடர்பான பொருட்கள். அதீத காமம் ஆகியவற்றை குறிப்பார்

சுக்கிரன் , செவ்வாய் , ராகு இந்த மூவரும் ஜாதகத்தில் ஒன்றாக இணைந்து காணப்பட்டால் கந்தர்வ கோலம்தான் .

ஜோதிடத்தில் சுக்கிரன், செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கை எந்த மாதிரியான பலன்களை தரும் ?

1.அத்தகைய ஜாதகர் எளிதில் காதலில் விழுந்து விடுவார். இவர்களுக்கு பெரும்பாலும் காதல் திருமணமே நடைபெறுகிறது.

2.அவர்களின் உடலுறவு, காமம் பேரார்வம் மிகவும் அதிகமாக இருக்கும் .

3அவர்களின் காம தேவைகளை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது.

4. 1வது, 4வது, 5வது, 7வது 8வது மற்றும் 12வது, வீட்டில் இப்படி இணைவது ஒருவரை பாலியல் அடிமையாக்கும்.

5.அவர்கள் காம தேவைகள் வெறித்தனமாக இருக்கும்

6 ஒரு பெண்ணின்ஜாதகத்தில் அத்தகைய இணைப்பு ஏற்பட்டால், மிகவும் பாலுணர்வு கொண்ட ஒரு அல்லது பல ஆண்களை விரும்புவார்கள்.

7.ஜாதகர்கள் காம சாகசத்தில் ஈடுபடுவதையும், காதல், காமம் மற்றும் பேரார்வம் ஆகியவற்றை ஆராய்வதற்காக இரவு விடுதிகளுக்கு மற்றும் காம கேளிக்கை நடக்கும் இடங்களுக்குச் செல்வதையும் வாடிக்கையாக கொண்டவர்கள்.

8.ஜாதகர்கள் மிகவும் ஆடம்பரமானவர்கள், மேலும் ஆடம்பரமான வாழ்க்கை முறையில் ஈடுபடுகிறார்கள்.

அதே நேரத்தில், அவர்கள் வாழ்க்கையின் விளிம்பில் வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

9. இத்தகைய கிரஹ சேர்க்கை உள்ள ஒரு ஆணின் பாலியல் பசி ஒரு பெண்ணால் தீர்க்க முடியாது. அதனால் அவர் பல பெண்களிடம் உறவு கொள்ளும் நிலைக்கு தள்ள படுகிறார்.

10. சுக்கிரன் , செவ்வாய் , ராகு சேர்க்கை மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் ஏற்பட்டால் அத்தகைய அமைப்பு ஜாதகரை பாலியல் குற்றங்களைச் செய்ய வழிவகுக்கும்.

11. இத்தகைய கிரஹ சேர்க்கை மற்ற 7 ராசிகளில் இருந்தாலும் பாதிப்பை தரும். இதில் சுக்கிரன் அல்லது செவ்வாய் , அல்லது ராகு நீச்சம் , அஸ்தங்கம் , கிரஹ யுத்தத்தில் தோல்வி அடைந்து காணப்பட்டால் சற்று வீரியம் குறைந்து காணப்படும்.

12. சுக்கிரன் , ராகு , செவ்வாய் சேர்க்கை காதல் மற்றும் காமம் ஈடுபாடு கிட்டத்தட்ட வெறித்தனமாக இருக்கும் சில சந்தர்ப்பங்களில், இது உடல் ரீதியாக தவறான உறவுக்கு வழிவகுக்கும்.

13. ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் ராகு சேர்க்கை நல்லதாக கருதப்படவில்லை, ஏனெனில் இது சுக்கிரனை முழுவதுமாக வலுவிழ க்க செய்து , காமக்களியாட்டங்க ளில் ஈடுபட செய்து விடும்

மீன லக்கினத்திற்கு சுக்கிரன் செவ்வாய் ராகு சேர்க்கை 7ம் இடத்தில்

சுக்கிரனுடன் செவ்வாய், ராகு சேர்ந்திருந்தால் அந்த தசாபுத்தி காலத்தில் ஜாதகர் பல பெண்களி டம் தொடர்பில் இருப்பர் . இதுவே பெண் ஜாதகம் என்றால் பல ஆண்களிடம் தொடர்பு ஏற்படும்.

சுக்கிலத்திற்க்கு அதிபதி

காம உணர்வுகளைத் தூண்டக்கூடிய கிரகம் சுக்ரன்தான். ஆண்களுக்கான சுக்கிலத்திற்க்கு அதிபதி இவர்தான். அதனால்தான் பாலியல் உணர்வுகளுக்கெல்லாம் சுக்கிரன் காரணகர்த்தாவாகிறார்.

சுக்கிரன் உடன் பாப கிரஹங்கள் சேர்க்கை

காம உணர்வுக்கு காரகர் சுக்கிரன் சுக்கிரன் உடன் பாவகிரகங்கலான செவ்வாய் , ராகுவோடு சம்மந்தப்ப டும்பொழுது சமூகம் வரையறுத்து ள்ள தனிமனித ஒழுக்கத்தை மனிதர்கள் தாண்டுகிறார்கள்.

காம திரிகோணம்

காம திரிகோண ஸ்தானமான 3,7,11 இடங்களில் மற்றும் அயன சயன போக ஸ்தானமான 12ம் இடத்தில சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை இவர்கள் காம போகத் திற்கு அதிக அபிலாஷை இருக்கும்

கிரகங்களின் சேர்க்கை லக்னம், ராசி, மூன்றாமிடமாகிய போக ஸ்தானம், ஏழாமிடமாகிய களத்தி ரஸ்தானம், பன்னிரெண்டாம் இடமாகிய அயனசயன ஸ்தானம் ஆகிய ஒன்றில் சுக்கிரன் இருந்து பாவிகளாகிய சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களு டன் இணைவதோ அல்லது பார் வை பெறுவதோ ஒருவரின் காம உணர்வை அதிகமாக்கி விடும்.

களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில ராகு , செவ்வாய் , சுக்கிரன் சேர்க்கை

1. ஜாதகர் இரண்டு அல்லது மூன்று முறை திருமணம் செய்து கொள்ளலாம்.இவரது குடும்ப வாழ்க்கை சிக்கலாக இருக்கும்.

2.ஜாதகருக்கு பாலியல் வேட்கை மிக அதிகமாக இருக்கும். . இது அவரது திருமண வாழ்க்கையை பாதிக்கும்.

3. ஜாதகருக்கு பல்வேறு வகையான பெண்களுடன் தொடர்பு இருக்கும். . ஜாதகர் பாலியல் உறவில் எப்போதும் திருப்தியடைய மாட்டார்.

4. பெண்கள் ஜாதகத்தில் இத்தகைய அமைப்பு கணவருடனான உறவை பாதிக்கும்.

உதாரண ஜாதகம்

இங்கே இணைக்க பட்டுள்ள ஜாதகத்தில் , மீன லக்கினம் . 7ம் இடமான களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் ,செவ்வாய் , ராகு சேர்க்கை . காலத்திரகாரகர் சுக்கிரன் நீச்சம் அடைந்து காணப்படுகிறார். ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களிடம் தொடர்பு உள்ளது. இவர் சும்மா இருந்தாலும் இவரை தேடி உறவுகள் வருகிறது . இதனால் இவருக்கு நிம்மதி இல்லை. ஆக சுக்கிரன் ,செவ்வாய் , ராகு சேர்க்கை இவரை வாட்டி வதைக்கிறது.

கோள்களின் கோலாட்டம்

இதிலிருந்து என்ன தெளிவாகிறது ? கோள்களில் கோல் ஆட்டத்தில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதுதான்

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் ஆருடத்தின் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 7904719295

May be an image of text that says "லக்கினம் கேது குரு பல பெண்களின் தொடர்பைஏற்படுத்தும் சந்திரன் செவ்வாய் சுக்கிரன் சூரியன் ராகு சேர்க்கை சனி 02-08-1978 புதன் சுக்கிரன் ராகு செவ்வாய்"

No comments:

Post a Comment