Search This Blog

Sunday, January 1, 2023

ஜாதகத்தில் மிக அபூர்வமாக காணப்படும் தண்ட யோகம் (சந்நியாசம்)

ஜாதகத்தில் மிக அபூர்வமாக காணப்படும் தண்ட யோகம் (சந்நியாசம்)

இந்த யோகம் ஒரு அபூர்வமான யோகம். நான் ஆயிரக்கணக்கான ஜாதகம் பார்த்துள்ளேன். இந்த யோகம் பெரும்பாலும் பார்த்ததே இல்லை. ஆனால் இங்கே கொடுக்க பட்டுள்ள்ள உதாரண ஜாதகத்தில் நான் பார்த்த பொழுது மிகவும் ஆச்சரிய அடைந்தேன்.

7 கிரஹங்கள் 4 வீட்டில்

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஏழு கிரகங்கள் 10,11,12 மற்றும் 1 ஆகிய இடங்களில் இருக்கும் பொழுது இந்த யோகம் அமைகிறது. ஏழு கிரகங்களும் நான்கு வீட்டில் இருக்கும் வரை இந்த யோகம் ஏற்படுகிறது

சமூகத்தில் ஒன்றி வாழ முடியாத நிலை

ஒரு ஜாதகத்தில் அனைத்து கிரகங் களும் பத்தாம் வீட்டிற்கும் லக்கின த்திற்கு இடையில் இருக்கும்போது தண்ட யோக அமைந்தால் இளம் வயதிலே சமூகத்தில் ஒன்றி வாழ முடியாத நிலை அமைகிறது. உங்களை சுற்றி இருப்பவர்களின் செய்யும் பாப செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்களை தண்டிக்கும் மனப்பா ன்மை கொண்ட ஜாதகர் இவர்.

வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுடன்

சில சமயங்களில், ஜாதகர் பாவச் செயல்களிலும் ஈடுபடலாம். தண்ட யோகத்தில் பிறந்த ஒருவர் தனது வாழ்க்கை துணை மற்றும் குழந் தைகளுடன் அடிக்கடி வாக்குவா தத்தில் ஈடுபடலாம். அதனால் ஜாத கர் மனைவி மற்றும் குழந்தைகளா ல் வெறுத்து ஒதுக்க படும் நிலைக் கு தள்ள படுவார்கள். ஜாதகர்

பொதுவாக பொது தொண்டுகளில் ஈடுபடும் ஆர்வமுடையவர்.

சன்யாசி , மத குருமார்கள் கையில் ஏந்தும் தண்டம்

குடும்ப பிரச்சனைகளால் ஜாதகர் ஒரு சாதுவாகவோ , சந்நியாசியா கவோ ஆகக்கூடும். தண்டம் என்ப து சன்யாசி , மத குருமார்கள் கையில் எப்போதும் வைத்து இருப்பார்கள். சங்கராச்சாரியர்கள் கையில் தண்டம் வைத்து இருப்பார்கள் . ஜாதகருக்கு தண்டம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்படுவர் என்பதால் இந்த யோகத்திற்கு தண்ட யோகம் என்று பெயர் வந்தது.

பழனி முருகனும் தண்டமும்

பழனி முருகன் கையில் தண்டம் வைத்திருந்ததால், "தண்டாயுத பாணி' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் தண்டம்' என்றால் "கோல்' அல்லது "அபராதம்' என்ற இருவகைப் பொருள்களைக் கொண்டது. "இவ்வுலக வாழ்வு நிலையற்றது' என்னும் ஞானபாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக பழனியில் முருகன் அருளுகிறார். ஆசிரியரின் கையில் கோல் இருக்கிறது. அதைக் கொண்டு பயமுறுத்தி, மாணவர்களை ஒழுக்க வழிக்கு திருப்புவார். முருகன் என்ற ஞான ஆசிரியனும், தன் கையிலுள்ள கோலால், உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கித் தவிக்கும் மக்களை ஆசைகளைத் துறந்து, தன்னைப் போல் ஆண்டிகோலத்தி ற்கு அழைக்கிறார். மறுப்பவர்களு க்கு "சோதனைகள்' என்னும் அபராதம் விதிக்கிறார்

சந்நியாசி கையில் உள்ள தண்டம்

அத்வைதிகளும் த்வைதிகளும் (மாத்வ மடத்து சன்ன்யாசிகள்) கடைபிடிக்கும் சன்யாச ஆசாரம் “எகதண்ட” வகையைச் சேர்ந்தது. அவர்கள் ஒற்றைக்கோல் (ஏகதண் டம்) ஏந்தி, சிகை (குடுமி), யஜ்ஞோ பவீதம் (முப்புரி நூல்) இவற்றை விடுவார்கள்.ஸ்மிருதிகளில் பரவ லாகப் பேசப்படும் த்ரிதண்ட சன்ன்யாசம் விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ மரபில் கடைபிடிக்க ப்படுகிறது. இவர்கள் த்ரிதண்டம் (முக்கோல்) ஏந்துபவர்கள்.

அயன ,சயன , போகஸ்தானமான 12 ம் வீட்டில் அதிக கிரஹங்கள்

தண்ட யோகம் அமைந்து 12 ம் வீட்டில் அதிக கிரஹங்கள் ஜாதகத்தில் காணப்பட்டால் அவருடைய இல்லற வாழ்வு பாதிக்க படுகிறது. ஏனன்றால் 12ம் இடம் அயன ,சயன , போக ஸ்தானம் என்பதால்.

இந்த யோகம் உள்ளவர்கள் திரும ண வாழ்வில் ஈடுபடுவார்கள். பின் னர் சந்நியாசம் அல்லது துறவறம் மேற்கொள்ளும் நிலை ஏற்படுகி றது. ஆக மொத்தம் தண்ட யோகம் அமைந்தால் ஆயிரம் அல்லது லட்சம் ஜாதகங்களில் வெகு சில ஜாதகங்களில் மட்டுமே அமைகிற ஒரு அபூர்வமான யோகம்.

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் ஆருடத்தின் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 7904719295

May be an image of text that says "கேது குரு புதன் சுக்கிரன் செவ்வாய் சந்திரன் சூரியன் மிக லக்கினம் சனி ஜாதகத்தில் அபூர்வமாக காணப்படும் தண்ட யோகம் 18-06-1977 ராகு"

No comments:

Post a Comment