பண செலவே இல்லாமல் பித்ரு தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் தில ஹோமம் செய்வது எப்படி ?
பித்ரு தோஷம் என்றால் என்ன ?
பித்ரு என்றால் நமது முன்னோர்க .ளை குறிக்கும் அமாவாசை பித்ரு பூஜை செய்ய உகந்த தினம் ஆகும்.
" ஜாதகத்தில் பித்ரு தோஷம் "
1.பித்ரு காரகன் எனப்படும் சூரியன் 8 12 போன்ற மறைவு ஸ்தானங்களில் இருப்பதும்
2.ராகு (அ) கேது சூரியனோடு சேர்ந்து இருந்தாலோ அதாவது சூரியன் சந்திரனுக்கு 1 2 5 9 ஆம் ராசிகளில் ( பாவங்களில் ) ராகு கேது இருந்தாலும்
3. 4 மற்றும் 9ம் பாவாதிபதி ராகு கேது சேர்கை (அ) மறைவு ஸ்தானங்களில் அமர்ந்தாலோ ஜாதகத்தில் பித்ரு தோஷம் என அறியலாம்
பித்ரு சாபம் நீங்க
ராமேஸ்வரம் அமாவாசை அன்று திதி தர்ப்பணம் முறையில் பிதுர் தோச பரிகாரம் நிகழ்த்தலாம்.
திலா ஹோமம்
தமிழில் எள்ளு ஹோமம் என அழைப்பர். நாமே பூஜை புனஷ்கார பொருட்கள் வாங்கி கொண்டு அமாவாசை அன்று காலை வினாயகரை வழிபாடு செய்து பின்பு சூரியனை வழிபாடு செய்து விட்டு கடலில் பிறப்பு ஜாதகம் பூ பழம் வெற்றிலை பாக்கு மற்றும் ஆண்களுக்கு கருப்பு எள்ளு பெண்களுக்கு வெள்ளை எள்ளு என கடலில் தர்ப்பணம் செய்து விட்டு
ராம நாத சுவாமி மற்றும் பதஞ்சலி முனிவர் வழிபாடு
ராம நாத சுவாமியை வழிபாடு செய்து விட்டு பதஞ்சலி முனிவர் ஜீவ சமாதி வழிபாடு செய்து விட்டு உங்கள் ஜாதகம் வைத்து வழிபாடு செய்து விட்டு திரும்பலாம்.
உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் ஆருடத்தின் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 7904719295
No comments:
Post a Comment