Search This Blog

Tuesday, April 25, 2023

காசி பரிகாரம் என்றால் என்ன? அதை நிறைவேற்ற வேண்டிய ஜாதகர் யார?காசி ஜாதகம்

 காசி பரிகாரம் என்றால் என்ன? அதை நிறைவேற்ற வேண்டிய ஜாதகர் யார?

காசி ஜாதகம் ..ஜோதிட விதிகள்.

1. காலச்சக்கரத்தின் கேந்திரங்க ளான மேஷம், கடகம், துலாம் அல்லது மகரம் ஆகிய இராசிகள் எதேனும் ஒன்றில் சனி அமர்ந்து இருப்பது..

2. சுய ஜாதகங்களில் எந்த லக்ன மாக இருந்தாலும், லக்ன கேந்திரங் களில் சனி அமர்ந்து இருப்பது..

3. இராகு கேது அச்சுக்கு (180 degree axis) இடையில் , லக்னம் உட்பட அனைத்து கிரகங்களும் அமர்ந்து சனி மட்டும் அந்த அச்சுக்கு வெளியே தனித்து அமர்ந்து இருப்பது..

இந்த மூன்று விதிகளில் எதேனும் ஒரு விதி பொருந்தி வந்தாலும் , அது காசி பரிகாரம் செய்ய வேண்டிய ஜாதகமாகும்.

இதன் வீரியம் கணக்கிட ஒன்றுக்கு மேற்பட்ட விதிகளில் சுய ஜாதகங்கள் பொருந்தி வருகின்ற நிலையாகும்..

உதாரணமாக விதி 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் பொருந்தி போவது அல்லது மூன்று விதிகளும் பொருந்தி போகின்ற நிலையில் காசி பரிகாரம் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதை உங்கள் ஜாதகம் உணர்த்தும்...

பரிகாரம்

காசியில் அமைந்த மயான பூமியா ன ( Cremation ground ) மணிகர் நிகா காட், ஹரிஷ்சந்திர காட் ஆகிய இடங்களில் ஒரு நாள் இரவு அமர் ந்து சேவை செய்து, விஸ்வ நாதரை தரிசித்து, ஒரு நேரமாவது " பவதி பிக்ஷாம் தேஹி " என்று இரந்து உண்டு, பைரவர், வாரா ஹி ஆகிய காவல் தெய்வங்களை வழிபட்டு, திரும்பும் வழியில் இராமேஸ்வரம் சென்று வழிபாடு நடத்திவிட்டு வீடு திரும்புவது மிகசிறப்பு .

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைக ளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment