Search This Blog

Thursday, May 4, 2023

10ல் சூரியன் திக் பலம் - அரசியலில் உயர் பதவி 10ல் புத ஆதித்தய யோகம் - அரசியல் சாதுர்யம் 10ல் அமாவாசை யோகம் - நாடாளும் யோகம் லால் பகதூர் சாஸ்திரி ஜாதகம் ஆய்வு

 10ல் சூரியன் திக் பலம் - அரசியலில் உயர் பதவி

10ல் புத ஆதித்தய யோகம் - அரசியல் சாதுர்யம்

10ல் அமாவாசை யோகம் - நாடாளும் யோகம்

லால் பகதூர் சாஸ்திரி ஜாதகம் ஆய்வு

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி 09-10-1904 அன்று காலை 11:15 பிறந்தார் தனுசு லக்கினம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்தார்.



சிறு வயதில் தந்தையை இழந்த சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரி இந்திய வரலாற்றின் ஒரு முக்கிய தலைவர். அவர் இரண்டு வயதாக இருந்தபோது அவரது தந்தை இறந்தார். அவரது தாயார் தனது கணவரின் வீட்டை விட்டு வெளியேறி தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றார். வாரணாசியில் உள்ள காசி வித்யாபீடத்திற்குச் சென்று தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பதவியேற்றார்.

10ல் புதன் உச்சம் மற்றும் சூரியன் 10ல் திக்பலம்

10ல் புதன் உச்சம் , மூல திரிகோணம் மற்றும் ஆட்சி - நவ கிரஹங்களின் புதன் மட்டும்தான் ஆட்சி ,உச்சம் , மூலதிரிகோணம் என்ற மூன்று நிலைகளை அடைகிறது லால் பகதூர் சாஸ்திரி ஜாதகத்தில் புதன் 10ல் உச்சம் , மூல திரிகோணம் , மற்றும் ஆட்சி .மேலும் சூரியன் 10ல் திக்பலம் . ஆக இரண்டு கிரஹங்கள் 10 ல் அதிக வலுவுடன் இருந்தது.

லால் பகதூர் சாஸ்திரி முதலில்வெளிவிவகார அமைச்சராக இருந்தார் . பின்னர் , இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1964 மே 27 இல் இறந்த பிறகு திரு சாஸ்திரி இந்தியப் பிரதமரானார்

10ல் சூரியன் திக் பலம் - என்ன பலன்கள் ?

திக் பலம் அடைந்த சூரியன் ஜாதகருக்கு புகழ், மரியாதை, அங்கீகாரம், செல்வம் மற்றும் அரசாங்கத்தின் கௌரவத்தை தருவார்.

அமாவாசை யோகம்

சூரியன், சந்திரன் இணைவும், தொடர்பும் ஜாதகருக்கு மிகப் பெரிய யோகத்தை தருகின்றது .இந்த யோகம் முழுமையாக வேலை செய்ய சந்திரன் அஸ்தமனம் அடையாமல் இருக்க வேண்டும்.12 பாகைக்கு மேல் இருப்பது அவசியம். இவருடைய ஜாதகத்தில் சந்திரன் சூரியனிடமிருந்து 0.12 விகலைக்குள் இருந்ததால் அஸ்தங்கம் நன்றாகவே வேலை செய்தது . அஸ்தங்கம் அடைந்த சந்திரன் இவர் பிரதமர் பதவியை அதிக நாட்கள் அனுபவிக்க விடவில்லை.

சூரியன் திக் பலம்

சூரியனும், சந்திரனும் இணைந்து அதில் சூரியன் திக் பலம் பெற்று இருந்ததால் புத்தி கூர்மையுள்ள வனாய் இருப்பார்.ஜாதகர் சிறந்த நிர்வாகியாகவும் , செல்வம், புகழ், மக்களால் பாராட்டும் தலைவராகவும் இருப்பார்கள்.

10ல் சூரியன் ,சந்திரன் புதன் சேர்க்கை

திரு.லால்பகதூர் சாஸ்திரி அவர்கள்.ஜாதகத்தில் 10-ல் சூரியனும், சந்திரனும் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்திருக் கிறர். நேர்மையான அரசியல் வாதியாக பாரதப் பிரதமர் பதவியை வகித்தார்.

அதிகார திரிகோணம்

திரு.லால்பகதூர் சாஸ்திரி அவர்கள்.ஜாதகத்தில் திரிகோண ஸ்தானங்கள் ஆன 5ல் குருவும் 9ல் செவ்வாயும் அமைந்தது ஏழை குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் பிரதமராக இருக்க முடிந்தது .

2ம் அதிபதி சனி 2ல் ஆட்சி தேனு யோகம் :

ஜாதகத்தில் 2 ஆம் அதிபதி சுபர் சேர்கை அல்லது சுபர் பார்வை பெற்றால் தேனு யோகம் உண்டாகிறது.

பலன் நல்ல வாக்கு வன்மை செல்வம் செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்ந்த கல்வி கற்றவர்களாகவும்,

பெரிய குடும்பம் , உணவு , வசதி , சுகவாழ்வு கிட்டும்




11ம் அதிபதி சுக்கிரன் 11ல் ஆட்சி சுபரிஜதா யோகம் :

வரவதிகம்,செல்வம் அடைவார்கள் வேத சாஸ்திரஞானம் உடையவரா கவும் , உலகத்தார் போற்றக்கூடிய வர் ஆக இருப்பர்.

லக்கினாதிபதி புத்தியில் பிரதமராக பதவி ஏற்பு

திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் 09-06-1964 அன்று பிரதம அமைச்சராக பதவி ஏற்றார். இது இவரின் 2ல் ஆட்சி பெட்ரா சனி தசையில் லக்கினாதிபதி குரு புக்தியில் நடைபெற்றது. ஜோதிட ரீதியாக ஜாதகருக்கு லக்கினாதி பதி தசை அல்லது புக்தி நடைபெ றும் பொழுது வாழ்வில் யோக பலன்கள் ஏற்படுகின்றன என்பதை அறிவோம்

10ம் அதிபதி புதன் அம்சத்தில் நீச்சம்

7 மற்றும் 10ம் அதிபதி புதன் அம்சத்தில் நீச்சம் மற்றும் கேந்திர ஆதிபத்திய தோஷம் பிரதமர் பதவி 19 மாதங்களே 10ல் சுபகிரஹமான புதன் உச்சம் பெற்றது கேத்திர ஆதிபத்திய தோஷத்தை தரும்.

10ம் அதிபதியான புதன் அம்சத்தில் நீச்சம் பெற்றதால் இவர் அதிக நாட்கள் பிரதமராக இருக்க முடிய வில்லை. திரு.லால்பகதூர் சாஸ்திரி தாஷ்கண்டில் (அப்போது சோவியத் யூனியனில்) திடீரென மரணமடைந்ததால் சாஸ்திரியின் பதவிக்காலம் பத்தொன்பது மாதங்கள் மட்டுமே நீடித்தது.

6ம் அதிபதி சுக்கிரன் அம்சத்தில் உச்சம் ராசியில் ஆட்சி

ஆகஸ்ட் 1965ல் இந்தியப் படைகளு டன் பாகிஸ்தான் ராணுவம் மோத லில் ஈடுபட்டது.திரு சாஸ்திரி சோவியத் யூனியனின் மத்திய ஸ்தத்தை ஏற்று 10 ஜனவரி 1966 அன்று பாகிஸ்தான் ஜனாதிபதி அயூப் கானுடன் தாஷ்கண்ட் பிரகடனத்தில் கையெழுத்திட்டார். ரஷ்யாவின் அழுத்தத்தால் சாஸ்திரி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட நேரிட்டது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இவர் நெஞ்சு வலி ஏற்பட்டு தாஸ்கண்ட்டில் உயிர் இழந்தார். 6ம் அதிபதி சுக்கிரன் அம்சத்தில் உச்சம் பெற்றதால் எதிரிகளின் தொந்தரவால் இவருக்கு சொற்ப ஆயுள் . 62 வயதில் உயிர் இழந்தார்,

மாரகாதிபதி புதன் திசையில் புதன் புக்தியில் மரணம்

11-1-1966 அன்று (தாஷ்கண்ட் பிரகடனத்தில் கையெழுத்திட்ட மறுநாளே) பிரதமர் சாஸ்திரி தாஷ்கண்டில் இறந்தார் . தனுசு லக்கினத்திற்கு மாரகாதிபதி (7ம் அதிபதி) புதன் ஆவார். மாரகாதிபதியான புதன் தசையில் மாரகாதிபதியான புதன் புக்தியில் அவருக்கு மரணம் ஏற்பட்டது. புதன் சூரியனின் சாரம் பெற்று நட்பு அடைந்துஇருந்தாலும் அவருக்கு மாரகத்தை தந்தது .

தேசிய தலைவர்

பிரதமர் சாஸ்திரி ஒரு தலைவராக ப் போற்றப்பட்டார் மற்றும் அவரது நினைவாக டெல்லியில் விஜய் காட் . நினைவு சின்னம் நிறுவப்ப ட்டது. அவரது மரணத்திற்குப் பிறகு, குல்சாரிலால் நந்தா மீண்டும் தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பேற்றார், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி சாஸ்திரிக்குப் பிறகு மொரார்ஜி தேசாய்க்கு எதிராக இந்திரா காந்தியைத் பிரதமர் பதவிக்கு தேர்ந்து எடுத்து.

ஜாதகமே காரணம்

ஏழை குடும்பத்தில் பிறந்த திரு லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதம மந்திரியாக உயர்வு பெற்றதற்கு அவருடைய ஜாதகம் தான் மூல காரணம். சூரியன் திக் பலம் . புதன் உச்சம் , ஆட்சி , மூல திரிகோணம் புத ஆதித்ய யோகம் , அமாவாசை யோகம் , அதிகார திரிகோணத் தில் ராஜ கிரஹங்கள் ஆன செவ் வாய் , குரு அமையப்பெற்றதும், பத்திர யோகம் , போன்றவைகளே காரணம் .

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

All react

No comments:

Post a Comment