ஜாதகத்தில் ரஜ்ஜு யோகம் என்றால் என்ன ?
லக்னம் அல்லது லக்னம் உட்பட அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் கேதுவை தவிர அல்லது அவற்றில் பெரும்பாலானவை
சர ராசியில் (அதாவது மேஷம், கடகம், துலாம்
மற்றும் மகரம்) இருந்தால் ரஜ்ஜு யோகம் உருவாகும்.
வெளிநாடு யோகம்
பொதுவாக, ரஜ்ஜு யோகம் அமையப்பெற்ற ஜாதகர்கள் இடம் விட்டு
இடம் செல்ல விரும்புவர், வெளி நாட்டில் சென்று
தொழில் அல்லது வேலை செய்து , பெயர், புகழ், செல்வம் பெறுவதைக் காணலாம். இந்த யோகம்
அமைந்த ஜாதகர்கள் , வெளி இடங்களுக்கு பயணம் செய்வது, விரைவான முடிவுகளை எடுப்பது மற்றும்
புதிய சூழலுக்கு எளிதில் மாற்றியமைக்க கற்றுக்கொள்வது போன்ற அசாதாரண குணங்களைக் கொண்டுள்ளனர்.
பரந்த மனப்பான்மை
இந்த ஜாதகர் பரந்த
மனப்பான்மை கொண்டவர்கள். இவர்கள் வாழ்க்கையில்
வெற்றி பெறுவதற்கு மிகவும் போடுவார்கள் சர ராசிகளில் லக்னம் அல்லது லக்னமும் விழும்
போது இந்த யோகம் சிறப்பாக அமையும்.
அபூர்வ யோகம் ரஜ்ஜு யோகம்
பெரும்பாலோருக்கு இந்த யோகம்அமைவது சிரமம்.எல்லாக் கிரகங்களும் சரராசிகளிலேயே அமர வேண்டும்.
லக்கினாதிபதியும் மற்றும் ஜீவனாதிபதியும் சர ராசியில்
மேஷம் கடகம் துலாம் மகரம் என்ற 4சரராசிகளில் ஏதாவது ஒன்றில்
லக்னாதிபதி மற்றும் 10ம் அதிபதி இருவரும் அமர்ந்து அவ்விடங்கள் லக்ன சுப இடமானால் ஜாதகர்
எந்த நேரமும் பிரயாணங்களிவேயே இருப்பார்.தொழில் நிமித்தம் வெளியூர் வெளிதேசமென பிரயாணப்பணிகளிலேயே
தொழில் முறையும் கலந்து விட்டதாகவே இருக்கும்.தொழிலும் சிறப்புற்று ஜாதகரும் தொழில்
சிறப்பு பெறுவார்
No comments:
Post a Comment