ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான
கிரகம், 'வித்யாகாரகன்' எனப்படும் புதன் கிரகம்தான்
ஒருவருடைய ஜாதகத்தில் புதன் மட்டும் வலுவாக இருந்தால் போதும், எப்பேர்ப்பட்ட
சூழ்நிலையிலும் அந்த ஜாதகர் தன்னுடைய அறிவின் மூலமாகத் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு
அடுத்தவர் துணையின்றி முன்னேறி விடுவார்.
எந்தச் சூழ்நிலையிலும் மனதைத் தளர
விட மாட்டார்கள். எத்தனைத் தோல்விகள் வந்தாலும், அவற்றிலிருந்து அனுபவங்களைக் கற்றுக்கொண்டு,
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுபவர்கள் புதனின் அருள் பெற்றவர்கள்தான்.
ஒருவர் சிறந்த பேச்சாளராகவும், பேச்சால் அடுத்தவர் மனதை மயக்குபவராகவும்
இருப்பதற்குப் புதனின் பலம் அவசியம்.
பெரிய வியாபாரிகள், மேடைப் பேச்சாளர்கள், பட்டிமன்ற நடுவர்கள், நகைச்சுவை
நடிகர்கள், அறிவுப்பூர்வமாக விவாதம் செய்பவர்கள், கணிதத் துறையில் நிபுணர்கள் உள்ளிட்ட
பலருக்கும் புதனின் அனுகிரகம் இருப்பதே காரணம்.
புகழ்பெற்று வரும் ஐ.டி.துறை எனப்படும் மென்பொருள் சம்பந்தப்பட்ட
துறைகளைக் குறிப்பவரும் புதன்தான். பெரும்பாலான மென்பொருள் மற்றும் கணினித் துறையினர்
புதன் மிதுனம், கன்னியில் வலுப்பெற்ற நிலையில் பிறந்தவர்கள்தான்
எழுத்தை ஆள்பவன் புதன்தான் என்பதால், ஒருவர் எழுத்தில் ஆளுமை செய்வதற்குப்
புதனின் தயவு மிகவும் அவசியம். புதன் வலுப் பெற்றவர்கள்தான், தங்கள் மனதில் நினைக்கும்
விஷயத்தை அப்படியே எழுத்தில் கொண்டு வருவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
புதன் ஓர் இரட்டை நிலை கிரகமாவார். ஒரு ஜாதகத்தில் புதன் நீச நிலை
பெற்று பங்கமாகி, நீச பங்க நிலையில் மீனத்தில் இருந்தால், சில குறிப்பிட்ட நிலைகளில்
அந்த நபருக்குக் கல்வியில் தடை ஏற்பட்டு பள்ளியிறுதி வகுப்பு வரை மட்டுமே படிக்கும்
வாய்ப்பு கிடைக்கும்.
புதன் வலிமை பெறுவதற்கான விதிகள்:ஞானிகள் அருளிய மூலநூல்களில் படித்து
பல ஜாதகங்களில் ஆராய்ந்த அனுபவத்தின் அடிப்படையில் பொதுபலனாக குறிப்பிட்டுள்ளேன்.
. அதன் வலிமை படிநிலைகளில் குறிப்பிட்டுள்ளேன்.
புதன் வலிமை பெறுவதற்கான விதிகள் சாராவளி, பராசர சம்ஹிதா, உத்தரகாலாமிர்தம்,
ஹோராசாரம், பலதீபிகை, பூர்வபராசர்யம், சர்வார்த்த சிந்தாமணி போன்ற நூல்களில் கூறப்பட்டவை
1. புதன் கேந்திரங்களில் ஆட்சி அல்லது உச்சம் பெறுவது.
2. லக்னத்தில் திக்பலம் பெறுவது.
3. உச்சமாகாமல் கேந்திரங்களில் வக்கிரமாவது.
4. 1,4,8 ல் புதன் சூரியன் சேருவது. அதில் ஒருவர் ஆட்சியோ உச்சமோ
பெற்றால் ராஜயோகம் தரும்.
5. சந்திர கேந்திரத்தில் புதன் இருப்பது.
6. கேந்திர கோணங்களில் புதன் மற்றும் சூரியன் சேர்ந்திருப்பது.
7. புதனின் நண்பர்களான சுக்கிரன் சனி பார்வையானது தொழில்துறைக்கு
நிபுணத்துவம் தரும்.
8. புதனும் சூரியனும் நெருக்கமாக சேர்ந்திருந்தால் நிபுணயோகம். இவர்கள்
கணினி, பங்குசந்தை, தொழிலதிபர், ஜோதிடர் என புகழ்பெறுவார்.
9. புதன் உபய லக்னத்திற்கு கேந்திரங்களில் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால்
பத்ரயோகம் என்ற பஞ்சமகா புருஷயோகத்தில் ஒன்று ஏற்படுகிறது. இது புதனின் காரகத்துவத்தில்
மாபெரும் புகழை தரும்.
10. 14,8, ல் புதன் சூரியன் இருந்து இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம்
பெற்றால் மிகப்பெரிய பதவியை படிப்படியாக அடையும் ராஜயோகம் உண்டாகும். மிகப்பெரிய தொழிலதிபராக
இருப்பார்கள்.
என்டி ராமராவ் அவர்களுக்கு
புதன் சூரியன் எட்டில் ,புதன் வர்க்கோத்தம்ம். புஷ்கராம்சம்.
இரண்டாவது உதாரணம் அமிதாப் பச்சன் அவர்களது ஜாதகத்தில் எட்டில் புதன் உச்சம்+ சூரியன்
சேர்க்கை.
11. புதன்கிழமை
, புதஹோரையில் பிறப்பவர்களுக்கும், புதன் வர்க்கோத்தம பலம் பெற்றவர்களுக்கும்
புதன் யோகமளிக்கிறது.
மிதுன லக்னத்தில் பிறந்த கணிதமேதை ராமானுஜம் ஜாதகம் கணித ஆய்வாளருக்கு உதாரணம்.மிதுன லக்னத்தில் பிறந்த சுந்தர்பிச்சை ஜாதகத்தில் புதன் வலிமை பெற்றிருப்பதை காணலாம்.
கலைஞர் வாய் பேச்சில் வல்லவர்.அவர் ஜாதகத்தில் 10ல் தனித்த புதன்.
சனியின் பார்வை புதன் மீது. அறிவிலும் விவாதத்திலும் கலைஞரை வெல்ல ஆள் இல்லை!
ஜெ வின் கட்டத்தில் 9 ல் புதன்&சூரியன். படிக்காத மேதை!
மாண்புமிகு மோடி & கலாம் ஐயா கட்டத்தில் கன்னி புதன் உச்சத்தில்,
உடன் சூரியனும் கேதுவும் அதே கன்னியில். அவரவர் துறையில் திறமைசாலிகள்.
பொதுவாக ராகு மகரத்திலும்
கேது உயர்ந்த ஞானத்தை தருவார்கள். வடலூர் வள்ளலார் ஜாதகத்திலும்
எழுத்தாளர் சுஜாதா ஜாதகத்திலும் ராகு மகரத்திலும் கேது கடகத்தில் அமைந்து இருப்பது
தான் இவர்கள் அதிக ஞானம் பெற்றார்கள் .
கவியரசருக்கும் எழுத்தாளர் சுஜாதாவுக்கும் குரு பார்வை பெற்ற புதன்.
வளமான கற்பனை.
No comments:
Post a Comment