Wednesday, June 7, 2023

ஜாதகத்தில் பித்ரு தோஷம் எப்படி கண்டறிவது ? பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகா...



பாப தொழில் செய்பவர்கள்

வட்டித்தொழில், லஞ்சம், திருட்டு ,பொய்பத்திரம் எழுதுதல், வழிப் பறி, பொதுமக்கள் பணத்தை அபகரித்தல் , குற்றவாளிகளை காப்பாற்றும் வழக்கறிஞர்கள் தலைமுறைகள் வறுமையில் இருப்பதையும் அகால மரணங்கள் ஏற்படுவதையும் அனுபவத்தில் காண்க),பெண்களுக்கு துரோகம் செய்து சாபம் பெறுதல்

என்ன மாதிரியான தடைகள்

கல்வித்தடை, வேலையின்மை, தகுந்த வருமானமின்மை ,திருமண த்தடை, குழந்தையின்மை, வயோ திகத்தில் கஷ்டம், நற்கதியின்மை, என பலவகை துன்பம் வாய்க்கும்.



பித்ரு தோஷம் ஏற்படுத்தும் கிரஹ நிலைகள்

1.சூர்யன் மற்றும் சந்திரன் உடன் ராகு கேது நின்றாலும் பித்ரு தோஷம் /சாபம் ஏற்படும்.

2.ஐந்தாம் வீட்டில் கெட்ட கிரகங் களான சனி, இராகு, செவ்வாய், கேது இவர்கள் இருந்தால் உங்களின் முன்னோர்களின் பாவமோ சாபமோ உங்களைத் தொடர்கி ன்றது என கூறலாம்.

.ஐந்தாம் அதிபதி திதிசூன்ய ராசியில் அமைவது,

குடும்பத்தில் எல்லா குழந்தைகளுக் கும் சூரியன் நீசமாக இருப்பது,

8,10ல் ஏகப்பட்ட கெட்ட கிரகங்கள்,

செவ்+சூரி கிரக சேர்க்கை ,குடும்ப த்தில் உள்ள எல்லா குழந்தைகள் ஜாதகத்திலும் இருப்பது,

சனி+ராகு சேர்க்கை,

ஏகப்பட்ட நீச கிரகங்கள் இருப்பது, யோகமில்லா பரிவர்த்தனைகள் ஜாதகத்தில் காணப்படுவது .

ஓருவரின் ஜனன ஜாதகத்தில், பித்ரு தோஷ

சிம்மத்தில் சனி இருப்பது அல்லது கும்பத்தில் சூரியன் நிற்பதும் கூட ஒருவகையில் ஜாதகரின் குடும்பத்தில் பித்ரு காரியங்கள் தடைபட்டு உள்ளதை சுட்டிக் காட்டுவதாகும்

பித்ரு காரகரான சூரியன் , ராகுவுடன் 5 ஆம் வீட்டிலோ அல்லது 9 ஆம் வீட்டிலோ இணைந்திருப்பது.

ராகு தனித்து 5 ஆம் வீட்டிலோ அல்லது 9 ஆம் வீட்டிலோ இருப்பது,

மேலும் சூரியன் / தேய்பிறை சந்திரன் / செவ்வாய் / புதன் / ராகு மற்றும் கேது , 5-ஆம் வீட்டில் இருப்பது.

5 ஆம் வீட்டு அதிபன் நீச்சம் அடைந்தோ அல்லது வலிமை குன்றியோ இருப்பது.

5 ஆம் வீட்டு அதிபன் பாவியுடன் இணைந்தோ அல்லது பாவி வீட்டில் இருப்பதோ,

நீச்சம் பெற்ற கிரகங்கள் 5 ஆம் வீட்டிலோ அல்லது 9 ஆம் வீட்டிலோ இருப்பது.

5 ஆம் வீட்டு அதிபன் நவாம்சத்தில் வலிமை குன்றி இருப்பது.

5 ஆம் வீட்டு அதிபதி திதி சூனிய ராசியால் பாதிப்பது.

இவை ஒரு சிலவே, இதிலும் சில இயற்கை சுபர் அல்லது லக்கின சுபரால் தொடர்பு ஏற்படுகையில் தோஷமற்று போக வாய்ப்புள்ளது.

சரியான ஜோதிடரை நாடி அறிந்து கொள்வது நன்மை பயக்கும்.

சூரியன் உடன் ராகு கேது நிற்க அல்லது தொடர்புபடின், பித்ரு தோஷத்தை தருவதுடன், தந்தை உடனான கருத்து வேறுபாடுகள், நிர்வாகம் சார்ந்த பிரச்சினை, சரியான தீர்வு எடுக்க முடியாமை, ஆரோக்கியத்தில் குறை, பார்வை குறைபாடு

சந்திரன் உடன் ராகு கேது சேர அல்லது தொடர்பு பெற, இதுவும் ஒருவகையில் பித்ரு மாத்ரு தோஷமாக சொல்லப்படுகிறது. தாயுடன் கசப்பு தன்மை தருவது, மனநிம்மதி இல்லாமை, மனசஞ்சலம் தருவது, மனநலம் பாதிக்கப்படுவது,



சூரிய பகவான் :

பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதியின் பலனை நம்மிடம் இருந்து பெற்று பித்ரு தேவதைகளின் மூலம் மறைந்த நமது மூதாதையர்களிடம் சேர்ப்பவர் சூரியபகவானாவார். தினமும் நீராடியவுடன் கிழக்கு திக்கை நோக்கி சூரிய பகவானை வணங்குவதும், புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் நீரில் நின்று சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு உகந்தது.

பித்ரு தோஷ நிவாரணம் / பரிகாரம்

ராகு 9 ஆம் வீட்டில்  இருந்தால் கடுமையான பித்ரு தோஷம் ஏற்படும். எடுத்த அனைத்து காரியங்களும் தடை ஏற்படும். பெரியவர்களின் சாபங்கள் இருக்கும். தந்தை நலம் பாதிக்கப்படும். உயர்கல்வி படிக்க இயலாது. ஆன்மீக ரீதியில் புண்ணிய காரியங்கள் செய்வார்கள். சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை.

பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம் சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும்

. இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள்.

விஷ்ணு பகவான்

ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.

பித்ரு லோகம் என்பது சூரியனுக்கு அப்பால், பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும், வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர்.

 அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றை போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும்.

 இதனால் மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி சந்ததியரை வாழ்த்துவார்கள். அமாவாசையன்று தங்களுக்கு வழங்கப்படும் எள் தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பித்ருக்கள் காத்து நின்று கொண்டிருப்பார்களாம்.

 

பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தை அமாவாசை சிறந்த நாளாகும். அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர்களை நினைத்து திதி கொடுக்கலாம்.

தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு போன்ற திருத்தலங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்று சூரிய வழிபாடு செய்வது அவசியம்.

 இறந்தவர்களின் நாள், தேதி தெரியாதவர்களும், வருடத்தின் 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம்.

இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தை தீர்க்கவேண்டும்.

 இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். அன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்ய வேண்டும்.

 

 மறைந்த தாய், தந்தை படங்களுக்கு மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான           உணவுகளை படைத்து வணங்க வேண்டும். அன்று காகம் வடிவில் மூதாதையர்கள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பதும் முக்கியம்.


No comments:

Post a Comment