ஒருவர் அயல் நாட்டிற்கு சுற்றுலா சென்று
தன்னுடைய பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும்? தோராயமாக அவர்
எவ்வளவு நாட்களில் திருப்பி வரலாம்?
வெளிநாட்டுக்கு சென்ற ஒருவர் தன்னுடைய
பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டால் கவலைப்பட வேண்டியது இல்லை. ஒவ்வரு நாட்டிலும் இந்தியாவிற்கான
தூதரகம் இருக்கும். அதை அணுகினால் அவர்கள் இந்தியாவிற்கு மாத்திரம் திரும்ப வர ஒருமுறை
மட்டும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை வழங்குவர்.
அதற்கு பெயர் எமர்ஜென்சி சர்டிபிகேட்
அது வெள்ளை நிறத்தில் இருக்கும் . அது ஒரு முறை மட்டுமே பயன்படுத்த இயலும். அதற்கும்
குறிப்பிட்ட காலகெடு உண்டு. குறிப்பிட்ட காலகெடுவுக்கு பின்னர் காலாவதி ஆகிவிடும்.
அந்த நாட்களுக்குள் இந்தியா திரும்பி விட வேண்டும். இந்தியர் எமர்ஜென்சி சர்டிபிகேட்டை
பயன்படுத்தி இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிற்கும் பயணம் செய்ய முடியாது.
இதற்கான செலவு தொகையை நீங்கள் தான்
செய்ய வேண்டும். வெளிநாட்டில் அந்தந்த நாட்டைப் பொறுத்து எமர்ஜென்சி சர்டிபிகேட்டை
பெற
சில நாட்கள் ஆகும். இந்தியா திரும்பியவுடன்
பாஸ்போர்ட் அலுவலகத்தில் அந்த வெள்ளை பாஸ்போர்ட்டை சமர்ப்பித்து புதிதாக பாஸ்போர்ட்டை
பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment