கடகம்:
திருநள்ளாறு சனி பெயர்ச்சி
சனீஸ்வர
பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி
2023 மாலை 5-20 மணிக்கு மகர ராசியில் இருந்து
அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.
கடக
ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால் அமைய
இருக்கும் கிரஹ நிலைகள்
கோச்சாரத்தில்
கடக ராசிக்கு சனி அஷ்டமஸ்தானமான 8ம் இடத்திற்கு வருவதும் , ராகு 9ல் இருப்பதும்
கேது 3 ல் இருப்பதும் குரு 10ல் இருப்பதும் வருகின்ற 1 மே 2024 முதல் 11ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும்
நன்மை தரும். சனி 8ல் கோச்சாரத்தில் இருப்பது
கடினமான பலன்களை கடக ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். ராகு
9ல் இருப்பதும் குரு 10 ம் இடத்தில் இருப்பதும் சுமாரான பலன்களை தரும், ஆகையால் கடக ராசி நேயர்கள்
சனி ,ராகு மற்றும் குரு பிரீத்தி செய்வது
நன்மை தரும்.
வெறும் 20 சதவீதம்
கடக ராசி நேயர்கள் வெறும் 20 சதவீதம் யோகமான பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள். கடக ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மை மற்றும்
தீய பலன்கள் கலவையாக நடக்க இருக்கிறது. .
கடக ராசி
நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால்
யோகமான பலன்கள் நடைபெறும். மாறாக தசா புக்தி
சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய
பலன்களே நடைபெறும்.
மேலும்
பாதகாதிபதி , மார்காதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும் இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான
பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.
கடக ராசிக்கு சனிபகவான் இதுநாள் வரை ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார் இனி
எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். அகப்பட்டவனுக்கு அஷ்டம சனி என்று கூறுவார்கள்.
இந்த கால
கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும்
அவற்றை சமாளிக்கும் திறன் உங்களுக்கு ஏற்படும்.. எட்டாம் வீட்டு அதிபதி சனி
எட்டில் ஆட்சி பெற்று அமர்வது சரள யோகம் ஆகும்.
நீண்ட ஆயுள் , ஆரோக்கியமான உடல் அமைப்பு , காரியங்களில் வெற்றி ஆகியவை உண்டாகும். எதிர்பாராத பணவரவு வந்து கடக ராசி நேயர்களை திக்குமுக்காட
வைக்கும்.
ஏப்ரல்
2024 வரை கடக ராசிக்கு குரு 10ம் வீட்டில்
சஞ்சரிப்பார். அஷ்டம சனி மற்றும் குரு 10ல்
இருப்பது டிக்ஜாம் புயலை போல உங்களை அல்லாட வைக்கும்.
கடன் வாங்கி
புதிய பணமுதலீடுகளை செய்ய வேண்டாம். புதிய
தொழில் முயற்சிகள் மே 2024 க்கு பிறகு மேற்கொள்ளலாம். நீங்கள் பார்த்து வருகின்ற வேலையை
விடும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை
யோசிக்கவும். மற்றவர்கள் கூறும் பேராசை வார்த்தைகளை
நம்ப வேண்டாம்.
பங்குச்சந்தை
முதலீடுகளில் ஈடுபட வேண்டாம்.. இருக்கிறதை வைத்துக்கொண்டு மனநிறைவு உடன் வாழுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.
கடக ராசி
நேயர்களுக்கு அஷ்டம சனியும் மற்றும் குரு 10 ல் கோச்சாரத்தில் இருப்பதும் மிகவும் சோதனையான
காலம் ஆகும். சிலருக்கு வேலை போயிருக்கும். வேலையில் பல சங்கடங்களை சந்தித்து இருப்பீர்கள்.
அவமானங்களையும் சங்கடங்களையும் சந்தித்து இருப்பீர்கள். தொழிலில் பல கஷ்டங்களையும்
சங்கடங்களையும் சந்தித்து இருப்பீர்கள்.
உதாரணமாக
ஒரு மிக உயரிய பதவியில் இருந்த ஒரு தமிழ்நாடு காவல் அதிகாரி சக பெண் அதிகாரியிடம் தவறாக
நடந்து கொண்டதால் பதவியை இழந்து தண்டனை பெற்றுள்ளார். இன்னொரு உயர் பதவி வகித்த காவல்
அதிகாரி ஓய்வு பெற்றபின் தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தின் தலைவராக நியமிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தாலும் அதனை தமிழ்நாட்டு ஆளுநர்
நிராகரிக்கிறார். அதாவது கடக ராசி நேயர்களுக்கு இதுபோன்ற சோதனையான காலகட்டத்தை சந்திக்க
நேரிடலாம். ஆகையால் மிக்க கவனம் தேவை.
ஆயினும்
வருகின்ற 1 மே 2024 முதல் 11ம் இடத்தில் தன
காரகர் குரு அமர இருப்பது கடக ராசி நேயர்களுக்கு
மிகவும் நன்மையான பலன்களை தரும். தொழில் அல்லது வேளையில் இருந்த பிரச்சனைகள்
நீங்கி யோகமான பலன்கள் ஏற்படும்.
திருமணத்திற்கு
காத்திருப்பவர்கள் தங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. புதிய தொழில் தொடங்கும் எண்ணம்
இருந்தால் அதனை சிறிது நாளைக்கு ஒத்திப் போடுங்கள். புதிய முதலீடு எதையும் மேற்கொள்ளாதீர்கள். பங்கு வர்த்தகம்
செய்வதிலும் கவனம் தேவை.
மாணவர்கள்
கல்வியில் நன்றாக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிக்க கவனம்
தேவை.
பரிஹாரம்
சனிக்கிழமைகளில்
சனி ஹோரையில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடுங்கள் அஷ்டம
சனி பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும். தினமும் காக்கைக்கு எள் மற்றும்
நல்லஎண்ணெய் கலந்த சாதம் வைத்து வரவும்.
கடக ராசிக்கு
ராசிக்கு ராகு 9 ல் இருப்பதும் குரு வருகின்ற 1 மே 2024 வரை 10ம் இடத்தில் தனகாரகர் குரு அமர்ந்து இருப்பதும் தீய பலன்களை கடக ராசி
நேயர்கள் அனுபவிக்க நேரிடும். ஆகையால் உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில்ராகு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி சனிக் கிழமைகளில் வழிபடலாம்.
குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும்
.
No comments:
Post a Comment