Wednesday, December 20, 2023

திருநள்ளாறு வாக்கிய விருச்சிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026 : க...


விருச்சிகம்: சனி பெயர்ச்சி

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5 மணி 23 நிமிடத்திற்கு  மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி

விருச்சிக   ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில்  விருச்சிக ராசிக்கு  சனி  நான்காம்    ஸ்தானமான  4ம் இடத்திற்கு வருவதும் , ராகு 5ல் இருப்பதும் கேது 11ல் இருப்பதும் குரு  6ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   7ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் நன்மை மற்றும் தீயபலன்கள் கலவையாக  நடைபெறும்.. சனி 4ல்  கோச்சாரத்தில் இருப்பது யோகமான பலன்களை   விருச்சிக   ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். ராகு 5ல் இருப்பதும் குரு 6 ம்  இடத்தில்  இருப்பதும்  நன்மையான  பலன்களை தர தடை ஏற்படுத்தும்., ஆகையால் விருச்சிக  ராசி நேயர்கள் ராகு மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.



விருச்சிக    ராசி நேயர்கள்   45 சதவீதம்  யோகமான பலன்களை மட்டும்  அனுபவிக்க இருக்கிறார்கள்.  விருச்சிக  ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மையான பலன்களே அதிகம்  நடக்க இருக்கிறது.

விருச்சிக  ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே  கலவையாக நடைபெறும்.

மேலும் பாதகாதிபதி , மாரகாதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும்  இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.

சனி ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின், கோட்சார ரீதியாக கெடுபலன் தரும் ஸ்தானத்தில் இருப்பினும் அது அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.



விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடந்த ஒரு தசாப்தமாக  கஷ்டமான காலகட்டம் . ஏழரை சனி ஒருவழியாக முடிந்ததே என்று நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில்  சமீபத்தில் நடந்த ராகு கேது பெயர்ச்சியின் பொழுது ஜென்ம கேதுவால் பலசங்கடங்களை சந்தித்தீர்கள். இப்போது அர்த்தாஷ்ட சனிகாலம் வரப்போகிறது. அர்த்தஷடம சனிபகவான்  சங்கடங்களை தருவாரோ என்று அஞ்ச  வேண்டாம். நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் ஜலதி யோகம்  அமையப்பெற்றதால் அதிக சங்கடங்கள் இருக்காது. மேலும் சனி பகவான் 4ல் ஆட்சி பெற்றதால் சச மகா யோகம் அமையப்பெறுகிறது.. சனியின் பத்தாவது பார்வை விருச்சிக ராசி மீது விழுவதால் உங்கள் தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

 பணியில் இருப்பவர்களுக்கு உத்யோக உயர்வு  கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். வீடு, கார் என சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அதே நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த நேரிடும். நோய்களிலிருந்து பூரணமாக குணம் அடைவீர்கள்.

 தாயாரின்  உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை. எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும்.

திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தங்கள்  துணையை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அதனை சிறிது நாளைக்கு ஒத்திப் போடுங்கள். புதிய முதலீடு எதையும் மேற்கொள்ளாதீர்கள். பங்கு வர்த்தகம் செய்வதிலும் கவனம் தேவை.  மாணவர்கள் கல்வியில் நன்றாக கவனம் செலுத்த வேண்டும்.

வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். மனப் பதட்டம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால் அதனை தவிர்ப்பது நல்லது.



பரிஹாரம்

உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில் ராகு  பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி சனிக் கிழமைகளில் வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும் .ஸ்ரீ ஆஞ்சநேயரை  தினமும் வழிபட்டு வருவது நல்லது.

தினமும்  வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வணங்க கவலைகள் நீங்கும். உங்கள் கஷ்டங்கள்  ஒரு முடிவுக்கு வரும்.

 


No comments:

Post a Comment