Friday, December 22, 2023

திருநள்ளாறு வாக்கிய மீனம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026: குறித்த ...


                மீனம்: விரைய சனி

சனி பெயர்ச்சி பலன்கள் 2023  :

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5 மணி 23 நிமிடத்திற்கு  மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

மீன  ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில்  மீன  ராசிக்கு  சனி  அயன , சயன , போக ஸ்தானமான  12ம் இடத்திற்கு வருவதும் , ராகு 1ல் இருப்பதும் கேது  7ல் இருப்பதும் குரு  2ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   3ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பதுசற்று கடுமையான பலன்களே  நடைபெறும்.. சனி 12ல்  கோச்சாரத்தில் இருப்பது யோகமான பலன்களை   மீன  ராசி நேயர்கள் அனுபவிக்க தடை ஏற்படுத்தும்.. கேது  7ல் இருப்பதும் குரு 3 ம்  இடத்தில்  இருப்பதும்  நன்மையான  பலன்களை தர தடை ஏற்படுத்தும்., ஆகையால்   மீன  ராசி நேயர்கள் சனி , ராகு கேது  மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.



மீன    ராசி நேயர்கள்   20% யோகமான பலன்களை மட்டும்  அனுபவிக்க இருக்கிறார்கள்.   மீன  ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மை மற்றும் தீமையான  பலன்களே அதிகம்  நடக்க இருக்கிறது. தீய பலன்களும் இருக்கும்.

மீன  ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே  கலவையாக நடைபெறு மேலும் பாதகாதிபதி , மாரகாதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும்  இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.

சனி ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின், கோட்சார ரீதியாக கெடுபலன் தரும் ஸ்தானத்தில் இருப்பினும் அது அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

மீன ராசிக்கு சனி பகவான்  12,ஆம் வீட்டில்  பயணம் செய்வது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. 2023 ஆம் ஆண்டு முதல் மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு விரைய சனியாக ஏழரை சனி காலம் தொடங்குகிறது. இந்த கால கட்டத்தில் பணத்தை  சேமித்து வைத்திருக்காமல்  சுப சிலவுகள் மற்றும்  சொத்துக்களில் முதலீடு செய்யலாம். ராசிக்கு 12ம் அதிபதியான சனி பகவான் 12ல் ஆட்சி பெற்று காணப்படுவது  விமல யோகம் ஆகும். இதனால் மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். 



சனி பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டிற்கு அதிபதி. விரைய சனி காலமாக இருப்பதால் லாப சனி காலத்தில் சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு செய்வது நல்லது. அது தவிர சொத்துக்களாக வாங்கி முதலீடு செய்வது நல்லது.

மீன ராசி நேயர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வும்  ஒரு சேர கிடைக்கும். சிலருக்கு விரும்பிய  இடத்திற்கு  அனுகூல இடமாற்றம் கிடைக்கும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் மீன ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறார்கள்.

 பணவரவுசரளமாக  இருக்கும். செய் தொழில் வளர்ச்சி பெறும். திருமண தடைகள் நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சிலர் வெளிநாடு சென்று மேற்கல்வி கற்க , தொழில் செய்ய , வேலையில் சேர வாய்ப்பு கிடைக்கும். வருமானம் பெருகுவதால் சேமிப்பு நிறைய உண்டாகும். கடன்களை தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்,

பரிஹாரம்

உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில்  ராகு பகவானுக்கு சனி கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். கேது பகவானுக்கு செவ்வாய் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும்.



சனி பகவானுக்கு சனி கிழமைகளில் நல்லெண்ணெய் எள் தீபம் ஏற்றி வழிபடவும். ஸ்ரீ காலபைரவரை தேய்பிறை அஷ்டமிகளில் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் வழிபடலாம்.

 சனிக்கிழமை தோறும் காகத்திற்கு உணவு வைப்பதன் மூலம்  விரய சனியால்  ஏற்படும் சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் இருக்கும் வாலீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

 


No comments:

Post a Comment