திருநள்ளாறு
சனி பெயர்ச்சி எப்போது ?
திருநள்ளாறு
சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம்
தேதி 2023 மாலை 5-20 மணிக்கு மகர ராசியில்
இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.
மகர ராசியில்
இருந்து கும்ப ராசிக்கு
நீதியின் கடவுளான சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிக்கக்கூடியவர். ஒரு ராசியில் சனி பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிக்கும் அதற்கு முன் மற்றும் பின் உள்ள ராசிகளுக்கு ஏழரை சனியாக அமர்ந்திருப்பார். சனி பகவான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும். எனவேதான் ஜோதிடத்தில் சனியைபோல் கொடுப்பவனும் இல்லை கெடுப்பவனும் இல்லை என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் கர்ம காரகனியான சனி பகவான் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது. எனவே சனிபகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
யாருக்கு என்ன சனி?
இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம் லாப சனி, ரிஷபம் தொழில்
சனி, மிதுனம் பாக்ய சனி, கடகம் அஷ்டமத்து சனி, சிம்மம் கண்டச்சனி, கன்னி ருண ரோக சத்ரு
சனி, துலாம் புண்ணிய சனி, விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி, தனுசு தைரிய சனி,மகரம் பாத
சனி, கும்பம் ஜென்ம சனி, மீனம் விரய சனி என பலன்கள் கிடைக்கும்.
ஏழரை சனி:
மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி
காலமாகும். தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி
காலமான 30 மாதமும் பாதிப்புகள் குறைய கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம்,
மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். சனி சாந்தி பூஜை செய்ய வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால் அமைய இருக்கும் கிரஹ நிலைகள்
கோச்சாரத்தில்
மேஷ ராசிக்கு சனி லாபஸ்தானமான 11ம் இடத்தில
இருப்பதும் , ராகு 12ல் இருப்பதும் கேது 6 ல் இருப்பதும் குரு ஜென்ம ராசியில் இருந்தாலும்
வருகின்ற 1 மே 2024 முதல் தனஸ்தானமான 2ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும்
சிறப்பு. சனி 11ல் கோச்சாரத்தில் இருப்பது
அற்புதமான பலன்களை மேஷ ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். கேது 6ல் இருப்பதும்
குரு 2ம் இடத்திற்க்கு வர இருப்பதும் அற்புதமான பலன்களை யோகமான பலன்களை மேஷ ராசி நேயர்கள்
அனுபவிக்க இருக்கிறார்கள்.
மேஷ ராசி
நேயர்கள் 80% யோகமான பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள். எதிர்பாராத தன லாபங்கள் மற்றும்
செல்வ சேர்க்கை உண்டாகும் .
மேஷ ராசி
நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால்
யோகமான பலன்கள் நடைபெறும். மாறாக தசா புக்தி
சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய
பலன்களே நடைபெறும்.
2024ஆம் ஆண்டு மே 1ஆம் தேதியன்று குரு
பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.
இரண்டரை
ஆண்டுகள் லாப சனி காலம் என்பதால் பலன்களும்
நன்மைகளும் அதிகரிக்கும் கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் மேஷ ராசியின் அஸ்வினி
நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் யோகத்தை தரப்போகிறார்.
சனி பகவான் மேஷ ராசிக்கு 10 மற்றும் 11ம் அதிபதி,
11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்யப்போகிறார்.
2024 ஆண்டு ஒரு பிரகாசமான ஆண்டாக மேஷ ராசி நேயர்களுக்கு இருக்க போகிறது..
பல தடைகளை
உடைத்து வெற்றி கான்பீர்கள். நீங்கள் எண்ணியது
கைகூடும் தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு 2024ஆம் ஆண்டு முதல் பிரகாசமாக இருக்க போகிறது. வேலையில் இருப்பவர்கள்
கூட சொந்த தொழில் தொடங்குவீர்கள். உத்யோக உயர்வை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு
நல்ல செய்தி தேடி வரும். வேலையில் இருப்பவர்கள்விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.
புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும்.
இது நாள்
வரை ஒரு சில மேஷ ராசி நேயர்கள் குறைந்த சம்பளத்தில் பட்டு வந்தார்கள். இனி கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை தேடி வரும். எதிர்பாராத பதவி உயர்வு தேடி வரும்.
அலுவலகத்தில் உயரதிகாரிகளின் உங்களுக்கு உதவுவார்கள். உங்களுக்கு பல இடைஞ்சல்களையும்
கொடுத்து வந்த உயரதிகாரி இடம் மாறி செல்வதால் உங்களுக்கு வேலையில் நல்ல சூழ்நிலை காணப்படும்.
மேஷ ராசிக்கு
சனி பகவான் லாபாதிபதி ஆவார் . கும்பத்தில் சனி
சனி சஞ்சாரம் செய்யும் பொழுது எப்போதுமே
அதிக லாபத்தை தான் தருவார். அதிக வருமானத்தால் பொருளாதார நிலை உயரும். பண வருமானம்
அதிகரிப்பதால் உங்கள் சேமிப்பு உயரும்.
2024ஆம் ஆண்டு முதல் மேஷ ராசி நேயர்கள் ராஜ யோகமான வாழ்வை அடையப்போகிறார்கள். அனைத்திலும் வெற்றி பெற்று அமோகமாக வாழப்போகிறீர்கள்.
திருமண
சுப காரியங்கள் கைகூடும். வீட்டில் சுப செலவுகள் அதிகரிக்கும்.
2024 ஆண்டில் இது நாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பெற்ற குழந்தைகளால்
பெருமை ஏற்படும். அனைத்து தடைகளைத் தாண்டி வாழ்வில் வளம் ஏற்படும்.. உடல் ஆரோக்கியத்தில்
சற்று கவனம் தேவை.
பரிஹாரம்
மேஷ ராசிக்கு ராகு பகவான் 12ளிலும் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் , உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில் ராகு பகவானுக்கு சனி கிழமை தோறும் மற்றும் குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும்
No comments:
Post a Comment