ரிஷபம்:
திருநள்ளாறு சனி பெயர்ச்சி
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், வருகின்ற
டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023 மாலை 5-20
மணிக்கு மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து
அருள உள்ளார்.
ரிஷப ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால் அமைய இருக்கும் கிரஹ நிலைகள்
கோச்சாரத்தில்
ரிஷப ராசிக்கு சனி தொழில் மற்றும் கர்ம ஸ்தானமான 10ம் இடத்தில
இருப்பதும் , ராகு 11ல் இருப்பதும் கேது 5 ல் இருப்பதும் குரு 12ல் இருப்பதும் வருகின்ற 1 மே 2024 முதல் ஜென்ம ராசியான 1ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும்
நன்மை தரும்.
சனி 10ல் கோச்சாரத்தில் இருப்பது அற்புதமான பலன்களை ரிஷப
ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். கேது 5ல் இருப்பதும் குரு 12 ம் மற்றும்
1ம் இடத்திற்க்கு வர இருப்பதும் சுமாரான பலன்களை தரும், ஆகையால் ரிஷப ராசி நேயர்கள் கேது மற்றும் குரு பிரீத்தி செய்வது
நன்மை தரும்.
ரிஷப ராசி நேயர்கள் 85 சதவீதம் யோகமான பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள். எதிர்பாராத
தன லாபங்கள் மற்றும் செல்வ சேர்க்கை உண்டாகும் ரிஷப ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் யோகமான பலன்கள் நடக்க இருக்கிறது. .
ரிஷப ராசி
நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால்
யோகமான பலன்கள் நடைபெறும். மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம்
பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே நடைபெறும்.
ரிஷப ராசிக்கு
பத்தாம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார் சனி பகவான். பத்தாம் வீடு தொழிலை மற்றும்
உங்கள் கர்மாவையும் உணர்த்தும்..ரிஷப ராசிக்கு
சனி சுபர். தர்மகர்மாதிபதி. அதாவது 9 மற்றும் 10ம் அதிபதி ஆவார். அதனால் யோகமான பலன்களை உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சி வாரி
வழங்கும். உங்கள் உழைப்பிற்கேற்ற நல்ல பலனை இந்த இரண்டரை ஆண்டுகலளில் நீங்கள் அடைய
இயலும்.
புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி
கற்க வாய்ப்பு ஏற்படும்.. வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் தேடி வரும் . வேலை தேடி வெளிநாடு செல்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
புதிய கடன்கள்
வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். வங்கிகளில்
தொழில் செய்வதற்காக புதிய கடன்கள் கிடைக்கும். ரிஷப ராசிக்கு பத்தில் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் அமைவதால் யோக பலன்கள் ஏற்படும்.சனியால் உங்களுக்கு
கிடைக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் தடுக்க முடியாது.
இது நாள்
வரை திருமணம் தடை பெற்றவர்களுக்கு தற்சமயம் சனி பகவான் அருளால் திருமணம் நடக்கும்,
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும்.
புது வேலை அல்லது தொழில் அமையும். நீங்கள் வகிக்கும் பதவியில் புது உற்சாகம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.
இந்த காலக்கட்டத்தில்
ரிஷப ராசி நேயர்களின் நிதிநிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் பணவரவு ஏற்படும்.
உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் ராகு
இருப்பதால் நீங்கள் சுக போகங்களுக்காக அதிக பணம் செலவு செய்வீர்கள். சிலர் ஷேர்
மார்க்கெட் , ஸ்பெகுலேஷன் போன்றவற்றில் ஈடுபட்டு பணத்தை இழக்க நேரிடும். எனவே உங்கள்
செலவுகளில் கவனம் தேவை.
ரிஷப ராசி
நேயர்கள் தங்களுடைய ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து அதில் கவனம் செலுத்த வேண்டும்.
யோகா, தியானம் போன்றவற்றிற்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்.
திடகாத்திரமான உணவை உட்கொள்ளுங்கள் . வயதானவர்கள்
தங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ரிஷப
ராசி நேயர்கள் செய்ய வேண்டிய பரிஹாரம்
சனிக்கிழமைகளில்
சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றலாம். ரிஷப ராசிக்கு கேது 5ம் இடத்திலும் குரு 12 மற்றும் 1 ம் இடத்தில்
அமர இருப்பதால் தீய பலன்களை ரிஷப ராசி நேயர்கள் அனுபவிக்க நேரிடும். ஆகையால் உங்களுடைய
வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில் கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி செவ்வாய்
கிழமைகளில் வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை
நீங்கி வெற்றிகள் குவியும் .
சனிக்கிழமை
உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மேற்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment