2024 புத்தாண்டு ராசி பலன்கள்
இந்த புத்தாண்டு சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் தொடங்குகிறது.
இந்த 2024 புத்தாண்டு தொடங்கும் போது சந்திரன், குரு மற்றும் சனியின் பார்வையை பெறுகிறார்.
புத்தாண்டு அன்று தனுசு ராசியில் சூரியனும்
செவ்வாயும் இணைகிறார்கள். விருச்சிக ராசியில் சுக்கிரனும் புதனும் இணைகிறார்கள். மீன
ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் இருப்பார்கள்.
2024 ஆம் ஆண்டு முழுவதும் ராகு, கேது
மற்றும் சனி ஆகியவை ஒரே ராசியில் இருக்கும். குரு பகவான் மே 01, 2024 அன்று மேஷ ராசியில்
இருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார். குரு ரிஷப ராசியில் இருந்து, கேது-வை பார்வையிடுவது
கோடீஸ்வர யோகத்தை தரும். இதனால் அனைவரின் பொருளாதார
நிலை உயரும் .குரு கேது பார்வை
மேஷம்:
ஜென்ம குரு பொருளாதார ரீதியாக சில
சங்கடங்களை ஏற்படுத்துவார். எவ்வளவுதான் பணம் வந்தாலும் செலவு கையை கடிக்கும். பொருளாதார
நெருக்கடியை சந்திக்க தயாராகுங்கள். சில காலம்தான் கவலை வேண்டாம். 2024 ஆம் ஆண்டு மே
மாதத்தில் குரு பகவான் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் அற்புத யோகங்கள் வரப்போகிறது. தனகாரகர் குரு தன ஸ்தானத்தில் அமரபோவது பணம் பல
வழிகளில் இருந்தும் தண்ணீர் போல் கொட்ட இருக்கிறது.
மே 2024 முதல் குரு பகவான் 2ல் அமர்ந்து 6,8,10 இடங்களை
பார்வை இடுவார். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். எதிரிகளை வெற்றி காணிப்பீர்கள்.
ஆரோக்கியம் உயரும் . 10 ம் இடத்தை பார்ப்பதால் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம்
உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை தரும். பதிவு உயர்வு , அனுகூல இடமாற்றம்
ஏற்படும். மரண பயம் நீங்கும்; சிறு விபத்துகள்
ஏற்பட்டாலும் தப்பித்துக் கொள்ளலாம்.நல்ல மன நிலை உண்டாகும்.
இரண்டரை ஆண்டுகள் லாப சனி காலம் என்பதால் பலன்களும் நன்மைகளும் அதிகரிக்கும்
சனி பகவான் மேஷ ராசிக்கு 10 மற்றும் 11ம் அதிபதி,
11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்யப்போகிறார்.
2024 ஆண்டு ஒரு பிரகாசமான ஆண்டாக மேஷ ராசி நேயர்களுக்கு இருக்க போகிறது..
பல தடைகளை உடைத்து வெற்றி கான்பீர்கள். நீங்கள் எண்ணியது கைகூடும்
தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு 2024ஆம் ஆண்டு முதல் பிரகாசமாக இருக்க போகிறது. வேலையில் இருப்பவர்கள்
கூட சொந்த தொழில் தொடங்குவீர்கள். உத்யோக உயர்வை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு
நல்ல செய்தி தேடி வரும். வேலையில் இருப்பவர்கள்விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.
புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும்.
மேஷ ராசிக்கு கேது 6ல் இந்த ஆண்டு
முழுவதும் சஞ்சரிக்க இருக்கிறார் கோச்சாரத்தில்
. 6ல் உள்ள கேது அற்புதமான பலன்களை தர இருக்கிறார். ராகு 12ல் இருப்பது நன்மை தராது.
சனிக்கிழமைகளில் ராகு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.
வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு
நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் யோகமான
பலன்கள் நடைபெறும். உங்கள் குலதெய்வத்தை
அடிக்கடி மனிதில் நினைத்து வழிபட்டு வர வளமான வாழ்வு அமையும்.
No comments:
Post a Comment