Search This Blog

Sunday, December 31, 2023

கன்னி ராசிக்கு 2024 புத்தாண்டு பலன்கள் என்ன?கன்னி ராசிக்கு 2024 ஆண்டு ...


கன்னி ராசி

வரும். 2024ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதம்வரை குரு பகவான் 8ம் இடத்தில  சஞ்சரிக்க போவதால் , உங்கள் உடல் ஆரோக்யத்தில் மிக்க கவனம் தேவை. கடன்  வாங்குவதை தவிர்க்கவும். இந்த கால கட்டத்தில் வியாழ கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர யோகமான பலன்களே நடைபெறும்.



வரும். 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் 9ல் அமர்ந்து 1,3,5  இடங்களை பார்வை செய்வார். கன்னி  ராசி நேயர்களுக்கு வாழ்க்கையில் பேரும், புகழும் கிடைக்கும். அவருக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.உங்களுக்கு எதிரிகள் தொல்லை விலகும். தைரியமாக நல்ல விஷயங்களை செய்வீர்கள். இளையசகோதர்களின் வாழ்வு வளம் பெரும். இதுநாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்சமயம் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்விக சொத்து சார்ந்த சிக்கல்கள் நீங்கி சொத்து உங்கள்  கைக்கு வரும்.குழந்தைகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உயர் கல்வி வாய்ப்பு , மருத்துவம் போன்ற துறைகளில் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதால் பெற்றோர்கள்6மனது குளிரும்.



சனி  பகவான் 6ம் இடத்தில் இந்த ஆண்டு முழுவதும்  ருண சத்ரு  சனியாக சஞ்சரிக்க இருக்கிறார். உங்கள் ஆரோக்கியம் மேலோங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி கொள்வீர்கள்.  சனி பகவான் 8,12 மற்றும் 3ம் இடத்தை பார்வை இடுவார் 2024 முழுதும். மனோ தைரியம் அதிகரித்து காணப்படும்.

1ல் கேது 7ல் ராகு இல்லறவாழ்வில் விட்டு கொடுத்து போவது நன்மை தரும். சனிக்கிழமைகளில் ராகு பகவானுக்கு  நெய் தீபம் மற்றும் செவ்வாய் கிழமைகளில் கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர கெடு பலன்கள் மறையும்.




No comments:

Post a Comment