Search This Blog

Tuesday, January 2, 2024

மகர ராசிக்கு 2024 புத்தாண்டு பலன்கள் என்ன? மகர ராசிக்கு 2024 ஆண்டு என்ன...


மகர ராசி

மகர  ராசிக்கு குரு பகவான் வரும் 30 ஏப்ரல் 2024 வரை  ராசிக்கு 4ல் சஞ்சரிப்பார்.  தாயாரின் உடல் நிலையில் அதிகம் கவனம் செலுத்த நேரிடும். சொத்துக்கள் மீதான வழக்குகள் இழுபறியாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிகம் கவனம் செலுத்த நேரிடும்.



2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் 5ல் அமர்ந்து 9,11,1 இடங்களை பார்வை இடுவார். இதுநாள் வரை திருமணம் தடை பெற்றவர்களுக்கு தற்சமயம் திருமணம் நடைபெரும். குழந்தை பாக்கியம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், வெளிநாட்டில் வேலையும்  கிடைக்க வாய்ப்புகள் அதிகம். தந்தையின் அனுகூலம் மற்றும் ஆதரவும் கிடைக்கும்.எதிர்பாராத பொருள் வரவு, அதிர்ஷ்டம் உள்ளிட்ட சுப பலன்களை எதிர்பார்க்கலாம்.வாழ்க்கையில் பேரும், புகழும் கிடைக்கும்.  சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

பணவரவுசரளமாக  இருக்கும். செய் தொழில் வளர்ச்சி பெறும். திருமண தடைகள் நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சிலர் வெளிநாடு சென்று மேற்கல்வி கற்க , தொழில் செய்ய , வேலையில் சேர வாய்ப்பு கிடைக்கும். வருமானம் பெருகுவதால் சேமிப்பு நிறைய உண்டாகும். கடன்களை தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்,

ஜென்ம சனி விலகி பாத சனியாக மகர ராசிக்கு தொடரப்போகிறது. மகர ராசிக்கு ஏழரை சனி முழுமையாக விலக இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. ஆனாலும் மகர ராசிக்கு சனி பகவான் அதிபதி என்பதால் , சொந்த ராசி நேயர்களுக்கு அதிக தொல்லைகள் கொடுக்கமாட்டார் என்று உறுதியாக சொல்லலாம்.

வாக்கு சாதுர்யத்தால் எதிரிகளை சமாளிப்பார்கள். தாராளமான பண வரவு ஏற்படும். செல்வாக்கு உயரும். சில மகர ராசி நேயர்கள் வெளி நாடு சென்று உயர் கல்வி கற்கும் யோகம் உண்டாகும். மாணவர்களளின் கல்வியில் நல்ல முன்னேற்றமான போக்கு காணப்படும்.



ராகு 3ல் இருப்பது அற்புதமான பலன்களை தரும். மனோதைரியம் மிகுந்து காணப்படும் புதிய முயற்சிகளில் வெற்றி காணிப்பீர்கள். கேது 9ல் இருப்பதால் பல கோயில்களுக்கு சென்று வழிபடுவார்கள். தான , தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

உங்கள் குலதெய்வத்தை அடிக்கடி மனதில் நினைத்து கொள்ளுங்கள்.. அனைத்தும் நலமாக நடைபெறும். சனி கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட நன்மையான பலன்களே நடைபெறும்.


No comments:

Post a Comment