Tuesday, February 13, 2024

2026ல் புதுவை முதல்வர் புஸ்சிஆனந்தா?புஸ்ஸி ஆனந்த் விஜய்மக்கள் இயக்கத்தில...


2026ல் புதுவை முதல்வர் புஸ்சி ஆனந்தா ? புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கத்தில் முன்னணிக்கு வந்தது எப்படி ?

யார் இந்த புஸ்ஸி ஆனந்த்?

 விறகுக்கடை முதலாளி புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கத்தில் முன்னணிக்கு வந்தது எப்படி ?

புதுச்சேரியில், வெறும் 5,000 ஓட்டுகள் உள்ள சிறிய சட்டமன்றத் தொகுதி தான் 'புஸ்ஸி தெரு'.

இந்த தொகுதியில் புதுச்சேரி கண்ணன் தொடங்கிய புதுவை மாநில காங்கிரஸ் சார்பில், 2006-ம் ஆண்டு தேர்தலில் நின்று 2,500 ஓட்டுகள் வாங்கி ஜெயித்து, பின்பு அதே தொகுதியில் 2 முறை தோற்ற நபர்தான் இந்த புஸ்ஸி ஆனந்த்.


புஸ்சி ஆனந்த்  அடிப்படையா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் 2005 ல் புதுவை காங்கிரஸில் இருந்து விலகி புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்னும் கட்சியை தொடங்கினார்.  பின்னர் புதுவை கண்ணன் கட்சியில் இணைந்தார். கண்ணன் கட்சி சார்பில்  புஸ்சி தொகுதியில் 2006ல் போட்டியிடுகிறார். அதில் வெற்றி பெறுகிறார். பின்னர் அந்த பகுதியின் விஜய் ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளராக ஆக்க படுகிறார்.

புதுச்சேரியில் சாதாரண விறகுக்கடை வியாபாரம் செய்து வந்த புஸ்ஸி ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தில் விஜய் ரசிகர் மன்றத்தின் சாதாரண கிளை தலைவராக இருந்து வந்த இவரை, தமிழக விஜய் ரசிகர் மன்றத் தலைவராக பதவி கொடுத்தவர் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்.

கடைசியில், புஸ்ஸி ஆனந்த் கேரளா மந்திரவாதிகளை வைத்து எனது மகனை எங்களிடம் இருந்து பிரித்து விட்டார் என விஜய்யின் அப்பா, அம்மா புலம்பும் அளவிற்கு,பெற்றோரை பிரித்து விஜய்யிடம் பெரும் செல்வாக்கு பெற்றவர் தான் இந்த புஸ்ஸி ஆனந்த்.

நடிகர் விஜய்யின் சித்தப்பா, புதுவை எல்லப்பிள்ளை சாவடி பகுதியில் வசித்து வருகிறார்.

நடிகர் விஜய் அடிக்கடி வேளாங்கண்ணி கோயிலுக்கு போகும்போது அவரது சித்தப்பாவை சந்திக்க வருவார். அப்போது தான் விஜய்யுடன் பழக்கமானார் இந்த புஸ்ஸி ஆனந்த்.



பாண்டிச்சேரி எஸ்.பி.-யாக இருந்த விஜயகுமார், புஸ்ஸி ஆனந்தின் மாமா ஆவார்.

விஜயகுமாருக்கு, புதுச்சேரி பாஜக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் மிகவும் நெருக்கமானவர்.

தனது மாமா மூலம் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமியுடன் நெருக்கமாகிறார் புஸ்ஸி ஆனந்த்.

பாஜக அமைச்சர் நமச்சிவாயம் மூலம் அமித்ஷாவுக்கு அறிமுகமாகிறார் புஸ்ஸி ஆனந்த்.

விஜய் ரசிகர் மன்ற தலைவர், ரியல் எஸ்டேட், பைனான்ஸ் என பிஸியாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்.தனது கண் அசைவின் மூலம் விஜய் என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே முடிவு செய்கிறார்!

புதுவையில் உள்ள  புஸ்சி தொகுதியில் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம். இவர்கள் பெரும்பாலும் நடிகர் விஜயின் ரசிகர்கள் ஆவார்கள். ஆகையால்தான் இவர் புஸ்சி  தொகுதியை தன் வசபடுத்தியுள்ளார்.

புஸ்சி ஆனந்த் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் அஷ்ரப்வின் உதவியாளராக பணியாற்றி உள்ளார்.

பொதுவாக நடிகர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களையே கட்சியின் உயர்பதவிக்கு நியமிப்பார்கள் . உதாரணமாக சூர்யா தனது நெருங்கிய உறவினரான ஞானவேல் ராஜாவை நியமனம் செய்து உள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருடைய ரசிகர்மன்றத்திற்கு செயலாளராக அவருடைய நெருங்கிய நண்பரான அமைச்சர் அன்பில் மகேஷ்யை நியமனம் செய்து உள்ளார்.

நடிகர் தனுசுக்கு அவரது ரசிகர் மன்ற தலைவர் சுப்பிரமணிய சிவா கலையுலகத்தை சேர்ந்தவர் ஆவார்.

புஸ்ஸி ஆனந்தை தாண்டி யாரும் அவ்வளவு எளிதாக விஜய்யை பார்க்க முடியாது.

புஸ்ஸி ஆனந்த் முயற்சியால்,புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி பலமுறை விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்.

வரும்-2026 சட்டமன்ற தேர்தலில், திமுகவுக்கு சாதகமாக விழும் இளைஞர் ஓட்டுகளை விஜய் பிரிக்க வேண்டும்.

அதன் மூலம், தங்களது கூட்டணி வெற்றி பெறும் இதுதான் பாஜக தலைமை போட்டிருக்கும் அரசியல் கணக்குஎன்று கூறப்படுகிறது.

இந்த அரசியல் கணக்கு தான், விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கான பிள்ளையார் சுழி.

இதற்கான அனைத்து செலவுகளையும் பாஜக ஏற்றுக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிரபல திரை நட்சத்திரங்கள் மூலம் எளிதில் வெற்றி பெறலாம் என்ற திட்டப்படி ரஜினிகாந்தை இழுத்து பார்த்த பாஜக,தற்போது புஸ்ஸி ஆனந்த் மூலம் பலநாட்கள் நடந்த ரகசிய திட்டப்படி விஜய்யை களமிறக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.

இதனிடையே வரும் 2026-ல் தமிழகத்தின் முதல்வர் நடிகர் விஜய்,புதுவை முதல்வர் 'நான்தான்' என அனைவரிடமும் தெளிவாக பேசி வருகிறார் புஸ்ஸி ஆனந்த்.

விஜய் மக்கள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக உருமாற்றம் செய்ததில் இவருடைய பங்களிப்பு மிக அதிகம். அரசியல் கட்சியில் உள்ளது போலவே விஜய் மக்கள் இயக்கத்தில் மாவட்டம் , நகரம் , கிளை  தொகுதி போன்ற அமைப்பை  புஸ்சி ஆனந்த் ஏற்படுத்தி உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர் அணி , வழக்கறிஞர் அணி , மகளிர் அணி , வர்த்தகர் அணி போன்ற அமைப்புகள் ஏற்படுத்த பட்டுள்ளன. விலையில்லா உணவகம்  , விலையில்லா மருந்தகம் , தளபதி விஜய் பயிலகம் போன்றவை ஏற்படுத்த பட்டுள்ளது.

விஜய் அரசியலில் உயர் பதவிக்கு வரும் பொழுது புஸ்சி ஆனந்த்திற்கு கண்டிப்பாக உயர் பதவி கட்சியில் உண்டு என்பதை நாம் தெளிவாக அனுமானிக்கலாம்.  வரும் காலம்தான் இந்த கேள்விகளுக்கு பதில் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


No comments:

Post a Comment