Saturday, April 20, 2024

# ரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை# குரு...


ரிஷப  ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை

8 மற்றும் 11ம் அதிபதி

ரிஷப ராசிக்கு குரு பகவான் எட்டாம்  மற்றும்  பதினோராம்  வீட்டிற்கு அதிபதி ஆவார்.11ம் அதிபதியான குரு தன ஸ்தானமான 2ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது நல்ல யோகமான பலன்களை ரிஷப  ராசி நேயர்களுக்கு  அளிப்பர்.



பொது பலன்

இந்தப் குரு  பெயர்ச்சிரிஷப ராசி நேயர்களுக்கு  பல லாபங்களையும் , வெற்றியையும், முன்னேற்றத்தை யையும், ஏற்றத்தையும் தரும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில்  சில நல்ல நிகழ்வுகளை நீங்கள் அனுபவிக்கலா புனித யாத்திரைகள் மற்றும் ஆன்மீக ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஒரு சில ரிஷப ராசி நேயர்களுக்கு  கிடைக்கும். இந்த கால கட்டத்தில் உங்கள் நிதி முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பங்குச் சந்தை முதலீடுகள், ஒப்பந்த பரிவர்த்தனைகள் ஒரு சில ரிஷப ராசி நேயர்களுக்கு வெற்றியை தரும்.

உங்கள் ஜனன கால ஜாதகத்தில் உள்ள கிரஹ நிலையை வைத்தும் , ஒருவரின் தசை புக்தி நிலைகளை வைத்தும் குரு பெயர்ச்சி பலன்கள் மாறு பாடலாம்.

ஜென்ம குரு - ரிஷப ராசியில்  குரு சற்று பாதகமான நேரம்

ஜென்ம குரு ராமர் வனவாசம் என்கிறது ஜோதிட பாடல் .ரிஷப ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி சற்று சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். ஏனெனில் விரய ஸ்தானத்தில் இருந்த குரு, உங்கள் ராசிக்கு ஜென்ம குருவாக வர உள்ளார்.  இதன் காரணமாக ரிஷப ராசிக்கு சற்று சோதனையான காலமாக அமைய உள்ளது . ஜென்மத்தில் குரு இருப்பதால் உடல் ரீதியாக, மன ரீதியான கவலைகள், கஷ்டங்களை  ரிஷப ராசி நேயர்கள் சிலர் சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியம் பாதிப்பு , சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படுதல் ,வேலையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுதல், வேலை செய்யும் இடத்தில  போராட்டமான சூழல், என குரு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க கூடிய அடுத்த ஒரு வருட காலத்தில் நீங்கள்  சந்திக்க நேரிடும்.



குரு பார்வை 5,7,9

இந்த குரு பெயர்ச்சி மே 1, 2024 முதல் மே 13, 2025 வரை நடக்கும். இந்த பெயர்ச்சி காலத்தில் குரு ரிஷப  ராசிக்கு  5 வது வீடு, 7வது வீடு மற்றும் 9வது வீடு ஆகிய இடங்களை பார்வை இடுகிறார்.

குரு பகவானின் ஐந்தாம் பார்வையால், உங்களுக்கு பூர்வீக சொத்து பிரச்சனைகள் இருப்பின் இந்த ஒரு வருட காலத்தில் அவை தீரும். உங்கள் குழந்தைகளின் தொழில், வேலை, படிப்பு, திருமண வாழ்க்கை உள்ளிட்ட விஷயங்களில் மென்மையான  பலன்கள் கிடைக்கும்.

ரிஷப ராசிக்கு 7ம் இடமான வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளி ஸ்தானத்தை குரு பார்வை இடுவதால் , இதுவரை திருமணம் நடக்காமல் இருக்கக்கூடிய ரிஷப ராசி நேயர்களுக்கு , விரைவில் திருமண நடக்க வாய்ப்புள்ளது.

திருமணம் ஆனவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் இன்னும் ஓராண்டுக்குள் கிடைக்க வாய்ப்புள்ளது.

கூட்டு  தொழில் அமோகமாக இருக்கும். நண்பர்களின் உதவி தக்க நேரத்தில் கிடைக்கும். கணவன் மனைவி உறவு அமோகமாக இருக்கும். அன்னியோன்யம் கூடும்.

குரு பகவான்  தனது பார்வையால்  9ம் இடமான தந்தை  மற்றும் பாக்கிய ஸ்தானத்தின் மீது அவரின் பார்வை விழுகிறது. இதனால் நீண்ட நாட்களாக தந்தையுடன் அல்லது தந்தை வழி உறவுகளுடன் இருந்த மன கசப்பு தீரும் .அப்பா  வழியில் சொத்து, பண வரவுகள் கிடைக்கும்.

9ம் இடம் என்பதால்  என்பதால் சொத்துக்கள், திடீர் பண வரவுகள், புதிய வாய்ப்புகள் இந்த கால கட்டத்தில் வரக்கூடும்.

குரு அஸ்தங்கம்

மே 3  2024 முதல்  ஜூன் 32024 க்கு இடையில், குரு அஸ்தங்க நிலையில்  நிலையில் இருக்கும் போது, ​​நீங்கள் உங்கள் பணியில் , தொழிலில்  அதிக கவனம் செலுத்த  வேண்டும். உங்கள் பேச்சின் மூலம் யாரிடமும் தவறாக பேச வேண்டாம். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்



குரு வக்கிரம்

குருவின் வக்கிர கதியின் போது, அக்டோபர் 9, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை,  குரு பகவான்  12ல் சஞ்சரிப்பதால் ,உங்கள் நிதி வளர்ச்சி பாதிக்கப்படலாம். மனம் அலைபாயும். மனக்கவலையால் பாதிக்கப்படுவீர்.  இந்த காலகட்டத்தில் நீங்கள் ஆன்மீக விஷயத்தில் அதிக கவனம் செலுத்தலாம்  உங்கள் தொழில் சற்று சிரமமான நிலையை நோக்கி சென்றாலும் குருவின் வக்கிர கதிக்கு பிறகு நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மாணவர்கள்

நீங்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது அவசியம். படிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். அதிக தீவிரத்தை நீங்கள் படிப்பில் காண்பிக்கும் நிலை ஏற்படும். மாணவர்கள் அவர்கள்  விருப்பமான பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவதற்கான கனவுகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள் . மேலும், வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களும்  நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

தொழில் மற்றும் உத்தியோகம்

பணியில்  இருப்பவர்கள் தற்போது உள்ள பணியை  தொடர்வது நல்லது, புதிய பணிக்கு  மாற  முயற்சிக்க கூடாது. அதே போல தொழில் செய்பவர்களும், தங்களின் தொழிலை அப்படியே தொடர்ந்து நடத்தவும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் அந்த முயற்சியில் இன்னும் ஓராண்டுக்கு  ஈடுபடாமல் இருப்பது நல்லது. தொழிலில் நீங்கள் நினைத்த அளவிற்கு லாபம் வராவிட்டாலும், முதலுக்கு மோசம் வராது.

அரசியல்

அரசியலில் இருப்பவர்களுக்கு  உங்களின் செயல், பேச்சில் கூடுதல் கவனம் செலுத்தவும். . புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவும். சச்சரவுகள் ஏற்படுத்தும் விஷயங்களில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

கலைத் துறை

கலைத் துறையினருக்கு  சற்று சங்கடமான நேரமாக  இருக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் பெற கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்.. அதனால் உங்களின் திறமை வெளிப்பட்டுப் பெயர், புகழ் செல்வாக்கு உயரும். கலைத்துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து செயல்களையும் நேர்த்தியுடன் முடிப்பீர்கள். புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள்.

ரிஷப  ராசியின் கிரஹ நிலைகள்  -01-05-2024 முதல் மே 13, 2025 வரை

1ல் குரு , 11ல் ராகு , 5ல் கேது , 10ல் சனி

சனி, உங்கள் ராசிக்கு இப்போது சிறந்த நிலையில் உள்ளது, அதாவது 2024-2025 இல் லாபத்தையும் வளர்ச்சியையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். சனி பகவான் 10ல் கோச்சாரத்தில் தற்சமயம் சஞ்சரிப்பதால் , 10ல் ஒரு பாபியாவது இருக்க வேண்டும் என்ற ஜோதிட  சொல்லாடலுக்கு ஏற்ப உங்கள் தொழில் வாழ்க்கையில் மகத்தான வெற்றியையும் முன்னேற்றத்தையும் தரும்.உங்கள் பழைய கடனை அடைப்பீர்கள் .

ரிஷப ராசிக்கு குரு பகவான் ஜென்ம ராசியில்  சஞ்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

 

  • சிக்கலில் இருந்த தந்தை வழி சொத்துக்கள் உங்கள் வசம் வரும்.
  • வெளி நாடு சென்று கல்வி கற்க , தொழில் புரிய , வேலை செய்யும் வாய்ப்பு வரும்
  • புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
  • உங்கள் நிதி வளர்ச்சி பாதிக்கப்படலாம்
  • . திடீர் பண வரவுகள், புதிய வாய்ப்புகள் இந்த கால கட்டத்தில் வரக்கூடும். பண வரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது.
  • கூட்டு  தொழில் அமோகமாக இருக்கும்
  • கணவன் மனைவி உறவு அமோகமாக இருக்கும். அன்னியோன்யம் கூடும்.
  • விரைவில் திருமண நடக்க வாய்ப்புள்ளது.
  • ஆரோக்கியம் மேம்படும்
  • ஜாமீன் கையெழுத்து மற்றவர்களுக்கு போடுவதை தவிர்க்கவும் எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். உங்களின் பெயரில் பணம் வாங்கித் தரவும் வேண்டாம்.
  • குலதெய்வ வழிபாடு , ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள்
  • பெண்களுக்கு மாத விலக்கு , கர்ப்ப பை சம்மந்தமான நோய்கள் விலகும்
  • உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்

பரிஹாரம்

கேது 5ல் இருப்பதால் குழந்தைகளை பற்றிய கவலை , குடும்பத்தில் சண்டை சச்சரவு போன்றவை ஒரு சில ரிஷப நேயர்களுக்கு ஏற்படலாம். செவ்வாய் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் , வியாழக்கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.


No comments:

Post a Comment