Thursday, April 25, 2024

சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 24-25 1 மே 2024 முதல் மே 13, 2025 வர...


சிம்ம  ராசி குரு பெயர்ச்சி  பலன்கள் 24-25 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை

5 மற்றும் 8ம் அதிபதி

சிம்ம  ராசிக்கு குரு பகவான் 5ம்  மற்றும்  8ம்  வீட்டிற்கு அதிபதி ஆவார்.  இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு பத்தாம்  வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். சிம்ம ராசிக்கு  குரு பகவான் கர்மா , ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில  இன்னும் ஒரு வருட காலத்திற்கு சஞ்சரிக்க இருக்கிறார். இதுநாள் 9ம் இடத்தில்  இருந்த  குரு பகவான் உங்கள் தொழிலில் வளர்ச்சி , வேலையில் முன்னேற்றம் போன்ற அனுகூலமான  பலன்களை தந்து இருப்பர்.



பொது பலன்

கர்ம ஸ்தானமான 10ம் இடத்தில குரு சஞ்சரிப்பது நன்மையான பலன்களை தராது. சற்று சோதனை மிகுந்த காலம். அந்தணன் 10ல் நின்றால் அவதிகள் மெத்த உண்டு . ஈசனாரொரு பத்திலே தலையோட்டில் இரந்துண்டதும் என்கிறது ஜோதிட பாடல். இந்த கால கட்டத்தில் தொழில் சற்று சரிவை சந்திக்கும். உங்கள் தொழில் போட்டியாளர்களின் கை ஓங்கும். தொழில் அல்லது வேலையில் போட்டி ,பொறாமை , வீண் அலைச்சல் ஆகியவை நிறைந்து காணப்படும். சிலருக்கு வேலை பறிபோகும். சிலருக்கு விரும்பாத இடத்திற்கு பணி மாறுதல் கிடைக்கும். மேலதிரிகளின் அனுகூலமற்ற போக்கு ,  அவர்களால் தண்டிக்க படும் நிலை ஏற்படும். உதாரணத்திற்கு ஒரு காவல் துறை உயர் அதிகாரி . ஆகவே , வியாழக்கிழமைகளில் குரு பகவானின் வெளிப்பாடு கண்டிப்பாக செய்ய வேண்டும். குரு பகவானின் அஷ்டோத்திரம் திண்சரி கேட்டு வரவும்.

7ம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வது கண்டக சனி என்று கூறுவோம்.7 ஆம் வீட்டில் சனியின் சஞ்சாரம் உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை பாதிக்கலாம். கணவன் மனைவி உறவு சற்று விராசலடைந்து காணப்படும். ஆயினும் குரு 2ம் வீட்டை பார்ப்பதால் மோசமான நிலையையும் இறையருளால் சந்தித்து மீண்டு வருவீர்கள்.

சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியின் பொழுது கோச்சாரம் சரியாக இல்லை. 10 ல் குரு , 2ல் கேது , 8ல் ராகு , 7ல் சனி . குரு ,சனி , ராகு மற்றும் கேது பிரீத்தி கண்டிப்பாய் செய்து வரவேண்டும்.



உங்கள் தசை புக்தி , ஜனன காலத்தில் கிரஹ வலிவு போன்றவை நன்றாக அமைந்தால் அதிக பாதிப்புகள் உங்களுக்கு  ஏற்படாது.

குரு பார்வை 2,4,6

இந்த குரு பெயர்ச்சி மே 1, 2024 முதல் மே 13, 2025 வரை நடக்கும். குரு எந்தஇடத்தை கோச்சாரத்தில் பார்வையிடுகிறாரோ   அந்த இடம்  பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது  தன இருக்கும் குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். 5ம் பார்வையும்,9ம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

இந்த பெயர்ச்சி காலத்தில் குரு சிம்ம ராசிக்கு  2வது வீடு, 4வது வீடு மற்றும் 6வது வீடு ஆகிய இடங்களை பார்வை இடுகிறார்.



2ம் இடம்

குரு பகவான் குடும்பம், தன ஸ்தானத்தை பார்க்கும் போது பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். பணவரவு சரளமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.

4ம் இடம்

சுகம் , தாயார் ஸ்தானத்தில் குரு பார்க்கும் போது, நீங்கள் வீடு, மனை வாங்கக்கூடிய யோகமும், வாகன பிராப்தி உண்டாகும். பொன் , பொருள் , ஆபரண சேர்க்கை உண்டாகும். தாயாரின் உடல் நிலை நன்கு இருக்கும். குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே உங்களின் செல்வாக்கு உயரும்

6ம் இடம் - ருணம்  சத்ரு ஸ்தானம்

குரு பகவான் 6ஆம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானம் மீது பார்வை படும் போது, நீண்ட காலமாக இருந்த வியாதிகள் நீங்கி நல்ல ஆரோக்கியம் பெறுவீர்கள். எதிரிகளை பந்துடுவீர்கள்.. நீண்ட காலமாக இழுபறியாக இருந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள். நீண்ட காலமாக வாராக்கடன் இந்த கால கட்டத்தில் வசூலாகும்.

குரு அஸ்தங்கம்

குரு பகவான் சிம்ம ராசிக்கு 5ம் அதிபதி என்பதால் (திரிகோணாதிபதி) அஸ்தங்கத்தால் கடக ராசி நேயர்களுக்கு தீமையான பலன்கள் நடைபெறாது.

மே 3  2024 முதல்  ஜூன் 32024 க்கு இடையில், குரு அஸ்தங்க நிலையில்  நிலையில் இருக்கும் போது, நீங்கள் எதனையும்  செய்யமுடியும் என அதீத கர்வத்துடன் இருத்தல்,அளவுக்கு மீறிய வாக்குறுதிகளை கொடுத்தல் ஆகியற்றை தவிர்க்கவம். நியாபகமறதி அதிகம் இருத்தல்,உடல் வலி, வாயு தொல்லைகளினால் அவதிப்படுதல் ஆகிய பலன்களும் ஏற்படலாம் .



குரு வக்கிரம் (பின்னோக்கி நகருதல்)

குருவின் வக்கிர கதியின் போது, அக்டோபர் 9, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை,  குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9ல் சஞ்சரிப்பதால் ,உங்கள் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும்... பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு , அனுகூல இடமாற்றம்   போன்ற பலன்கள்  ஏற்படலாம் . .  இந்த காலகட்டத்தில் நீங்கள் ஆன்மீக விஷயத்தில் அதிக கவனம் செலுத்தலாம் 

குரு வக்ரம் பெற்றால் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை, புத்திர பாக்கிய தடை, பெண் என்றால் கர்பபை பிரச்சனைஉண்டாகிறது.குரு வக்ர நிலையில் இருக்கும் போது பாதிப்பை சந்திப்பவர்கள், வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து குருபகவானை வணங்கவும்

மாணவர்கள்

குரு பகவான் 4ம் இடத்தை கல்வி ஸ்தானத்தை பார்வை இடுவதால் , கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.. படிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். அதிக தீவிரத்தை நீங்கள் படிப்பில் காண்பிக்கும் நிலை ஏற்படும். மாணவர்கள் அவர்கள்  விருப்பமான பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவதற்கான கனவுகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள் . மேலும், வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களும்  நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

தொழில் மற்றும் உத்தியோகம்

குரு பகவான் 10ல் இருப்பதால் பணியில்  இருப்பவர்கள் தற்போது உள்ள பணியை  தொடர்வது நல்லது, புதிய பணிக்கு  மாற  முயற்சிக்க கூடாது. அதே போல தொழில் செய்பவர்களும், தங்களின் தொழிலை அப்படியே தொடர்ந்து நடத்தவும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் அந்த முயற்சியில் இன்னும் ஓராண்டுக்கு  ஈடுபடாமல் இருப்பது நல்லது. தொழிலில் நீங்கள் நினைத்த அளவிற்கு லாபம் வராவிட்டாலும், முதலுக்கு மோசம் வராது.ஸ்பெகுலேஷன் , பங்கு சந்தை போன்ற அதிர்ஷ்ட இனங்களில் ஈடுபடலாகாது.

வர்த்தகம்,வியாபாரம்,  தொழில், உத்தியோகம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். என்றாலும், குருவின் பார்வை 2, 4, 6ம் இடங்களுக்குப் பதிவதால், அதன் மூலம் பாதிப்புகள் குறையும்.

அரசியல்

சிம்ம  ராசி நேயர்களுக்கு தற்சமயம் கண்டக   சனி நடை பெறுவதாலும் , குரு 10ல் இருப்பதாலும்  உங்களுக்கு அரசியலில் செல்வம் , செல்வாக்கு பாதிக்க படும்..அரசியலில் இருப்பவர்களுக்கு  உங்களின் செயல், பேச்சில்  சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பது மிகவும் கஷ்டம் . உங்கள் அரசியல் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம். அரசியலில் இருப்பவர்களுக்கு அடுத்தகட்ட பொறுப்புகள், பதவிகள் வந்துசேரும். உங்களது சமயோசித மூளையால் வாழ்வில் முன்னேறுவீர்கள்.

கலைத் துறை

சிம்ம ராசி நேயர்களுக்கு  கண்டக  சனி நடைபெறுவதாலும் , குரு 10ல் இருப்பதும்  ,  புதிய வாய்ப்புகள் சற்று தாமத படும். குருவின் வக்கிர கதியின் போது, அக்டோபர் 9, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை தொழில் சற்று சங்கடங்களை சந்திக்க நேரிடும். வருமானம் சரளமாக இருந்தாலும் சிலவுகள் அதிகமாகும். மனதில் இனம் புரியாத கவலை சூழும். வியாழக்கிழமைகளில் குரு , மற்றும் சனி கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும். ஜாதகத்தில் தசை புக்தி வலுவாக உள்ளவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படாது.



சிம்ம  ராசியின் கிரஹ நிலைகள்  -01-05-2024 முதல் மே 13, 2025 வரை

சிம்ம ராசி நேயர்களுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு கோச்சாரம் சரியாக அமையவில்லை.

10ல் குரு , 8ல் ராகு , 2ல் கேது , 7ல் சனி ஆட்சி  கண்டக சனி  சனி சச யோகம்

 அதாவது 2024-2025 இல் சில பிரச்சனைகளை சந்திக்க . சிலவுகள் அதிரிகப்பதால் கடன் வாங்கி சமாளிப்பீர்கள். .2ல் கேது இருப்பதும் 8ல் ராகு இருப்பதும்   நன்மையான பலன்கள் தராது..10ல் குரு இருப்பதால் சரளமான பணவரவு இருந்தாலும் சிலவுகள் அதிகரிக்கும்.. 8ல் ராகு இருப்பதால் உடல் நலம் பாதிக்கப்படலாம்.. தந்தை வழி சொத்துக்களில் வில்லங்கம் உண்டு.  சிறு உடல் உபாதைகளுக்கு சில மருத்துவ செலவுகள் இருக்கலாம்.

சிம்ம   ராசிக்கு குரு பகவான் 10ல்   சஞ்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

1.ஈசன் ஒரு பத்திலே தலையோட்டினின் இரந்துண்டதும்-   தொழில் பாதிப்பு , விரும்பாத இடத்திற்கு மாற்றம் , வேலை இழத்தல் போன்ற ஒரு சில நேயர்களுக்கு ஏற்படலாம்.

2. மேலாதிரிகளின் பழி வாங்கும் போக்கு காணப்படும். அவர்களின் தொந்திரவு அதிகமாய் காணப்படும்.

3. தொழிலில் போட்டி பொறாமை அதிகரித்து காணப்படும்..

4. கொடுத்த வாக்கை காப்பாற்றாத நிலை ஏற்படும். இதனால் அவமானம் , பழிச்சொல் ஏற்படும்.

5. ஆயினும் தனஸ்தானமான 2ம் இடத்தை குரு பார்ப்பதால் பணவரவு இருக்கும். சிலவுகள் அதிகரிக்கும்

6. சீட்டு பணம் , காப்பீடு தொகை முதிர்ச்சியடைந்து தக்க நேரத்தில் கை கொடுக்கும்.

7. 4ம் வீட்டை குரு பார்ப்பதால் புதிய மனை வாங்கி வீடு கட்டும் யோகம் ஏற்படும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டுக்கு குடிபுகும் யோகம் உண்டாகும்.

8.6ம் இடத்தை குரு பார்ப்பதால் , நீண்ட காலம் நிலுவையில் இருந்த கடன் வசூலாகும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்

9. நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.

10.    எதிரிகள் தொல்லை நீங்கும்

11.    உடல் ஆரோக்கியம் நல்ல முன்னேற்றம் காணும்

12.    வீடு , வாகனம் , தங்க நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும்

பரிஹாரம்

சிம்ம ராசி நேயர்களுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு கோச்சாரம் சரியாக அமையவில்லை.

10ல் குரு , 8ல் ராகு , 2ல் கேது , 7ல் சனி ஆட்சி  கண்டக சனி  சனி

ராகு 8ல் இருப்பதால்  தந்தை வழி  சொத்துக்களில் வில்லங்கம் , கடின உழைப்பு , வாகன மூலம் சிறு விபத்து  போன்றவை சிம்ம   ராசி  நேயர்களுக்கு ஏற்படலாம். சனி கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள ராகு  பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

குரு 10ல்   சஞ்சரிப்பதால் , வியாழக்கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள குரு பகவானக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

 

கண்டக சனி என்பதால் சனி கிழமை தோறும் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள சனி   பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.

 

கேது 2ல் உள்ளதால் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள கேது பகவானக்கு செவ்வாய் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.


No comments:

Post a Comment