விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை
2 மற்றும் 5ம் அதிபதி
விருச்சிக
ராசிக்கு குரு பகவான் 2ம் மற்றும் 5ம் வீட்டிற்கு
அதிபதி ஆவார். குரு பகவான் 7ம் வீட்டில் சஞ்சரிக்க்க
இருப்பது கேந்திர-திரிகோண உறவை ஏற்படுத்துவார். இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள்
ராசிக்கு 7ம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். விருச்சிக ராசிக்கு குரு பகவான் சப்தம ஸ்தானமான 7ம் இடத்தில இன்னும் ஒரு வருட காலத்திற்கு சஞ்சரிக்க இருக்கிறார்.
இதுநாள் வரை 6ம் இடத்தில் இருந்த
குரு பகவான் உங்கள் தொழிலில் வளர்ச்சிஇன்மை , வேலையில் முன்னேற்றம் இல்லாத நிலை போன்ற அனுகூலமற்ற பலன்களை தந்து இருப்பர். மேலும் கடன் வாங்கும்
நிலையை ஏற்படுத்திருப்பர். எதிரிகளின் கை ஓங்கி இருந்து இருந்திருக்கும். இனிமேல் உங்களுக்கு
நல்ல காலம்தான்.
இனிமேல் விருச்சிக ராசிக்கு 7ம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கும் குரு
பகவான் உங்கள் ராசிக்கு 11,1,3ம் இடத்தை பார்வை இடுவார்.
பொது பலன்
குரு பகவான் கோச்சாரத்தில் 7ல் சஞ்சரிக்க இருப்பதால்
, இந்த ஒரு வருட காலத்தில் யோகமான பலன்களை
விருச்சிக ராசி நேயர்கள் சந்திக்க இருக்கிறார்கள். குரு 7ம் இடத்தில சஞ்சரிக்க போவதால்
இது நாள் வரை திருமண தாமதத்தை சந்தித்த விருச்சிக ராசி நேயர்கள் தற்சமயம் திருமணம்
நடைபெறும்.
உங்களின் பொருளாதார நிலை உயரும் . தொழிலில் வெற்றியை
குவீப்பீர்கள் . புதிய வாய்ப்புகள் , தொழில் விரிவாக்கமும் அமையப்பெறும்.. பணியிடத்தில் உத்யோக உயர்வு மற்றும் பாராட்டும் கிட்டும். கணவன் மனைவி உறவு மிகவும் அற்புதமாக இருக்கும்.
புதிய வேலை
தேடுபவர்களுக்கு தக்க வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சியையும் வெற்றியையும் எதிர்பார்க்கலாம்.
தைரியமும் கடின உழைப்பும் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள் .உங்கள் தொழிலை விரிவு படுத்தலாம்.
குரு உங்கள் 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்கள்
உடன்பிறந்தவர்களுடனான மற்றும் உங்கள் துணைவருடன்
உங்கள் பிணைப்பு வலுவடையும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். தொழில் மூலம் அபரீத லாபம் வரும்.தெய்வ வழிபாடுகளில்
ஈடுபடுவீர்கள்.புதிய சொத்துக்களை வாங்கும் காலம் இது.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மருத்துவச்செலவுகள்
ஏற்படாது.சிலருக்கு அரசு விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கும். சிலருக்கு புதிய வீட்டுக்கு
குடி பெயரும் வாய்ப்பு கிடைக்கும். பூர்வீகச்
சொத்துக்களில் இருந்த வில்லங்கம் விலகி, சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். பழைய சொத்துக்களும்
நல்ல விலைக்கு விற்பனையாகும். இதனால் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள்.
சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.வேலை காரணமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல நேரிடும் . திருமண காரியங்கள் கைகூடும். வேலைத்தளத்தில் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
குரு பார்வை 11,1,3
இந்த குரு பெயர்ச்சி மே 1, 2024 முதல் மே 13,
2025 வரை நடக்கும். குரு எந்தஇடத்தை கோச்சாரத்தில் பார்வையிடுகிறாரோ அந்த இடம்
பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு
5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது தன இருக்கும்
குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். 5ம் பார்வையும்,9ம்
பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
இந்த பெயர்ச்சி காலத்தில் குரு விருச்சிக ராசிக்கு
11வது வீடு, 1வது வீடு மற்றும் 3வது வீடு ஆகிய இடங்களை பார்வை இடுகிறார்.
குரு பகவான் 11ம் இடத்தை பார்ப்பதால்
குரு பகவான் 11ம் இடத்தை பார்ப்பதால், பறிபோன பதவி மீண்டும் கிடைக்கும். இழந்த பொருள்
மீண்டும் வந்து சேரும். புதிய பொருளும் வந்து சேரும். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
குரு பகவான்
லாப ஸ்தானமான 11ம் இடத்தை பார்வையிடுவதால்
, பண வரவு சரளமாக இருக்கும். தொழில் நல்ல வளர்ச்சி காணும். பணியில் நல்ல முன்னேற்றம்
இருக்கும். இதுநாள் வரை தாமதப்பட்ட உத்யோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இந்த 1 வருட
காலத்திற்குள் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் உங்களின்
பெயரும், புகழும் படிப்படியாக உயரும்.உங்களுக்கு எதிர்பாராத பொருள் வரவு, அதிர்ஷ்டம்
உள்ளிட்ட சுப பலன்களை எதிர்பார்க்கலாம். பங்கு சந்தை , ஸ்பெகுலேஷன் போன்றவற்றில் திடிரென்று
அதீத லாபம் கிடைக்கும்.
லாபங்கள் நிறைந்த ஆண்டாக அமையும். வருடம் முழுவதும்
வருமானம் நிறைந்த ஆண்டாக அமையும். செய்யும் தொழிலில் லாபத்தை தரும். மாணவர்களுக்கு
கல்வியில் மேன்மை உண்டாகும், அறிவித்திறன் அதிகரிக்கும். சனி சிக்கல்களை உருவாக்கினாலும்
குருவினால் பாதிப்புகள் குறையும். தொட்டதெல்லாம் பொன்னாகும் பொற்காலமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு
அமையப்போகிறது.
குரு ஜென்ம ராசியை பார்ப்பதால்
குரு பகவான் ஜன்ம ராசியை பார்க்கும் போது, உங்கள் வாழ்க்கையில் பேரும், புகழும் கிடைக்கும். உங்களுக்கு
சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். ஆரோக்கியம்
நன்றாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள்
நடைபெறும். குடும்பத்தில் குதூகலமும் மகிழ்ச்சியும் காணப்படும். குரு பகவான் சமசப்தம பார்வையாக விருச்சிக ராசியை பார்ப்பதால்
பெரும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி ஏற்படும்.
வெளிநாட்டு பயணம்,புதிய தொழில் தொடங்குதல், புதிய வேலை தேடுதல், வரன் பார்த்தல், போன்ற அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
3ம் இடத்தை பார்வை
குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானமான
3ம் இடத்தை பார்ப்பதால் , சகோதர சகோதரிகளிடம் இருந்த பிரச்சினைகள் தீரும். சந்தோசங்களையும்
ஆதரவுகளையும் கொடுப்பார்கள்.எதிரிகள் தொல்லை விலகும். தைரியமாக நல்ல விஷயங்களை செய்வீர்கள்.
குரு அஸ்தங்கம்
மே 3
2024 முதல் ஜூன் 32024 க்கு இடையில்,
குரு அஸ்தங்க நிலையில் நிலையில் இருக்கும்
போது, நீங்கள் எதனையும் செய்யமுடியும் என அதீத
கர்வத்துடன் இருத்தல்,அளவுக்கு மீறிய வாக்குறுதிகளை கொடுத்தல் ஆகியற்றை தவிர்க்கவம்.
நியாபகமறதி அதிகம் இருத்தல்,உடல் வலி, வாயு
தொல்லைகளினால் அவதிப் படுதல் ஆகிய பலன்களும் ஏற்படலாம் .
குரு வக்கிரம் (பின்னோக்கி நகருதல்)
குருவின் வக்கிர கதியின் போது, அக்டோபர் 9,
2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை, குரு பகவான் 6ல் சஞ்சரிப்பதால் ,உங்கள் தொழில் வளர்ச்சி பாதிக்கும். பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு தாமதப்படும்.அனுகூலமான இடமாற்றம்
கிடைக்க காத்திருக்க வேண்டும். இந்த
காலகட்டத்தில் நீங்கள் ஆன்மீக விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கூட்டு தொழில்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.எதிரிகளின் கை ஓங்கி காணப்படும். வழக்குகளில் இழுவை
நிலை காணப்படும்.
குரு வக்ரம் பெற்றால் பணம் கொடுக்கல் வாங்கலில்
பிரச்சனை, புத்திர பாக்கிய தடை, பெண் என்றால் கர்பபை பிரச்சனைஉண்டாகிறது.குரு வக்ர
நிலையில் இருக்கும் போது பாதிப்பை சந்திப்பவர்கள், வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை
அணிந்து குருபகவானை வணங்கவும்.
மாணவர்கள்
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..அதிக தீவிரத்தை
நீங்கள் படிப்பில் காண்பிக்கும் நிலை ஏற்படும். மாணவர்கள் அவர்கள் விருப்பமான பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவதற்கான
சூழ்நிலைகள் ஏற்படும். மேலும், வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களும் நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். மாணவர்கள் தங்கள்
சக மாணவர்களை நன்கு தேர்ந்தெடுத்து பழக வேண்டும். இல்லை என்றால் தீய பழக்க வழக்கங்களில்
ஈடுபட நேரிடும். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால், நீங்கள்
தேர்ந்தெடுத்த துறையில் வெற்றியைக காணலாம்.
இந்த குரு பெயர்ச்சி விருச்சிக ராசி
மாணவர்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு வரும், மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும், அறிவித்திறன் அதிகரிக்கும்.
தொழில் மற்றும் உத்தியோகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு தற்சமயம் குரு 7ல்
சஞ்சரிக்க இருப்பதால் தொழிலில் , பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.. குரு பகவான்
11 மற்றும் 1 ம் இடத்தை பார்ப்பதால் ,தொழிலாளர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும்.
வருமானம் உயரும். குரு பகவான் தைரிய வீர்ய
ஸ்தானமான 3ம் இடத்தை பார்ப்பதால் , விரய சிலவுகள் கட்டுக்குள் இருக்கும்.சிலர்
புதிய தொழில் தொடங்குவார்கள்.. ஸ்பெகுலேஷன் துறைகளின், பங்கு சந்தை மூலம் உபரி வருமானம் உண்டாகும். தற்போது வசிக்கும்
வீட்டை புதுப்பிப்பீர்கள்.மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளைபரிசீலித்து உங்களுக்கு
சாதகமான முடிவுகளை எடுப்பார்கள்.
11ம் இடத்தை குரு பார்ப்பதால் போட்டிகளை சாதூர்யமாக
சமாளிப்பீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில்
ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.உங்களுக்கு பதவி உயர்வு
கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நன்மையான பலன்கள் கிடைக்கும்..
வியாபார கூட்டாளிகள் உங்களிடம் நட்போடு பழகுவார்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று
வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.
தொழில்
செய்வதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் இது ஒரு சிறந்த நேரம்.புதிய முயற்சிகளில்
முதலீடு செய்ய இது ஒரு சிறந்த காலக்கட்டம்.உத்தியோகத்தின் மூலம் நிதிநிலை மேம்படும். தொழில் மூலம் லாபம் வரும்.
அரசியல்
துலா ராசி நேயர்களுக்கு தற்சமயம் 4ல் உள்ள ஆட்சி பெற்ற சனியால்
சச யோகத்தை தருவார். .இதனால் புகழ் , பொருள் சேர்க்கை , நல்ல மனைவி , உயர் கல்வி
, நல்ல குழந்தை ஆன்மிக ஈடுபாடு ஆகிய யோகமான
பலன்கள் ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு
உங்களின் செயல், பேச்சில் நல்ல முன்னேற்றம்
காணப்படும்.. .எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பது
சற்று கடினம். . அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால்
உங்கள் அரசியல் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம். சனி கிழமைகளில் சனி
பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்து நலம் தரும்.
கலைத் துறை
விருச்சிக
ராசி நேயர்களுக்கு சனி 4ல் ஆட்சி பெற்று
காணப்படுவதும் , 11ல் கேது இருப்பதும் , 11ல் உள்ள கேதுவை குரு பார்ப்பது
கேள யோகத்தை ஏற்படுத்தும்.புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அதனால் உங்களின் திறமை வெளிப்பட்டுப் பெயர், புகழ்
செல்வாக்கு உயரும். கலைத்துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து செயல்களையும்
நேர்த்தியுடன் முடிப்பீர்கள். புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள்.
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவீர்கள்.நல்ல வருமானம் ஏற்படும். உங்கள் பெயர்
புகழ் நன்கு பரவும்.
விருச்சிக ராசிக்கு கிரஹ நிலைகள்
-01-05-2024 முதல் மே 13, 2025 வரை
விருச்சிகராசி நேயர்களுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு
கோச்சாரம் நன்றாக இருக்கிறது.
7ல் குரு , 5ல் ராகு , 11ல் கேது , 4ல் சனி ஆட்சி
சச யோகம மற்றும் ஜலதி யோகம் தருகிறது.
கோச்சாரத்தில் 5ல் ராகு
ராகு 5ம் இடத்திற்க்கு வரும்போது எதிர்பாராத பணவரவு
வரும். நல்ல வருமானம் வரும். நுண்ணறிவை காட்டும்
இடம் என்பதால் முடிவு எடுக்கமுடியாத நிலை ஏற்படும். வம்பு வழக்குகள் வரும். கணவன் மனைவி
உறவுகள் நல்லவிதமாக இருக்காது. சனி கிழமைகளில் நவ கிரஹங்களில் உள்ள ராகு பகவானுக்கு
நெய் தீபம் அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்கள் ஏற்படும்.
குரு 7ல் கோச்சாரத்தில் இருப்பது
இன்ப வாழ்வு, தெளிந்த அறிவு, இனிமையான பேச்சு, தாரள
பணவரவு ஏற்படும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சி , கணவன் மனைவி அன்னியோன்யம் ஆகியவை உண்டாகும்
சனி 4ல்
சனி 4ல்
இருக்கும் பொழுது 4ம் அதிபதி சனி 4ல் ஆட்சி ஜலதி யோகம் :- நான்காம் அதிபதி ஆட்சி ஸ்தானத்தில் பலம் பெற்றிருந்து
ஆடையாபரண அலங்காரப் பிரியராக இருப்பார்கள்., வாகன சுகம் , உறவினர்களின் ஆதரவு தாய் நலம் உள்ளவராகவும் , அரசர்களால் மதிக்கப்படத்தக்கவராகவும்
தர்ம காரியங்களில்ஈடுபட்டு நற்பெயரை அடைவார்
. ஆயினும் அர்த்தாஷ்டம சனி நடை பெறுவதால் வரவுக்கு மீறிய சிலவுகள் உண்டாகும். உடல்
ஆரோக்கியம் பாதிக்க படலாம். சனி கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடலாம்
அல்லது அர்ச்சனை செய்து வழிபடலாம்.
கேது 11ல் கோச்சாரத்தில் இருப்பது
தொழிலில் வருமானம் வரும். திடீர் பணவரவு இருக்கும்.
கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உங்களின் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இரு்க்கும்.
வீட்டில் சந்தோஷம் இருக்கும்.
விருச்சிக ராசிக்கு குரு பகவான்
7ல் சஞ்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும்
தீமைகள்
1.திருமண தாமதத்தை சந்தித்த விருச்சிக ராசி நேயர்கள்
தற்சமயம் திருமணம் நடைபெறும்
2.உங்களின் பொருளாதார நிலை உயரும் . தொழிலில் வெற்றியை
குவீப்பீர்கள்
3.புதிய வாய்ப்புகள் , தொழில் விரிவாக்கமும் அமையப்பெறும்
4.பணியிடத்தில் உத்யோக உயர்வு மற்றும் பாராட்டும் கிட்டும்
5.கணவன் மனைவி உறவு மிகவும் அற்புதமாக இருக்கும்.
6.தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள்.
7.புதிய சொத்துக்களை வாங்கும் காலம் இது.
8.பூர்வீகச் சொத்துக்களில் இருந்த வில்லங்கம் விலகும்
9.சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு
கிடைக்கும்.
10.வேலை காரணமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல நேரிடும்
11.குரு பகவான் 11ம் இடத்தை பார்ப்பதால், பறிபோன பதவி மீண்டும் கிடைக்கும்
12.மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும், அறிவித்திறன்
அதிகரிக்கும்.
பரிஹாரம்
விருச்சிக
ராசி நேயர்களுக்கு சனி 4ல் சஞ்சரிக்க இருப்பதால் , அர்த்தாஷ்டம சனி என்பதால் ,சனிக்கிழமைகளில்
கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர
நன்மையான பலன்களே உண்டாகும்.
ராகு பகவான்
5ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் , சனிக்கிழமைகளில் கிழமைகளில் உங்கள் வீடு அருகில்
உள்ள நவகிரஹங்களில் உள்ள ராகு பகவானுக்கு
நெய் தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை
செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.
தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை
1 மற்றும் 4ம் அதிபதி
தனுசு ராசிக்கு குரு பகவான் 1ம் மற்றும்
4ம் வீட்டிற்கு அதிபதி ஆவார். குரு
பகவான் 6ம் வீட்டில் சஞ்சரிக்க்க இருக்கிறார்..
இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சஞ்சரித்து
வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ருண ,ரோக , சற்று சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். தனுசு ராசிக்கு
குரு பகவான் 6ம் இடத்தில இன்னும் ஒரு வருட காலத்திற்கு சஞ்சரிக்க இருக்கிறார்.
இதுநாள் வரை 5ம் இடத்தில் இருந்த
குரு பகவான் உங்கள் தொழிலில் வளர்ச்சி
, வேலையில் முன்னேற்றம் போன்ற அனுகூலமான பலன்களை தந்து இருப்பர். ஆனால் தற்சமயம் 6ல் சஞ்சரிக்க
இருப்பதால் கடன் வாங்கும் நிலையை ஏற்படுத்துவார்.
எதிரிகளின் கை ஓங்கி இருக்கும். இன்னும் ஒரு வருட காலத்திற்கு சிறிய சங்கடங்களை சந்திக்க
நேரிடும்.
இனிமேல்
தனுசு ராசிக்கு 6ம் வீட்டில் சஞ்சரிக்க
இருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10,12,2ம் இடத்தை பார்வை இடுவார்.
No comments:
Post a Comment