Monday, August 5, 2024

பரசுராம அவதாரம்,ஜமதக்னி முனிவர்,காசிபர், 108 சிவாலயங்ள்,பரசு(மழு)

 

பரசுராம அவதாரம் 

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரமாகும். இதில் அவர் ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாதேவிக்கும் குமாரனாகத் தோன்றினார். அவர் போர்க்கலையில் வல்லவராகத் திகழ்ந்தார். குறிப்பாக, வில்வித்தையில் அவரை விஞ்சியவர் எவரும் இல்லை.



காசிபர் என்ற முனிவர் அவரிடம் சென்று, அவர் அதுவரை வென்ற பூமியைத் தானமாகக் கேட்டார். ‘‘அப்படியே தந்தேன்’’ என்றார் பரசுராமர். பின்னர், காசிபர் அவரிடம் ‘‘நீ எனக்குத் தந்த பூமியை விட்டுச் செல்க’’ என்றார்.உலகை ஜெயித்து வைத்திருந்த பரசுராமர் எல்லா இடத்தையும் காசிபரிடம் கொடுத்து விட்டதால். அவர் மேற்கு மலைத் தொடர் மீது ஏறி நின்றார்.



கடல் ஆர்ப்பரிப்பதைக் கண்டார். தனது கொடிய பரசு(மழு) ஆயுதத்தை வீசிக் கடலிடம் ‘‘விலகிச் சென்று புதிய நிலப் பகுதியை அளிப்பாய்’’ என்றார். கடலரசன் நேரில் வெளிப்பட்டு, புதிய நிலப்பரப்பை அளித்ததுடன் அளவற்ற செல்வங்களைக் கொண்டுவந்து நிறைத்தான்.அதைக் கண்டு மகிழ்ந்து பரசுராமர், புதிய உலகைப் படைத்தார். அதில் மகாதேவரான சிவபெருமானை வழிபடும் பொருட்டு 108 சிவாலயங்களை அமைத்தார். காவல் தெய்வங்களாக அனேக பகவதி ஆலயங்களையும் அமைத்தார்.

No comments:

Post a Comment