Thursday, August 1, 2024

எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவகிரகங்கள் இருக்காது

 எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவகிரகங்கள் இருக்காது.. என்பதை..... பற்றி விளக்கும் எளிய கதை 🌹🌺

--------------------------------------------------------



🌹🌺 தமிழகத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சன்னிதி இடம் பெற்றிருக்கும்.

🌺நவக்கிரகங்கள் இல்லாத பிரசித்தி பெற்ற புராதன சிவாலயங்கள் கோளிலி தலங்கள் எனப்படுகின்றன.

🌺இத்தலங்களில் வணங்க எம வாதனை இருக்காது. வினைகள் அறும். முக்தி சித்திக்கும்

எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவகிரகங்கள் இருக்காது.

🌺திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நவகிரகம் இல்லை ஏனென்றால் அங்கு எமன் வந்து வழிபட்ட தலம்.

🌺திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

🌺ஸ்ரீவாஞ்சியம். இங்கு எமனுக்கு முக்கியத்துவம். இங்கு எமன் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.

🌺திருவாவடுதுறை. இங்கு எமன் சிவனை வழிபட்டதாக வரலாறுகள் உள்ளன.

🌺திருப்பைஞ்சீலி, வாழை மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட சிவஸ்தலம். திருச்சிக்கு அருகில் உள்ள இந்த தலத்திலும் நவகிரகங்கள் கிடையாது.

🌺திருக்கடையூர் மானிடர்களின் உயிரைப் பறித்த எமனுக்கு சிவன் இங்கு மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியதாக ஐதீகம்

🌺காளஹஸ்தி. பஞ்சபூத தலங்களில் இது வாயு ஸ்தலம். அங்கு ஒன்பது படிகள் கொண்ட தங்கஏணியில் ஒவ்வொன்றிலும் மூன்று மலர்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

🌺இந்த 3*9 என்பது 27 நட்சத்திரத்தைக் குறிக்கும். 27 நட்சத்திரங்களும் இந்த ஏணியில் ஆவாகனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏணி சிவலிங்கத்தின்மீது சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். அதைத் தீபாராதனை காட்டும் போது மட்டும் தான் பார்க்க முடியும்.



🌺திருமழபாடி. திருவையாற்றுக்கு அருகில் உள்ளது. அங்கும் நவகிரக சந்நிதி இல்லை.திருவெண்காடு. இங்கிருக்கும் நடராஜர் சிதம்பரத்தை விடப் பழமையானவர்.திருப்புறம்பியம். இங்கும் நவக்கிரகம் கிடையாது

No comments:

Post a Comment