Saturday, August 3, 2024

சதுரகிரி மலை,கோரக்கர்குகை,வருசநாடுபாதை,பச்சரிசிமேடு

 

சதுரகிரி மலை (நடை)
பயணம்

வாருங்கள் நண்பர்களே ,சிவ சொந்தங்களே உங்களை சதுரகிரி அழைத்துச் செல்கிறேன் கட்டுரையின் வாயிலாக

*சதுரகிரி* பற்றி சொல்ல வேண்டுமென்றால் எண்ணற்ற அதிசயங்களையும் எண்ணிலடங்கா சித்த பொக்கிஷங்களையும் புதைந்து வைத்துள்ள ஒரு மர்ம பூமியே இச்சதுரகிரி

நீங்கள் சதுரகிரி செல்ல வேண்டுமென்றால் அ(சி)வன் அழைபின்றி அணுவும் அசையாது என்பது போல் சதுரகிரியார் அழைப்பின்றி

மழை பயணம் தொடங்கவே முடியாது நீங்கள் சதுரகிரி செல்ல வேண்டுமென்றால் யாரோ ஒருவர் மூலம் உங்களுக்கு சதுரகிரி யாத்திரை செல்ல மகாலிங்கம் உணர்த்துவார் ஏதோ ஒரு ரூபத்தில் அப்படித்தான் நீங்கள் தொடரும் சதுரகிரி மலை பயணம் பிள்ளையார் சுழி போடப்பட்டு யாத்திரை தொடங்கும்.

நீங்கள் எத்தனை முறை நினைத்தாலும் திட்டம் வகுக்கப்பட்டாலும் அ(சி)வன் உத்தரவின்றி ஒருநாளும் நீங்கள் மலையேற முடியாது

அப்படித்தான் சதுரகிரி மலைப்பயணம் செல்ல வரும் ஒவ்வொரு பக்தர்களின் நீங்கா நினைவுகளோடு பயணம் தொடங்கப்பட்டுள்ளது அவ்வாறு தொடங்கும் பயணமானது காலையில் ஆறு மணிக்கு தொடங்கும் மலையேற்றம் ஒவ்வொருவருக்கும் சிலிர்ப்போட்டும் பயணமாக தொடங்கப்படுகிறது முதல் முறையாக பயணம் தொடங்கும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் மனதில் ஏற்படும் குழப்பங்களும் அவரவர் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களுக்கும் மலையேற்றம் ஏற ஏற அவர்களின் துன்பங்களும் துயரங்களும் காணாமல் போய்விடும் சதுரகிரியில் எழில் மிகு தோற்றம் மலை ஏற்றம் செல்ல செல்ல இனிமையான பயணமாக தொடங்கும் வழியில் வரும் பக்தர்கள் ஜாதி மத பேதம் இன்றி ஒவ்வொருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொண்டு இன்னும் சில தூரமே கோவில் இருக்கிறது இன்னும் சில நிமிடமே நடந்தால் கோவில் வந்து விடும் என்றும் கூறும் ஆறுதல் வார்த்தைகள் நாம் மலையேற உந்து சக்தியாக நடை பயணம் தொடரும் 

முதன்முதலாக மலை ஏறும் ஒவ்வொரு யாத்திரிகர்களுக்கும் நீண்ட தூரம் நடக்க வேண்டும் காட்டு விலங்குகள் தாக்கும் மலை அருவியில் அடித்துச் செல்வோம் என்று தவறான வதந்திகள் மூலம் அவரவர் கேட்டறிந்த அவரவர் பயணத்திற்கு ஏற்ற விளக்கங்களை மலையேற ஏற காதில் கேட்டுக் கொண்டே செல்லலாம் இவ்வாறு நடை பயணம் தொடங்கும் பொழுது வழிநெடுகை மூலிகைகளையும் வழியெங்கிலும் உள்ள வழித்துணை கோவில்களும் சிற்றோடைகளையும் கடந்து செல்லும் பொழுது நாம் மனதில் ஏற்படும் எண்ணிலடங்கா ஆனந்தம் புத்துணர்ச்சி பெற்று மலையேற நம் மனது திடமாகி மலை ஏற தொடங்குவோம் நீண்ட நொடிய தூர மலை ஏற்ற பயணமான இச்சதுரகிரி பயணத்தில் ஒவ்வொரு பக்தர்களும் தங்களுக்கே உரித்தான தாங்கள் சென்று வந்த அனுபவங்களையும் காட்சிகளையும் செவி வழியே கேட்டறிந்து நம் அவர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும் மனதிற்கு தெம்பூட்டும் விதமாக மலையேற்றம் தொடங்கும் நமது சதுரகிரியில் சித்தர்களின் எண்ணற்ற அமானுஷ்யங்களும் எண்ணற்ற மூலிகைகளும் புதைந்து கிடக்கும் மர்ம காடு தான் இச்சதுரகிரி

வாருங்கள் அடிவாரத்தில் இருந்து தொடருவோம் பயணத்தை..........

பெரும்பாலும் இப்பயணம் ஆனது பக்தர்களுக்கு பரிச்சயமான பாதை தான் நாம் காணப்போகும் *தாணிப்பாறை* சதுரகிரி கோவில் பாதை

சென்னை ,கோவையில்,பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மதுரை மார்க்கமாக இருந்து வருபவர்கள்

மதுரை மாட்டுத்தாவணி திருமங்கலம் டீ கல்லுப்பட்டி வழியாக வந்து கிருஷ்ணன்கோவில் பஸ் ஸ்டாப்லருந்து

இறங்கி பயணமானது வத்ராயிறுப்பு எனும் ஊரில் இருந்து சில கிலோ மீட்டர் துரத்தில்

தாணிப்பாறை மலை அடிவாரம் சென்றடையலாம்

ஆட்டோ கார் பஸ் மூலமாக மலையேற்றம் தொடங்கும் இடத்தை அடையலாம்.

தானிப்பாறை அடிவாரத்தில் *திருக்கோவில்* நிர்வாகத்தின் சார்பாக போடப்பட்டிருக்கும் *நுழைவாயிலுக்கு* முன்பாக

*தகவல்மையத்தில்* தங்களுக்கு தேவையான உதவிகளையும் தகவல்களையும் பெறலாம் அங்கிருந்து மலை ஏற்றமானது *வனத்துறை* முகப்பு வாயிலில் இருந்து தொடங்கும் வனத்துறை வழங்கும் நுழைவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டு பயணம் ஆரம்பமாகும் ஒரு சில கிலோமீட்டர் பயணம் தொடங்கும் தருவாயில் சிறிய குன்றின் மேல் *விநாயகரும்*/ *காளியம்மானும்* அருள்பாலிக்கிறார்கள் ஒரு சில அடி எடுத்து வைத்த பின்பு இடது புறமாக நீரோடை சலசலப்பில் தொடங்கும் இடம் ஒரு சில நிமிடத்தில் வலது புறமாக *கருப்பணன்* கோயில் வணங்கி விட்டு மலையேற்றம் அங்கிருந்து படிவெட்டுகள் சில கடந்து இரக்கம் தொடங்கும் இடத்தில் *மாங்கனிஓடையை* கடந்து படிவெட்டுகள் முடியும் இடத்தில் படி வெட்டு பாறையேற்றம் கடந்த பின்பு வனத்துறை பாதுகாப்பு அலுவலகம் மற்றும் *சங்கிலிபாறை* ஏற்றம் வரும் நீரோடைக்குள் கால்களை வைத்து நடக்கையில் நம் பாதம் மட்டும் குளிர்வது கிடையாது நமது உள்ளமும் சேர்ந்து குளிர்ந்த தருணத்தை கடந்து மலை ஏற தொடங்குவோம்.

சில மணித்துளிகள் நடந்த பின்பு இளைப்பாறுவதற்கு *வாகைமரம்* எனும் இடத்தில் ஓய்வு எடுத்த பின்பு மீண்டும் நம் பயணம் தொடரும், அங்கிருந்து அடுத்த மிக முக்கியமான இடமான *கோனைதலைவாசல்* எனும் இடம் மழையேற்றத்தின் முக்கியமான இடம் கொஞ்சம் பக்தர்கள் சிரமப்பட்டு ஏறக்கூடிய இடம் இந்த இடம் ஆகும் அடுத்தபடியாக அங்கிருந்து நாம் அடுத்த சந்திக்கவிருக்கும் இடம் *காராம்பசுதடம்* ஆதி காலத்தில் காராம்பசு நடந்து சென்று கால் தடம் பதியும் அளவிற்கு பாறையில் தன்னுடைய அடையாளத்தை விட்டு சென்றுள்ளது காராம்பசு வின் தடத்தில் வணங்கிவிட்டு கடக்கையில் நாம் சந்திக்கவிருக்கும் இடம் கோரக்கர் சித்தர் தவம் புரிந்த *கோரக்கர்குகை* 



ஈரோடில் இறங்கி கோரக்கரை தரிசனம் பெற்று நடைப்பயணம் தொடங்கும் சற்றே சில மைல்கள் கடந்து நாம் சந்திக்கவிருக்கும் இடம் இரட்டை மகாலிங்கம் சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து லிங்க வடிவமாக மக்களுக்கு அருள் பாலிக்கும் இடம்தான் *இரட்டைமகாலிங்கம்* சந்திப்பு இரட்டை லிங்கத்தை கடந்து மலையேற தொடங்க தொடங்க நாம் காணும் அரிய நீண்ட நெடிய மரங்களும் இயற்கை எழில் மிகு இயற்கை கொஞ்சம் காட்சிகளும் மனதிற்கு ஆறுதலாய் பாதி தூரம் கடந்த பெருமூச்சு உடன் பயணம் தொடங்கும் சில பல மயில் தூரம் கடந்து *சின்னபசுக்கடை* எனும் இடத்தை அடையலாம் இவ்விடம் மலைவாழ் மக்களும்,விவசாய பெருங்குடி மக்களும் கிடை மாடுகளை இளைப்பாற அமர்த்தும் இடம் ஆகும் முன் காலத்தில்.

அடுத்து நாம் சந்திக்கும் இடம் *நாவல்ஊற்று* நாவல் மரம் அடியில் சுவையான நீர் வருடத்தின் எல்லா நாட்களும் வற்றாத ஜீவ நதியாய் ஊற்றி தண்ணீர் வற்றாமல் இருந்து கொண்டே இருக்கும் நாவலூற்றில் தண்ணீர் அருந்தினால் நோய் நொடியின்றி வாழலாம் என்பது ஐதீகம்

அடுத்து நாம் மழையேற்றத்தில் சந்திக்கவிருக்கும் பாதியேற்றம் ஏறிவிட்டோம் என்ற இளைப்பாறுதல் கிடைக்கும் இடம் தான்

**வருசநாடுபாதை*

தேனி மாவட்டத்தில் இருந்து வரும் சதுரகிரி பக்தர்கள் உப்புத்துறை வழியாக மலை ஏற்றம் ஏறும் பக்தர்கள் இப்பாதையிலிருந்து இணையும் பாதை தான் வருசநாடு பாதையும் தாணிப்பாறை பாதையும் இணையும் இடம் ஆகும்.அடுத்து நாம் கடக்கவிருக்கும் பாதை பச்சரிசி மேடு இவ்விடம் கூழாங்கற்கள் பச்சரிசி போல் சிறு துளிகளாக மலையேற்றத்தில் இருப்பதால் இவ்விடத்திற்கு

*பச்சரிசிமேடு* என்று பெயர் பெற்றது

அடுத்து நாம் கடக்கவிருக்கும் பாதையில் ஓடையின் அருகில் *வனதுர்க்கை* எனும் அம்பாள் அருள் பாலிக்கும் இடம் ஆகும்

அடுத்து பெருமூச்சு விட்டு கோவிலின் அருகினில் செல்லச் செல்ல *யானை பாறையும், பெரிய பசுக்கிடையும்* கடந்த பின்பு நாம் சந்திக்கும் இடம் தான்

*பலாவடிகருப்பர் சன்னதி* சதுரகிரி மலையினையும், பக்தர்களையும் மலையில் உள்ள அறிய பொக்கிஷங்களையும், தைலகிணரையும்,

காத்தருளும் தெய்வமும்

மலையின் பாதுகாவலனாய் சதுரகிரியை பாதுகாக்கும் பலாவடி கருப்பணன் சுவாமி

கருப்பணசாமி கோவிலை கடந்து அங்கேயே குளித்துவிட்டு கடந்து செல்லும் பொழுது திருவிழா கடை போல் மழை மீது ஒவ்வொரு பொருட்களையும் தலைசுமையாக சுமந்து வந்து இம்மலையினில் நடப்பதே சிரமம் ஆனால் ஒவ்வொரு பொருட்களையும் கொண்டு வந்து கடைகளை அமர்த்தி பக்தர்களுக்கு வியாபாரம் செய்யும் சதுரகிரி அதன் சுற்றியுள்ள வியாபாரிகளுக்கு கோடான கோடி நன்றிகள் மலையற்றதின் பின்பு வலது புறமாய் நுழைவாயிலின் கடந்து வலது புறம் சதுரகிரி சுந்தரமூர்த்தி சன்னதியும் அகத்திய சித்தன் பூஜித்து பிரதிஷ்டை செய்த மகாலிங்கரின் துணைவராம் *சுந்தரமூர்த்தி* சன்னதி சில படிகள் ஏறி கடந்த பின்பு நமது 3 மணி நேர பயண களைப்பிற்கு பின்பு சாய்ந்த நிலையில் அருள்பாளித்துக் கொண்டிருக்கிறார் சதுரகிரி எனும் நாமத்தில் சுந்தர மகாலிங்கம் சுயம்புலிங்கம் அவரைக் கண்டதும் எண்ணிலடங்கா பேரானந்தமும் மகிழ்ச்சியும் மனதில் ஒரு புத்துணர்ச்சியும் எம்பெருமான் *சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தை* கண்டவுடன் ஆற அமர பொறுமையாக அவரை தரிசித்த பின்பு, மகாலிங்கரை தரிசித்து வலது புறமாக மேலே அமர்ந்திருப்பவர் இறைவி ஆனந்த வள்ளி அம்பாள் சன்னதி வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே புரட்டாசி மாத நவராத்திரி கொலு அன்று ஒன்பது நாட்கள் ஆனந்தவல்லி அம்பாள் கொலுவைத்து தங்க முலாம் பூசப்பட்ட விக்கிரத்தில் காட்சி தருகிறாள் நீதி நாட்களில் கொழுமண்டபம் புகைப்படமாக காட்சி தருகிறாள் 

அம்பாள் அங்கிருந்து கீழே இறங்கினால் அடுத்து நம் மலை ஏறி களைப்பினில் நம் மனதிற்கு பசி நீங்கி நம் வயிற்றுக்கு பசியாற திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பாகவும்,பரம்பரை அறங்காவலர் பன்னிரண்டாம் தலைமுறை குடும்பத்தின் சார்பாகவும் மூன்று வேலையும் அன்னதானம் நடைபெறுகிறது வயிரார சாப்பிட்டு இளைப்பாரி அன்னதானத்தை கூடத்தை கடந்து சென்று சாப்டூர் வழியில் மலை ஏறும் தொடக்கத்தில் அருள் பாலிப்பவர் *சதுரகிரி *சந்தனமகாலிங்கமும்* சந்தன விநாயகரும் சந்தன முருகனும் சந்தன மகா தேவியும்,18 சித்தர்கள் சிலைகளும்

சட்டநாத முனிவர்* தவம் செய்த குகையையும் தரிசனம் செய்து நமது பயணத்தை நிறைவு செய்யலாம்.

No comments:

Post a Comment