Search This Blog

Monday, August 5, 2024

திருச்சுழி பூமிநாதர் திருக்கோயில் அருப்புக்கோட்டை,பச்சிலை மூலிகை நடராஜர்,திருமண தடை நீங்க

 

திருச்சுழி பூமிநாதர் திருக்கோயில்

புனித ஸ்தலங்களான காசி, இராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக திகழும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி பெயர் உருவாகிய காரணம் குறித்து விளக்குகிறது இந்த குறித்த செய்தி தொகுப்பு



விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழியில் புண்ணிய ஸ்தலமான பூமிநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும், மௌனமே அடையாளமாக திகழ்ந்த உலகம் போற்றிய ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி பிறந்த புண்ணிய பூமியும் இதுவாகும்.

பெருவெள்ளம்

சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை திரிசூலத்தினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு யுகத்திலும் இவ்வூரில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உண்டாவதுண்டு. துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த பாண்டிய மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற சிவபெருமானை வேண்டினார்.

திருச்சுழியல்

அவனது வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவனும் தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்தார். சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் “சுழி” என்று பெயர் பெற்றுப் பின்னர் “திரு” எனும் அடைமொழி சேர்ந்து “” ஆயிற்று என் தலபுராணம் விவரிக்கிறது. இந்த ஊரின் முழுப்பெயர் திருச்சுழியல் எனவும் கூறப்படுகிறது.

இத்தல இறைவனை சிவராத்திரி அன்று, ஒரு வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால், உலகம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்ட, அர்ச்சனை செய்த பலன்.

சிவராத்திரி

இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அவர் இங்கு திருமணக் கோலத்தில் அருள்கிறார். எனவே இங்கு வந்து திருமணம் செய்து கொள்வதை மக்கள் பெரும் பாக்கிஎல்லா இடங்களிலும் செய்த பாவங்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டால் நீங்கும்.

மோட்ச தீபம்

ஆனால் இந்த ஊரில் செய்த பாவம், இங்கின்றி வேறு எங்கும் தீராது. இறந்தவர்களுக்கு அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றும் வழக்கம் இந்த ஆலயத்தில் இருக்கும் சிறப்பாகும். அப்படி இறந்தவர்களுக்காக அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றினால், இறந்தவர்களின் பாவங்கள் களையப்பட்டு, அவா்கள் 21 பிறவியைக் கடந்து சிவகதி அடைவார்கள்.

இறந்தவரின் பெயரில் அர்ச்சனை செய்து அவரது ஆன்மா மோட்சம் அடைய வழிபடும் ஒரே தலம்.

🌷
பச்சிலை மூலிகைகளால் ஆன நடராஜர் அருளும் தலம்.

🌷
 சன்னதியில் மேல் பகுதியில் ஸ்ரீசக்கரம் வடிவில் வழிபடப்படும் அம்மன்

🌷
21 தலைமுறை பாவங்களை போக்கும் தலம்.

🌷
 தீராத நோய்களைத் தீர்க்கும் பச்சிலை மூலிகை நடராஜர்.

🌷
 நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் பூமிநாதர்

🌷
 திருமண தடை நீங்க வழிபட வேண்டிய சக்தி வாய்ந்த பரிகார தலம்.

🌷
 வாஸ்து பிரச்சினை நிவர்த்தி தலம்.

🌷
ரமண மகரிஷி பிறந்த தலம்.

திருச்சுழி திருமேனிநாதர் கோவிலுக்கு எப்படிப் போவது?

மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை சென்று அங்கிருந்து 15 கி.மி. தொலைவில் உள்ளது. மதுரை, அருப்புக்கோட்டையில் இருந்து நேரடி பேருந்து வசதிகள் இருக்கின்றன. மதுரையில் இருந்து காரியாபட்டி வரை நகரப் பேருந்தில் சென்று, அங்கிருந்து மீண்டும் நகரப் பேருந்தில் திருச்சுழி வரை செல்லலாம். மதுரை – காரியாபட்டி – திருச்சுழி தான் நேர் வழி. மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை சென்று பின் திருச்சுழி செல்வது சுற்று வழியாகும்.

No comments:

Post a Comment