Search This Blog

Saturday, December 17, 2022

ராஜலக்ஷண யோகம்

 ராஜலக்ஷண யோகம்

ராஜ லட்சண யோகம் . இந்த யோகம் அமையப்பெற்றவர்கள், அழகான உடல் அமைப்பும், நல்ல முகப் பொலி வையும் பெற்றிருப்பார்கள் என்ற நிலையில்,

முக்கிய விதிகள்

இயற்கை சுபக்கிரகங்களான குரு, சுக்ரன், புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சந்திரன் நின்ற இடத்திலிருந்து (ராசியிலி ருந்து) அல்லது லக்னத்திலிருந்து 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்க ளில் தனித்தனியாகவோ, இணைந் தோ அல்லது வரிசையாகவோ அமர்வதன் மூலம் இந்த யோகம் உருவாகிறது.

யோகத்தின் பலன்கள்

சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க வாழ்வை அளிப்பதில் இந்த யோகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்துடன், பிறப்பு ஜாதக ரீதியாக திசா-புத்தி உள்ளிட்ட மற்ற அம்சங்களும் பலமாக அமையப்பெற்றவர்கள் ஆட்சி, அதிகாரம் கொண்ட பதவிகளைப் பெறுவார்கள் என்ற அடிப்படையில் ஜோதிடம் இந்த யோகத்தை ராஜ லட்சண யோகம் என்று குறிப்பிட்டுள்ளது.

பகை அல்லது நீச்சம்

இந்த நான்கு கிரகங்களில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ பகை அல்லது நீசம் பெற்றிருக்கும் நிலையில் சிறப்பான பலன்கள் கிடைக்க வாய்ப்பில்லை. இந்த யோகத்தைப் பொறுத்தவரையில் கிரகங்கள் எந்த அளவுக்கு பலம் வாய்ந்ததாகவும், மற்ற அசுப கிரகங்களின் தாக்கத்திலிருந்து விலகி இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்கும்

இந்த யோகம் ஏற்பட அடிப்படை விதிகள்

1.வியாழன், புதன், சுக்கிரன், சந்திர ன் ஆகிய நான்கு கிரகங்களும் பலம் பெற்று கேந்திர வீடுகளில் அமையும் போது இந்த யோகம் உண்டாகும்.

2. ஏதேனும் 1 அல்லது ஏதேனும் 2 அல்லது 3 கிரகங்கள் மட்டுமே பலன் அளிக்கும் பட்சத்தில், அனைத்து 4 கிரகங்களும் பலனளிக்கவில்லை என்றால், இந்த யோகம் அதன் மொத்த பலனைத் தராது.

3.இந்த வீடுகளில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் பகை பெற்று இருந்தால் யோகம் வேலை செய்யாது

4.இந்த யோகம் ஜாதகத்தில் இருக்குமானால் , இந்த கிரகங்கள் எந்த நட்சத்திர சாரம் பெற்று உள்ளன என்பதை கணிக்க வேண்டும். . பாப கிரஹங்களின் சேர்க்கை உள்ளதா ? என்பதை பார்க்க வேண்டும் .

5. குரு ,புதன் ,சுக்கிரன் நீச்சம் , வக்கிரம் , அஸ்தங்கம் அடைந்து இருக்க கூடாது . அத்தகைய அமைப்பு இந்த யோகத்தின் வீரியத்தை குறைக்கும்.

6. யோக பலத்தை அறிய முழு ஜாதகத்தை அலசி ஆராய வேண்டும்.

7. நவாம்சத்தில் இந்த சுபர்களின் நிலை என்ன என்று அறிய வேண்டும்

8. இந்த யோகம் அமைந்து , புதன் அல்லது சுக்கிரன் அல்லது குரு தசை நடக்கும் பொழுது யோகம் நன்றாக வேலை செய்கிறது . இவர்கள் பகை பெறக்கூடாது . நட்பு அல்லது சமம் சாரம் பெற வேண்டும்.

9.தேய்பிறை சந்திரன் என்றால் இந்த யோகம் முழுமையான பலன்கள் அளிக்காது

இந்த யோகத்தின் பலன்கள்

1. ஜாதகருக்கு மிகுந்த தன்னம்பிக் கை ஏற்படுத்தி தரும்.

2. எடுத்த காரியங்களில் வெற்றி யை தரும்

3. இவர்கள் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டார்கள்

4. இவர்கள் மிகவும் அழகாகவும் , மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் ஆற்றலை பெற்றவர்கள்.

5. இவர்கள் ஆரோக்கியமான உடலமைப்பும் , நீண்ட ஆயுளை யும் உடையவர்கள்

6. இவர்கள் சொத்து , சுகத்துடன் வாழ கூடியவர்கள்

7. இவர்கள் தங்கள் தாயின் மீது மிகுந்த பாசம் உள்ளவர்கள்

8. இவர்கள் பெரும்பாலும் காதல் திருமணம் செய்வார்கள். இவர்கள் இல்வாழ்வு நல்வாழ்வாக அமையு ம்

9. இவர்கள் உயர்ந்த பதவிகளை அலங்கரிப்பார்கள்

10. இவர்கள் சமுதாயத்தில் புகழ் , மதிப்பு , மரியாதை எளிதாக அடைவார்கள்

ஜாதகம் பார்க்க என்னுடைய whatsup No 7904719295 இதில் உங்களுடைய பிறந்த தேதி மாதம் வருடம் பிறந்த ஊர் , பிறந்த நேரம் அனுப்பவும். நான் போனில் உங்களிடம் அரை மணி நேரம உங்கள் ஜாதக பலன்களை விரிவாக அலசுவேன் 35 பக்க உங்கள் ஜாதகம் மற்றும் நான் சொல்லும் பலன்கள் அனைத்த்தும் தமிழில் உங்களுக்கு அனுப்பி வைக்கபடும். கட்டணம் உண்டு . இலவசம் இல்லை நன்றி ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

May be an image of text that says "லக்கினம் கேது சனி ராஜ லட்சண யோகம் சந்திரன் சுக்கிரன் குரு 1-11-1991 ராகு புதன் சூரியன் செவ்வாய்,"

No comments:

Post a Comment