பெண் ஜாதகத்தில் களத்திர ஸ்தானாதிபதி, களத்திர பாவகம், சுக்ரன் ,இந்த மூன்றும் கெடாமல் இருந்து ,சுக்கிர திசை 10 வருடங்களுக்கு மேல் நடந்தும் ,திருமணத்தை ஏன், இந்த ஜாதகருக்கு கொடுக்கவில்லை?
இது ஒரு பெண் ஜாதகம்.
ரிஷப லக்னம். மீன ராசி. லக்கினாதிபதி வலு
லக்னத்தில், லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சி. லக்கினாதிபதி மற்றும் களத்திர காரகர் சுக்கிரன் மிகவும் வலுவாக உள்ளார்.
7ம் இடத்திற்கு குரு பார்வை
ஏழாம் பாவகத்தை லக்னாதிபதி சுக்கிரனும், 3ம் இடத்தில் உச்சம் பெற்ற குருவும் பார்க்கிறார்கள். ஏழாம் பாவகத்திற்கு பாவ தொடர்பே இல்லை.ஏழாம் இடம் மிக மிக சுத்தம்.
பரிவர்த்தனை யோகம்
ஏழாம் அதிபதி செவ்வாய், கேதுவோடு இணைந்தாலும் ,டிகிரிபடி 17 டிகிரி தள்ளியே உள்ளது. 7ம் மற்றும் 12ம் அதிபதி ஆன செவ்வாயும் மற்றும் 2 மற்றும் 5 ம் அதிபதியான புதனும் பரிவர்த்தனை மூலம் ஆட்சியாக இருக்கும் நிலை.
ஏன் திருமணம் ஆகவில்லை?
எல்லாம் நன்றாகத் தானே உள்ளது .ஏன் திருமணம் ஆகவில்லை என்ற கேள்வி உங்களில் பலருக்கும் எழும்.
எல்லாம் சரியாகத்தான் உள்ளதா?
இளமையில் திருமணம் நடக்க கிரஹ அமைப்பு
ஒரு திருமணம் நடக்க, ஏழாம் பாவகம், ஏழாம் பாவக அதிபதி, சுக்கிரன் இந்த மூன்றும் நல்ல நிலையில் இருந்து, தசை நடத்தினால் நிச்சயம் திருமணமாகும் என்பதை நாம் அறிவோம்
சுக்கிரன் தசை
லக்னாதிபதியான சுக்கிர திசை நடக்கிறது. சுக்கிரனே ஒரு மனிதனுக்கு தேவையான காதல், திருமணம், காமம் இந்த மூன்று விஷயத்தையும் கொடுக்க கடமைப்பட்ட கிரகம்.இந்த ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டுள்ளார். அவர்தான் திருமணத்தை தடை செய்கிறார்.அது எப்படி என்று பார்ப்போம்.
சுக்கிரன் வாங்கிய சாரம்
சுக்கிர திசை இப்பெண்ணிற்கு, திருமண வயதைக் ஒட்டிய 19 வயதில் தொடங்கி ஆயிற்ற .சுக்கிரனின் காரகத்துவமான காதல், திருமணம் ,காமம் தற்போ து வரை இப்பெண்ணிற்கு மறுக் கப்படுகிறது.
லக்னத்தில் சுக்கிரன் தனித்து, வேறு பாவ கிரக தொடர்பு இல்லாமல் ஆட்சியாக தோன்றினாலும், சுக்கிரன் வாங்கிய நட்சத்திர சாரம் என்பது கார்த்திகை நட்சத்திர சூரிய சாரம். சூரிய சாரம் சுக்கிரனு டைய பகை சாரம் .
அமாவாசை யோகம்
சாரம் கொடுத்த சூரியன், சந்திரனுடன் 12 டிகிரிக்குள் இணைந்து ,அமாவாசை அமைப்பை பெற்றுள்ளது. செவ்வாயின் பார்வையைப் பெற்ற சனி, மேலும் கெட்டு, அந்த சூரிய சந்திரனை பார்க்கிறார்.சாரம் கொடுத்த சூரியனின் காலில் சுக்கிரன் நின்று திசை நடத்துகிறது.
வரன் அமைய தாமதம்
சுக்கிர திசை ஆரம்பித்த உடன் ,படித்துக் கொண்டிருந்த பெண்ணிற்கு சுக்கிர திசை சுக்கிர புத்தி முடிந்து , வரன் தேட ஆரம்பிக்கும் போது, சூரிய சந்திர செவ்வாய் புத்திகள் என அடுத்தடுத்து அவயோக புத்திகள் தொடர்ந்தன.திருமணம் ஆகவில்லை.
சனி வாங்கிய சாரம்
ரிஷப லக்னத்திற்கு குரு கடுமையான கெடுபலனை தரக்கூடிய கிரகம்.குருவின் வீட்டில் அமர்ந்த ராகுவும் திருமணத்தை தரவில்லை. குருவும் தரவில்லை.தற்போது நடக்கும் சனியும் தரப்போவதில்லை.ஏன்?
ரிஷப லக்னத்திற்கு சனி, முழு யோக கிரகமாகிற்றே என்ற கேள்வி எழும்.ஆம் யோக கிரகம் தான். ஆனால் சனி வாங்கிய சாரம் சந்திரனின் திருவோணம். சந்திரன் சனிக்கு பகை சாரம் .
சரி திருமணம் நடக்குமா? நடக்காதா? எப்பொழுது நடக்கும்?
நிச்சியம் நடக்கும்.சுக்கிர திசை புதன் புத்தியில் தான் இப்பெண்ணிற்கு திருமணம் நடைபெறும் .
களத்திர ஸ்தான அதிபதியான செவ்வாயும், குடும்பம், குழந்தை ஸ்தான அதிபதியான புதனும் பரிவர்த்தனை.
உச்ச குரு ஏழாம் இடத்தை பார்க்கிறார்.புதன் கேது சாரம் .கேது செவ்வாயை போல் செயல்படும் என்ற விதியின் அடிப்படையில், சுக்கிர தசை புதன் புத்தியில் தான் இப்பெண்ணிற்கு திருமணம் நடைபெறும் .
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பு. காரணம் .ஏழாம் அதிபதி பரிவர்த்தனை மூலம் ஆட்சியாக இருப்பதாலும் ,அம்சத்தில் உச்சம் பெற்றுள்ளதாலும் , லேட்டாக திருமணம் அமைந்தாலும் ,நல்ல யோகமான திருமண வாழ்வை கொடுக்கும்.
புதன் புத்தியில் திருமணம் முடிந்து, புதன் புத்தி முடிவதற்குள் கையிலோ அல்லது வயிற்றிலோ குழந்தை இருந்து குடும்ப அமைப்பை உருவாக்கியே தீரும்.
பரிஹாரம்
ஸ்ரீரங்கம் சென்று வருவதும் ,தினசரி சூரிய வழிபாடும் மற்றும் பௌர்ணமி விரதம் இருப்பதும் தோஷத்தை குறைத்து, நல்ல வரன் அமைய வழிவகுக்கும்.
நல்ல சாரம்
நல்ல யோகமான திருமண .வாழ்வு அமைய 7ம் அதிபதி நல்ல சாரம் வாங்க வேண்டும். சுக்கிரன் நல்ல சாரம் ஆக வேண்டும். நடப்பு தசாநாதனும் நல்ல சாரம் வாங்க வேண்டும். அப்பொழுதுதான் இளமையில் திருமணம் ஆகும் என்பதை உணர்த்த தான் இந்த பதிவு
உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment