Search This Blog

Tuesday, March 21, 2023

களத்திர தோசம் என்றால் என்ன ? களத்திர தோஷம் அமைய ஜாதகத் தில் உள்ள கிரஹ நிலைகள் என்ன ?

களத்திர தோசம் என்றால் என்ன ? களத்திர தோஷம் அமைய ஜாதகத் தில் உள்ள கிரஹ நிலைகள் என்ன ?


களத்திர தோசம் என்பது திருமண தாமதம், திருமணம் அமையாத நிலை, திருமணம் நடந்தும் பிரச்சனைகள், பிரிவு, மறுமணம் ஆகியவையே.

1) களத்திர காரகன் சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சம் பெறக்கூடாது .

2.களத்திராதிபதியம் கன்னியில் அமரக்கூடாது அல்லது நீச்சம் பெறக்கூடாது.. அது களத்திர தோஷத்தை உண்டு பன்னும்.

3.7ம் அதிபதியை விட 11ம் அதிபதி பலம் பெற்றால் மறுதார அமைப் பை ஏற்ப்படுத்தி விடும். 11ம் இடம் மறுதாரத்திற்க்குரிய இடம். 11ம் இடம் 7 க்கு 5ம் இடமாக அமைவ தால் இந்த நிலை ஏற்படும்.

4. சனி பகவானும் மற்றும் சந்திரனும் சம சப்தமாக இருந்தாலும் - சனிபகவான் கடகத்தில் அமர்ந்தாலும் சந்திரன் மகர கும்பத்தில் அமர்ந்தாலும், இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் களத்திர தோசத்தை உண்டு பன்னுவார்கள். காலம் க்டந்த திருமணம், திருமணம் நடக்காத நிலை, திருமணம் நடந்தாலும் சன்னியாச வாழ்க்கை தான்.

5.களத்திர ஸ்தானத்திற்கு (அ) களத்திர ஸ்தான அதிபதிக்கு (அ) களத்திர காரகன் சுக்கிரனுக்கு முன் பின் பாப கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டால் களத்திர தோசம் அமைப்பு ஏற்படுகிறது.

6. குடும்ப ஸ்தனனமான 2ல் வக்கிரகிரகங்கள் இருந்தாலும், 2ம் இடத்தை வக்கிரகிரகங்கள் பார்த்தாலும், 2ம் அதிபதி பகை நீசம் பெற்று கெட்டிருந்தாலும் குடும்பம் அமைவதை தடை செய்யும், திருமணம் கால தாமதமாகும்.

7. மூன்று கிரஹ கூட்டணி - சூரியன், புதன், செவ்வாய் கிரஹ கூட்டணி பல தாரத்தை உண்டு பண்ணும்.

பொதுவாக ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளதா ஏஎன்பதை அறிய களத்திர காரகன் சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதி, சந்திரனுக்கு 7ம் இடத்ததிபதி, சுக்கிரனுக்கு 7ம் அதிபதி ஆகிய அனைவருக்கும் களத்திரத்தில் பங்கு உண்டு. இவர்களின் அனைவரின் ஜாதகத்தில் உள்ள நிலையை நன்கு ஆராய வேண்டும்

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment