அஷ்டம சனி மற்றும் குரு 10ல் இருப்பதால் அவதிப்படும் கடக ராசி நேயர்கள்
மிதுன ராசிக்கு இனி விடுதலை
கடந்த இரண்டரை வருடங்களாக அஷ்டம சனி மற்றும் கடந்த 1 வருடமாக குரு 10 ல் கோச்சா ரத்தில் அமர்ந்ததால் , பல்வேறு சோதனைக ளை சந்தித்த மிதுன ராசி நேயர்களு க்கு இனிமேல் விடிவு காலம் . 10ல் குரு இருந்த பொழுது வேலை போன மிதுன ராசி நேயர்களுக்கு இனிமேல் நல்ல நேரம் . நல்ல வேலை கிடைக்கும். தொழில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த மிதுன ராசி நேயர்களுக்கு இனிமேல் நல்ல நேரம் .
கடக ராசி - கோச்சாரத்தில் அஷ்டம் சனி மற்றும் குரு 10ல்
ஆனால் , கடக ராசி நேயர்களுக்கு இந்த கால கட்டம் மிகவும் சோதனை யான கட்டம். ஏனென்றால் , கோச்சா ரத்தில் அஷ்டம் சனி மற்றும் குரு 10ல் இருப்பதால் மிகவும் சோதனையா ன கால கட்டத்தை கடந்து வரவேண்டும்
கடக ராசிக்கு கோச்சாரத்தில் குரு 10ல்
ஈசனார் ஒரு பத்திலே தலையோ ட்டிலே யிரந்துண்டதும்
சர்வேஸ்வரனுக்கு கோச்சாரத்தில் குரு 10 ல் வந்தபொழுது அவர் தலையோட் டில் பிச்சை எடுத்து வாழ நேர்ந்தது நேர்பாதி நாம் உணர வேண்டும் .
ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்
எந்த காரியத்திலும் யாரை நம்பியும் பணம் கடன் வாங்கி கொடுக்க வேண்டாம். முக்கியமா க ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அதிகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
விபத்துகள் நேரலாம் ஜாக்கிரதை
வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கை தேவை. உங்களுடைய உடல் ஆரோக்கி யத்தில் அக்கறை காட்டுங்கள். வயிறு பிரச்சினைகள் வரலாம். சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள்.
அஷ்டம சனி பாதிப்புகள்
அஷ்டம சனி நடக்கிறதென்றால் அந்த குடும்பத்தில் சிக்கல்களும், பிரச்சனை களும் மாறி மாறி வந்து கொண்டுதான் இருக்கும். தேவை இல்லாமலே சண் டைகள் உருவா கும்.
உங்கள் உறவினர்கள் மூலமாக பல குழப்பங்கள் ஏற்படும்.
அதுமட்டுமில்லாமல் வேலை செய்யும் இடங்களில் பிரச்சனை, வேலை இடமாற்றம்,சிலருக்கு திடீரென வேலை பறிபோகுதல் இவ்வாறான நிலைமையும் உண்டாகும்.
சனி பிரீதி செய்து வந்தால் தீய பலன்கள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும்.
அரசு தண்டனை
சனி பாதிப்பால் ஒரு ஜாதகருக்கு ஆணவம் உச்சமடையும் இதனால் நல்லவன் கெட்டவனாக மாற்றும் அறிவு தலைகீழாக மாறும் .மூலை மங்கி மது, மாது, சூது, கொலை, கொள்ளை, என ஒருவர் வாழ்க்கை யே தலைகீழாக மாறும் பெரும்பா லும் சனி ஆதிக்கம் உள்ளவர்கள் அரசு தண்டனைக்கு ஆளாக வேண் டியது கட்டாயம் நேரிடும். போலீஸ் கோர்ட் வழக்கு எனக்கு பல பிரச் னைகளை சந்திக்க நேரிடும் என்று ஜோதிடம் கூறுகின்றது.
திருமண வாழ்க்கை
அஷ்டமத்து சனி இரண்டரை வருடங் கள் தான் இருக்கும் என்பதனால் கணவன் மனைவியிடையே வரும் பிரச்சனைகளை சற்றுப் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அப்படி எவரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்து சென்றால் அவர்களின் திருமண வாழ்க்கை நலமாக இருக்கும். ஆனால் ஆண், பெண் இருவருமே விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்தார்கள் என்றால் நிச்சயம் அவர்களின் திருமணம் விவாகரத்தில் தான் முடியும்.
கடக ராசிக்காரர்கள் அஷ்டம சனியில் என்ன செய்யலாம் ? என்ன செய்ய கூடாது ?
1.புதிய தொழில் ஆரம்பிக்க கூடாது.
2.செய்கின்ற தொழிலை பெரிது படுத்த கூடாது.
3.அதிக கொள்முதல் செய்தலும் பெரிய order எடுத்தலும் கூடாது.
4.தகுதிக்கு மீறி கடன் வாங்க கூடாது.
5.இருக்கும் வேலையை விடக்கூடாது.
6.வாழ்கை துணையின் தாயார் உடல்நலம் பாதிக்க வாய்ப்பு இருப்பதால் மருத்துவரின் ஆலோசனையை முன்கூட்டியே பெறுவது நல்லது.
7.இந்த அட்டம சனி காலத்தில் தந்தைக்கு ஏதோ ஒரு வகையில் பிரச்னை /மருத்துவ செலவு /கண்டம் போன்ற கெடு பலன் நடக்க இருப்பதால் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
8.வாழ்கை துணையின் வீடு மனை போன்ற அசையா சொத்துக்களில் பிரச்சனை வரும்.
9.வாழ்கை துணையின் வாகனம் செலவு வைக்கும். விபத்தில் சிக்கும்.
10.வருமான தடை
11.குடும்பத்தில் குழப்பம் சச்சரவு
12.தெரிந்த தொழிலும் கைகொடுக்காமல் போவது
13.கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத நிலை
குரு பகவான் 10ல் இருப்பதால் என்ன மாதிரியான கெடு பலன்கள் ஏற்படும் ?
1.இருக்கும் வேலையை விடக்கூடாது.
2.மேலதிகாரிகளை அனுசரித்து போகவேண்டும்
3.பதவி உயர்வு தடை ஏற்படும்
4.விருப்பமற்ற இடங்களுக்கு மாறுதல்
5.வேலை இழத்தல்
விதிவிலக்கு
ஒருவருடைய பிறந்த கால ஜாதகத்தில் உள்ள கிரக நிலைக்கு ஏற்ப /நடப்பு தசாவுக்கு ஏற்ப மேல சொல்லபட்ட கெடுபலன் கூடுதலகாவோ குறைவாகவோ பலன்கள் நடக்கும்
அஷ்டம சனி பரிகாரங்கள் :
1 தினந்தோறும் காலையில் குளித்துவிட்டு எள் கலந்த உணவை காகத்திற்கு வைக்க வேண்டும்.
2.வாரந்தோறும் சனிக்கிழமை யன்று சனிபகவானுக்கு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
3.மேலும், வன்னி மர இலைகளை மாலையாக தொடுத்து சிவபெரு மானுக்கு சாற்றி வணங்க வேண்டும்.
4.ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையிலும், தேய்பிறை அஷ;டமி நாட்களிலும் கால பைரவரை வணங்கி வந்தால் சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
5.பிரதோஷ காலத்தில் சிவபெரு மானுக்கு வில்வ இலையை வைத்து வணங்க வேண்டும்.
6.சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம். வழிபாடு செய்தால் கெடு பலன்கள் குறையும்.
7.ஆஞ்சநேயர் மேலும், வீட்டில் தன்வந்திரியின் படத்தை வைத்து தினந்தோறும் தீபம் ஏற்றி வழிபடவும்.
இதனால், சனியின் முக்கிய பாதிப்புகளான விபத்து, நோய் ஏற்படாமல் தன்வந்திரி காப்பார்..
ஜீவ சமாதியை வழிபாடு செய்வதால் என்ன நன்மை ?
அஷ்டம சனி , ஏழரை சனி பாதிப்புகளிடம் இருந்து விடுபட , செய்வினை தோஷங்களில் இருந்து விடுபட ஜீவ சமாதி அடை ந்த இடத்தில் முக்கியமாக தியான ம் செய்தால் முன்னர் பல ஆன்மீக வாதிகளுக்கு ஜீவசமாதியான சித்தர்கள் நேரில் காட்சி அளித்து ள்ளனர் அது போல் காட்சி அளிக்க வாய்ப்புள்ளது.
கோச்சாரத்தில் 10ல் உள்ள குருவுக்கு பரிஹாரம்
1.கோச்சாரத்தில் குரு 10ல் இருந்து வலிமையிழந்திருக்கும் நிலையில், வியாழக்கிழமைகளில் அவருக்கு உரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் லட்டுகளை வாங்கி, தட்சிணா மூர்த்திக்கு நைவேத்தியம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதும், மங்கலகரமான மஞ்சள் நிறப் பொருள்களைப் பிறருக்கு தானம் கொடுப்பதும் சிறந்த பரிகாரங்களாகும்.
2.குருவுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி , நெய்விளக்கு அல்லது அர்ச்சனை அல்லது அபிஷேகம் செய்து வருவது நலம் .
3. மஞ்சள் துண்டு , மஞ்சள் சட்டை , வேஷ்டி, கைக்குட்டை உபயோகிக் கலாம்
உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனை களும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment