புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்தும் புதஆதித்ய யோகம்
புதன் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம். ஒரு ஜாதகத்தில் சூரியன்-புதன் சேர்க்கை நிகழும்போது அது புதஆதித்ய யோகத்தை உண்டாக்கும்.
ஜாதகர் கல்விகேள்விகளில் சிறந்தவர் ஆக இருப்பார் அவருடைய புத்திசாலித்தன த்தைப் பயன்படுத்தி பெயர் மற்றும் புகழைப் பெறுவார் இவரது பேச்சாற்றல் மிக்க பேச்சாள ராகவும் இருப்பர்.
ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்திருப்பது ஜாதகரை கண்ணியம் மிக்கவராகவும் , பிரபலமாகவும், பகுத்தறிவுள்ளவ ராகவும், உறுதியானவராகவும், உடல் ரீதியாகவும் கவர்ச்சி கரமானவராகவும் ஆக்குகிறது.
புதஆதித்ய யோகம் உள்ள ஜாதகர் அரசு அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகளுடன் சுமுகமான உறவைப் கொண்டவர்கள் ஆவார்கள்.. அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் அதாவது நிபுணத்துவம் பெற்று இருப்பார்கள்.. இச்சேர்க்கை உள்ள ஜாதகரை கல்வியில் சிறந்தவராக்கும்.... மிகுந்த அறிவாற்றல் உள்ளவராகவும்.... மேலும் வெளிப்படையாக பேசக் கூடியவராக இருப்பார்..
கேந்திர ஸ்தானமான 7ல் தவிர, கேந்திரம்/திரிகோணம் (1,4,10) (1,5,9) மற்றும் 2வது மற்றும் 11வது வீடுகளிலும் இந்த சாதகமான பலன்களைத் ஜாதகருக்கு தருகிறது
1,4,8ல் புதஆதித்ய யோகம்அமைந்தால் ராஜ யோகம்
விளையும் புதன் சூரியன் விரும்பி 8,4,1 ல் அமையப் பெறின் மன்னவனாம் என்கிறது ஒரு ஜோதிட பாடல்.
புதன் லக்கினத்தில் இருந்தால் திக் பலம் பெறுவார். சூரியனுடன் இணைந்து லக்கினத்தில் அமைந் தால் மிக பெரிய யோகத்தை தருவார்.
லக்கினத்தில் புத ஆதித்ய யோகம் அமைய பெட்ரா ஜாதகரின் தொழில் வெற்றிக்கு சாதகமாக இருக்கும். ஜாதகர் மிகவும் புத்திசாலியாகவும், பல மொழிகள், தெரிந்தவர் ஆகவும் கல்வி, எழுத்து மற்றும் மக்கள் தொடர்பு போன்ற துறையில் ஒரு நிபுணராகவும் ஆக்குகிறது.
அலி கிரகம் -புதன்
கிரகங்களில் ஆணும் அல்லாத, பெண்ணும் அல்லாத அலி கிரகம் என்று புதனைச் சொல்வார்கள். அவர் தனித்திருக்கும் நிலையில் சுபராக இருப்பார். பிறருடன் இணையும் போது, அவர் சேரும் கிரகம் சுபராக இருந்தால் தன்னைச் சுபராகவும், அந்தக் கிரகம் பாபராக இருந்தால் தன்னை பாபராகவும் நிலைமாற்றிக் கொள்வார்.
நீச்சம் பங்கம் பெற்ற புதன்
ஒரு ஜாதகத்தில் புதன் நீச்ச நிலை பெற்று பங்கமாகி, நீச்ச பங்க நிலையில் மீனத்தில் இருந்தால் சில குறிப்பிட்ட நிலைகளில் அந்த நபருக்கு கல்வியில் தடை ஏற்பட்டு பள்ளியிறுதி வகுப்பு வரை மட்டுமே படிக்கும் வாய்ப்பு அமையும். அதே நேரத்தில் பஅவர், அனுபவ அறிவில் கல்லூரியில் படித்தவரை விட மேலான நிலையில் இருப்பார். சகல விஷயத்திலும் பாண்டித்யம் பெற்றிருப்பார். மேலும் கல்லூரியில் படிக்காத அவர் சரளமான ஆங்கில அறிவும், பிறமொழி அறிவும் கூட கொண்டிருப்பார்.
சூரியன் புதன் சேர்க்கை-புதிய கண்டுபிடிப்புகள்
புதஆதித்ய யோகம் உள்ள ஜாதகர் புதிய கண்டுபிடிப்புகளை உலகு க்கு அறிமுக படுத்துவார். தெலங்கானாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், செலவை மிச்சப்படுத்த புல்லட் வடிவில் ஒரு டிராக்டர் போன்ற வாகனத்தை பயன்படுத்துகிறார்.புல்லட்டின் பாடி, ஆட்டோவின் எஞ்சின், டிராக்டரின் வேலை என மூன்று திறன்களையும் ஒரு சேர பயன்படுத்தியிருக்கிறார் இந்த விவசாயி.
இங்கே இணைக்கப்பட்டுள்ள ஜாதகம் - ஜாதகர் புதிய விவசாய கருவிகளை கண்டுபிடுப்பதில் நிபுணர்
ஜாதகர் வயது 28 வயது. இவர் விவசாய கருவிகளை கண்டு பிடிப்பதில் நிபுணர். இவர் கண்டுபிடித்த புதிய விவசாய கண்டுபிடிப்புகள் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. நிறைய தேவை இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உள்ளது. இவருடைய ஜாதகத்தில் 11ல் புத ஆதித்ய யோகம் அமையப்பெற்று உள்ளது. 11ல் உள்ள புதனை குரு பார்ப்பது நுண்ணறிவு ஆற்றலை ஏற்படுத்தும்.
10ல் சுக்கிரன் , கேது அமர்வு
கடக லக்கினத்திற்கு சுக்கிரன் கேது 10ல் அமைந்து இருப்பதும் மற்றும் கடக லக்கினத்திற்கு யோககாரகன் செவ்வாய் 2ல் இருப்பதாலும் இவர் பிற்காலத்தில் தொழில் அதிபராக வருவதற்கு வாய்ய்பு உள்ளது. வெளிநாடுகளு க்கு ஏற்றுமதி செய்யும் யோகமும் உள்ளது
உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment