Search This Blog

Monday, April 10, 2023

7ம் அதிபதி 6ல் மறைவு அம்சத்தில் நீச்சம் - விவாகரத்து – புனர்பூ தோஷம் -இருதாரம்- யோகம்

 7ம் அதிபதி 6ல் மறைவு, அம்சத்தில் நீச்சம் - விவாகரத்து – புனர்பூ தோஷம் -இருதாரம்- யோகம்

ஜாதகர் மிதுன லக்கினம் கும்ப ராசி - தற்சமயம் ஜென்ம சனி . கும்ப ராசிக்கு சனி அதிபதி என்பதால் தீய பலன்களை தரமாட்டார் என்று சொல்வார்கள் . ஆனால் , இவருக்கு பல சோதனைகள் ஏழரைச்சனி ஆரம்பித்ததும் ஏற்பட்டது.

ஏழரை சனியில் இவர் சந்தித்த பாதிப்புகள்

1. தனியார் துறையில் வேலை பார்த்தார் .

2.அரசாங்க வேலைக்கு தேர்வாகி பயிற்சி எடுத்தார் .

3. பயிற்சியின் பொழுது இவருடன் கூட பயற்சி எடுத்த பெண்ணுடன் காதல் ஏற்பட்டு திருமணம் ஏற்பட்டது.

4 திருமணத்திற்கு பிறகு தனியார் வேலையில் பணிபுரிந்த பொழுது இவர் மீது பண மோசடி குற்றம் சாற்றப்பட்டு இவர் சிறை செல்ல நேர்ந்தது.

5. தற்சமயம் விவாகரத்து வழுக்கு நிலுவையில் உள்ளது.



புனர்பூ தோஷம்

இவர் ஜாதகத்தில் கும்பத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நிற்பது புனர்பூ தோஷத்தை ஏற்படுத்தும். சனி சந்திரன் சேர்க்கை பெற்ற ஞான ஜாதகங்கள் துறவறம், பிரம்மச்சரியம், சன்யாச வாழ்க்கை வாழ்வார்கள். ஆதி சங்கரர், சுவாமி விவேகானந்தர், சுவாமி அரவிந்தர், காஞ்சி பெரியவர், ராமானுஜர் ஆகியோருக்கு இந்த வகையான அமைப்பு உள்ளது.ஜெனன சந்திரன் , சனி சேர்க்கையில் , கோச்சார சனி பிரயாணம் செய்கின்ற காலம் , அத்துடன் சனி அல்லது சந்திர தசை நடப்பில் இருப்பது.ஒரு முறை இந்த தடங்கல் நிகழ்ந்து விட்டால் , அதன் பிறகு நடக்கும் திருமணம் நிச்சயமாக இனிமையாக அமையும். கெடுதலிலும் ஒரு நன்மையை செய்யும் ஒரு தோஷம்.

7ம் அதிபதி குரு 6ல் அம்சத்தில் 7ம் அதிபதி குரு நீச்சம்

இத்தகைய அமைப்பு இருதார அமைப்பை ஏற்படுத்துகிறது. முதலில் காதல் திருமணம் ஏற்பட்டு பின்னர் அது முறிந்து இரண்டாம் தார அமைப்பு ஏற்படுகிறது.

மாளவ்ய யோகம்

ஜெயலலிதா அம்மையார் மிதுன லக்கினம் 10ம் இடமான மீனத்தில் சுக்கிரன் உச்சம் . உயர்தர மாளவ்ய யோகம் அமைந்ததால் அவர் கலைத்துறை பின்னர் அரசியலில் பெயர் , புகழ் அடைய நேர்ந்தது. இந்த ஜாதகருக்கு எதிர்காலத்தில் தான் ஈடுபட்ட தொழில் பிரபலம் அடைவார் .

லக்கினாதிபதி 12ல் மறைவு

ஜாதகத்தில் லக்கினாதிபதி மற்றும் 4ம் அதிபதியான புதன் 12ல் மறைவு. ஜாதகத்தில் லகனாதிபதி 12ல் மறைந்தால் , வாழ்கை ஏற்ற தாழ்வு ஆக அமையும்.

இவர் வாழ்வில் நடந்த முக்கியமான சம்பவங்கள்

2020 டிசம்பர் இவருடைய தந்தை இறக்கிறார். புதன் தசை புதன் புக்தி

2021 மே மாதத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது புதன் தசை கேது புக்தி

2021 ஆகஸ்ட் இவர் கைது ஆகி சிறையில் தள்ள படுகிறார்.புதன் தசை கேது புக்தி

தற்சமயம் நடைபெறும் தசை புக்தி புதன் திசை , சுக்கிர புக்தி , ராகு அந்திரம்

புதன் சுக்கிரன சாரம் பெற்று சமம் (நட்பும் மற்றும் பகையும் இல்லை)

அதிலிருந்து இவர் மனைவி இவரை பிரிந்து சென்று விடுகிறார்.

இவருக்கு ஜாம கோல் ஆருட ஜாதகம் அமைத்து பார்த்ததில் இவருக்கு கிழ்கண்ட பலன்கள் தெரிந்தது .

1. உதயத்திலிருந்து கவிப்பு 6ம் இடத்தில -

கெட்ட சம்பவங்களால் பாதிப்பு , அவமானம் , கோர்ட் , வழக்கு களால் பாதிப்பு ஆகியவற்றை காண்பித்தது.

2. இவருடைய பிரசன்ன ஜாதகத்தில் ஆருடத்தில் சந்திரன் , நிற்பதால் நன்மை நடை பெறு வதில் தடைகள் இருக்காது வழக்குகளில் வெற்றி கிடைக்கும். . எதிரிகளால் தொல்லை குறையும் . நோய் தீரும் - அணைத்து தொல்லைகள் விலகும் என்று பலன் கூற முடிந்தது.

வழக்குஅறுத்தீஸ்வரர் கோயில் பரிஹாரம்

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பல பிரசித்தி பெற்ற கோவில்க ளில் ஒன்று வழக்கறுத்தீஸ்வரர் கோவில். நீதிமன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள ஈஸ்வரனை வணங்கி வருகிறார்கள்.

16 திங்கள் கிழமைகள் நெய் தீபம் ஏற்றிச் சிவனை வழிபட்டால் தீராத வழக்குகளும் தீரும் என்பது நம்பிக்கை.

எனவே, ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை விஷேசம் என்பதால், கூட்டமாக இருக்கும்.

பல காலமாக நீதிமன்ற வழக்கு பிரச்சனையுள்ளவர்கள் இக்கோவிலுக்குச் சென்று வழக்கறுத்தீஸ்வரரை வணங்கி வாருங்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனை களும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment