விரைவில் தீர்ப்பு வர இருக்கின்ற சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பு திரு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமா அல்லது பாதகமா ?
திரு பழனி சாமி அதிமுக கட்சியை கைப்பற்றுவாரா ?
திரு எடப்பாடி பழனிசாமி பிறந்தது ஹஸ்தம் 2ம் பாதம். லக்கினம் ரிஷபம் மற்றும் கன்னி ராசி ஆகும்.
திரு எம் ஜீ யாரால் அ தி மு க தொடங்கப்பட்டு பின்னர் ஜெயலலிதாவால் வளர்க்க பட்ட கட்சி இன்று திரு பழனிச்சாமி இடம் உள்ளது;. சசிகலா ஜெயலலிதாவிடம் நெருக்கமாக இருந்தார் , ஜெயலலிதாவுக்கு பிறகு அவருடைய கட்டுப்பாட்டில் இருந்த கட்சி இன்று பழனிசாமி அவர்கள் கைவசம் ஆகியுள்ளது. இதை தான் ராஜ யோகம் என்று ஜோதிடம் கூறுகிறது.
அடித்தது ராஜயோகம் எடப்பாடிக்கு. கட்சியில் சசிகலா, தினகரன் , ஒபிஸ்ஐ கீழே தள்ளி முதல்வர் பதவியை பிடித்தார். எடபடியார் . இங்குதான் ஜாதகம் வேலை செய்கிறது . நவகிரஹங் கள் தரும் யோகத்தால் இன்று எடப்பாடியர் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். சுமார் ஒன்றரை கோடி அ தி மு க தொண்டர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று எடப்பாடிக் கு ஆதரவாக உள்ளனர் .
மாளவ்ய யோகம்
ரிஷப லக்கினத்தில் லக்கினாதி பதி ஆட்சி பெற்று உயர் தரமான மாளவ்ய யோகம் அமைந்துள்ளது. பஞ்ச மஹா புருஷ யோகமான மாளவ்ய யோகம் ஜாதகருக்கு அரசாளும் யோகத்தை தந்துள்ளது.
யோகினி யோகம்
குருவும், கேதுவும் இணைந்து ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால் அவர் பாக்கியசாலியாக திகழ்வார். ரிஷப லக்னத்துடன் தன ஸ்தானம் எனப்படும் 2ம் வீடான மிதுன ராசியில் குருவும், கேதுவும் இருந்தால் அந்த ஜாதகர் கோடீஸ்வரன் ஆவது உறுதி. அந்த யோகம் உள்ள ஜாதகதாரர் 45 வயதுக்கு மேல் பெரிய பதவி வகித்து உயர்வடைவார். இதனால் தான் எடப்பாடி அவர்கள் தமிழக முதல்வர் ஆக முடிந்தது. அ தி மு க கட்சியை தன் கைவசம் கொண்டு வர முடிந்தது.
சூர்யன் உச்சம் பெற்றால்
எடப்பாடியார் ஜாதகத்தில் அயன , சயன போக ஸ்தானமான 12 ம் வீட்டில் ராஜ கிரஹமான சூர்யன் உச்சம் பெற்றுப்பதால் , அவருக்கு முதல்வர் பதவி தேடி வந்தது. பிரதமர் , முதல்வர், கட்சி தலைவர் போன்ற பதவிகளை ஒருவர் அடைய வேண்டுமானால் அவர் ஜாதகத்தில் ராஜ கிரகமான சூரியன் உச்சம் பெற்றிருக்க வேண்டும்
“சூரியனும்மேஷத்தி லுச்சமானால்
சொல்லொணாயோகத்தை மிகவேதந்து...”
தர்மகர்மதிபதி யோகம்
எடப்பாடியரின் ஜாதகத்தில் தர்ம கர்மாதிபதியான சனி பகவான் உச்சம் பெற்று குரு பகவானால் பார்க்கப்படுகிறார்.
சனி உச்சம்
அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சனி உச்சம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் பேச்சு வன்மை மிக்கவ ராக இருப்பர். வசதியுடன் வாழ் வார். தீர்க்காயுள் உள்ளவர். வாழ்க்கையில் முன்னேற்றம், மதிப்பு இருக்கும். தைரியம் மிக்கவர். இரும்பு எந்திரம் தொடர்பான தொழிலில் சிறப்பு உண்டு.
குரு பார்வை
எடப்பாடியர் ஜாதகத்தில் குரு பகவான் ருண , சத்ரு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நீண்ட ஆயுள் , அரசியல் எதிரிகளை வெல்ல கூடிய ஆற்றல் ஆகியவற்றை தருகிறது.
எடப்பாடியர் ஜாதகத்தில் குரு பகவான் ஆயுள் , மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தை பார்ப்பதால் , நீண்ட ஆயுள் உண்டு.
எடப்பாடியர் ஜாதகத்தில் குரு பகவான் ஜீவனஸ்தானமான 10 இடத்தை பார்ப்பதால் பதவி இவரை தேடி வரும் . நீண்ட நாட்கள் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யோகம் ஏற்படும்
கோச்சார கிரஹ நிலை
எடபடியாருக்கு தற்சமயம் கோச்சாரம் மிக அருமையாக உள்ளது . குரு பகவான் வருகிற ஏப்ரல் 2023 வரை 7ம் இடத்தில் உள்ளார்., சனி பகவானும் 6 ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வருகிறார்கள். சச யோகம் பெற்ற சனிபகவாநும் , நீசபங்க யோகம் பெற்ற குருபகவானையும் , வெற்றியையும் , செல்வாக்கையும் அள்ளி தருவார்கள் என்பதில் ஐயமே இல்லை.
நடப்பு தசை புக்தி
புதன் தசை சுக்கிர புக்தி 10-04-2023 வரை
நடப்பு தசை புக்தி
ரிஷப லக்கினத்திற்கு தன பஞ்சமாதிபதியான புத பகவான் தசை நடை பெறுகிறது. அதிலும் மாளவியா யோகம் பெற்ற சுக்கிரனின் புத்தி 10-04-2023 வரை நடை பெற இருக்கிறது. ஆகையால் , மிக யோகமான பலன்களை இந்த புத தசை மற்றும் சுக்கிர புத்தி இவருக்கு அளிக்கும் என்பதில் ஐயமே இல்லை
தசை புக்தி நட்சத்திர சாரம்
புத பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் சூர்ய பகவான் (நட்பு) சாரம் பெற்று தசை நடத்துகிறார். சுக்கிர பகவான் செவ்வாய் ( சமம்) மிருக சீரிடம் நட்சித்திர சாரம் பெற்று புக்தி நடத்துகிறார்.
எடப்பாடி அதிமுக கட்சியை கைப்பற்றுவாரா ?
ஆகையால் இவருக்கு தற்சமயம் சாதகமான தசை புக்தி இருப்பதா ல் உயர் நீதிமன்ற தீர்ப்பு (27-3-2023) இவருக்கு சாதகமாக அமைய வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆகையால் அ தி மு க கட்சி திரு எடப்பாடி பழனிசாமி கைவசம் இருக்கும் என்பது அவரின் ஜாதகம் தெளிவாக உணர்த்துகிறது . இது கட்சி சார்பற்ற ஒரு ஜோதிட அலசல் .
உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment