Tuesday, April 18, 2023

அரசியலில் பதவி யோகம் யாருக்கு ? உத்தியோகத்தில் பதவி யோகம் யாருக்கு ?

 அரசியலில் பதவி யோகம் யாருக்கு ? உத்தியோகத்தில் பதவி யோகம் யாருக்கு ?

பதவி யோகமென்பது அரசியல் மட்டும் அல்ல.பணி புரியும் இடங்க ளிலும் பதவிஉயர்வைக் குறிக்கும். அரசியலில் பஞ்சாயத்து உறுப்பின ர் முதல் அமைச்சர் , பிரதம அமைச்சர் , ஜனாதிபதி போன்ற பதவிகள் அடைய ஜாதகத்தில் வலுவான கிரஹ நிலைகள் இருக்க்க வேண்டும்.

அது போன்று கடை நிலை ஊழியர் முதல் குரூப் 1 ஊழியர்கள் , தனியார் துறையில் பெரிய பதவிகள் அடைய ஜாதகத்தில் வலுவான கிரஹ நிலைகள் இருக்க்க வேண்டும்.

லக்கினாதிபதி ஆட்சி , உச்சம் , மூல திரிகோணம் , திக்பலம்

ஒரு ஜாதகத்தில் அதன் லக்னாதிப தி ஆட்சி , உச்சம் , மூல திரிகோண ம் , திக்பலம் பெற்றாலே போதும். அந்த ஜாதகருக்கு வேறு எந்த விதமான தோசமிருப்பினும் அவற்றை யெல்லாம் கடந்து அந்த ஜாதகர் உயர்ந்தபதவியில் மிகுந்த செல்வாக்குடன் இருப்பார்.பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் அந்தஸ்தை ஜாதகர் பெறுவார்.

10ம் அதிபதி ஆட்சி , உச்சம் , மூல திரிகோணம் , திக்பலம்

இதேபோல் எந்த லக்னமாக இருந்தாலும் அந்த லக்னத்திற்கு பத்தாம்அதிபதி ஆட்சி , உச்சம் , மூல திரிகோணம் , திக்பலம் பெற்றால் போதும்.ஜாதகர் தனது கடைசிக் காலம் வரை உட்கார்ந்து சாப்பிடுவார்.கஷ்டமில்லை.பெரிய பதவிகள் பொறுப்புகள் அவரைத் தேடி வந்து கொண்டிருக்கும்.

பதவி யோகம் தரும் யோகம் தரும் ஜாதக அமைப்புகள்.

கீழ்கண்ட யோகங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட யோகங்கள் இருந்தால் , ஜாதகர் அரசியலில் அல்லது தனியார் துறையில் பெரும் பதவிகளை அடைவார்கள்.

1.அமோக யோகம்.

நான்கு சுபர்களும் கேந்திரமிருந் தாலோ அல்லது ஆட்சி பெற்றிருந் தாலோ அமோக யோகமாகும். எல்லா வகை அதிர்ஷ்டமும் உயர்ந்த வாழ்க்கையும் அமையும்.

2.கார்முக யோகம்- லக்னத்தில் ஜீவனாதிபதியும் 10 ஆம் இடத்தில் லக்னாதிபதியும் இருந்து லக்னாதி பதிக்கு 7 ஆம் இடத்தில் குரு நின்று இருவரையும் பார்க்கும் அமைப் பை கார்முக யோகம் என்பார்கள். இந்த யோகம் அமையப் பெற்றவர் கள், கல்வி, கேள்வி, ஞானம், உள்ள வர்கள். இந்த யோகம் 27 வயது முதல் எட்டு ஆண்டுகள் நடைபெறும்.

3. எக்காள யோகம்:

நான்காமிடத்துக்கும் பத்தாமிடத்து க்கும் உரிய அதிபதிகள் கேந்திரத் தில் நின்று, அவர்களை லக்னாதிப தியை பார்ப்பது யோகமாகும். லக்னம் இரண்டு ஆகிய இடங்க ளில் பாவர் இருக்க 9ல் குரு, 10ல் சூரியன் நின்றாலும் எக்காள யோகமே. இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். மற்றவரி ன் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடை க்கும்.நாளுக்கு நாள் செல்வம் பெருகும்.

4.கேதார யோகம்

ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்கள் ஏதாவது 4 ராசிகளில் சஞ்சரிப்பது.பெரும் விவசாயீ , திரளான கால்நடைகளை பராமரிப்பார் , பூமி , வாஹனம் போன்ற தொழில்களை மேற்கொள்வர்

5.சகர யோகம்-- அனைத்துக் கோள்களும் இலக்ன முதல் ஒன்றுவிட்டு ஆறு பாவத்தில் இருப்பது சகரயோகமாகும். { 1,3,5,7,9,11 பாவங்களில் }

இந்த யோகத்தில் பிறந்தவர் மக்களாலும், மன்னர்களாலும் போற்றக்கூடிய மாமன்னர் ஆவார்…ஏகசக்ரவர்த்தியாவார்…

6.சமுத்திர யோகம்

இரண்டாமிடம் முதற்கொண்டு ஒரு வீடு விட்டு மறு வீடுகளில் கிரகமி ருந்தால் சமுத்திர யோகமாகும். பொன், பொருள் கொண்டு அதிகாரியாகவும் இருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியும், புத்திர புத்திரிகளும் உண்டு. ஏழு, ஒன்பதுக்குரியவர்கள் பரிவர்த்த னை பெற்றிருந்தாலும் சமுத்திர யோகமே. 53 வயது முதல் தொடங் கி யோகம் தரும் அமைப்பு இது.



7.காமிய யோகம்

லக்கினாதி சுபருடன் இணைந்து பலம் பெற்றிருக்க, இரண்டாம் இடத்தில் குரு, 4ம் இடத்தில் சுக்கிரன், 7ம் இடத்தில் சந்திரன், 11ம் இடத்தில் செவ்வாய் ஆகிய கிரகங்கள் அமையப் பெற்றிருப் பதற்கு ‘காமிய யோகம்’ என்று பெயர். இதனால் பொன், பொருள், வீடு, மனை என வசதிகளுடன், நற்பெயர் பெற்று யோகமான வாழ்க்கையை வாழ்வார்கள். அதே போல் தான் விரும்பியவரையே மணம் நல்வாழ்வு வாழ்வார்.

8.கிரக மாலிகா யோகம்-லக்கினத்தில் இருந்து தொடர்ந்து 7 ராசிகளில் இடைவிடாது ராகு கேதுவை தவிர மற்ற கிரஹங்கள் அமைவது-அரசாளும் யோகம் ஏற்படுகிறது

9.புஷ்பமாலிகா யோகம்

10.கௌரி யோகம்

ஜீவன ஸ்தானத்தில் லக்கினாதிப தியுடன் ஒரு உச்ச கிரஹம் அமை யப்பெற்ற வேண்டும் -உயர்ந்த அறிவு , நல்ல பழக்க வழக்கங்கள் ,

11. சரிதாம யோகம்

ஏழு ஒன்பதுக்குரியவர்கள் பரிவர் த்தனை பெற்றிருக்க, இவர்களில் ஒருவருடன் சந்திரன் நின்ற ராசி க்கு அதிபதி கூடியிருந்தால் சரிதாம யோகமாகும். அநேக வளங்களுடன் மேலான வாழ்க்கை வாழ்வர். இது முப்பது வயதுக் குமேல் அறுபதுவயதுவரை கூட நடக்கும்.

12.உபஜெய யோகம்

உபஜெய ஸ்தானமான 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய சுபக்கிரகம் நிற்பது உபஜெய யோகமாகம். இதை வசுமதி யோகம் என்பார்கள். முன்னேற்றமும் செல்வமும் இவர்களைத் தேடி தானே வரும்.

13.காகள யோகம்.

லக்னாதிபதி இருந்த வீட்டுக்குரியவனும் சந்திரன் இருக்கும் வீட்டுக்குரியவனும் உச்சமாகி, சந்திரனுக்கு கேந்திர ஸ்தானம் பெற்று வருவது காகள யோகமாகும். 28 வயதுக்கு மேல் இந்த யோகம் நன்மை செய்யும்.

15.கஜகேசரி யோகம்-சந்திரன் குருவுடன் சேர்ந்து யிருந்தாலும் , அல்லது சந்திரன் குருவுக்கு 4,7,10 போன்ற கேந்திர ஸ்தானங்களில் அமையப்பெற்றாலும் அல்லது சந்திரனை குரு பார்வையிட்டா லும்-ஜாதகருக்கு நற்பெயர் , தலைமை தாங்கும் ஆற்றல் , புகழ் , நல்குணம் , ஈகை , பெருச்செல்வம் , நுண்ணறிவு , உயர்கல்வி , உயர்ந்த குடும்பம் , இறந்தபிறகும் நிலைத்திருக்கும் புகழ் ஆகியவை ஏற்படும்.

கலைஞர் கருணாநிதி ஜாதகம் அலசல்

தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார்.தமிழகச் சட்டப்பேரவையில் 1977 முதல் 1983 வரை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

1. இவர் ஜாதகத்தில் லக்கினாதிபதி சந்திரன் 11ல் உச்சம் - அரசியலில் உயர் பதவி

2.இவர் ஜாதகத்தில் 10ம் அதிபதி செவ்வாய் 7ல் உச்சம் -அரசியலில் உயர் பதவி

3.இவர் ஜாதகத்தில் உயர் தர கஜகேசரி யோகம் - உச்சம் பெட்ரா சந்திரனை 5ல் அமர்ந்த குரு பார்ப்பது -அரசியலில் உயர் பதவி

4. உச்சம் பெட்ரா சந்திரனுடன் சூரியன் சேர்க்கை 11ல் - அமாவாசை யோகம்

5. 4ல் சனி உச்சம் - சச யோகம்

6. 7ல் செவ்வாய் உச்சம் - ருசக யோகம் -

உங்கள் ஜாதகத்தில் அரசியலில் பதவி யோகம் பெற , உத்தியோக த்தில் பதவி யோகம் பெற உங்கள் ஜாதகத்தில் மேல கூறப்பட்ட யோகங்கள் உள்ளதா ? உங்கள் ஜாதகத்தை பார்த்து உறுதி செய்து கொள்ள -உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment