Sunday, April 23, 2023

ஜாதகத்தில் சந்திரன் நீச்சம் மறைவு-கிரஹண தோஷம்-மன அழுத்தம் ஏற்பட ஜாதகத்தில் உள்ள கிரஹ நிலைகள்-மனசிதைவு நோய்

ஜாதகத்தில் சந்திரன் நீச்சம் மறைவு--தேவையற்ற சந்தேக உணர்ச்சி (தன்னை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள், தன்னை கொல்ல சதி நடக்கிறது, தனக்கு யாரோ சூனியம் வைத்து விட்டார்கள், தன்னை யாரோ எப்பொழுதும் தொடர்கிறார்கள் என்பது போன்ற சந்தேகங்கள்)

ஜாதகத்தில் சந்திரன் மறைவு

ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திரன் வலிமை குறைந்தால் மனரீதி யான பாதிப்பு மிகும். லக்னத்திற்கோ, லக்னாதி பதிக்கோ 8ஆல் சந்திரன் மறைந் தால் கடுமையான மன அழுத் தத்தை ஏற்படுத்தும்.

கிரஹண தோஷம்

சந்திரனுடன் சனி, ராகு - கேது இணைந்திருந்தாலோ, அஷ்ட மாதிபதி, பாதகாதிபதியுடன் சந்திரன் சம்பந்தம் பெற்றிருந் தாலோ கடுமையான மன உளைச்சல் ஏற்படும். சனி - சந்திரன் சேர்க்கை, சனியும் சந்திரனும் சப்தம பார்வை, பாகை முறையில் சனி- சந்திரன் நெருக்க ம் ஆகியவை முதன்மையான மனக்குழப்ப கிரக அமைப்பாகும்.

மன அழுத்தம் ஏற்பட ஜாதகத்தில் உள்ள கிரஹ நிலைகள்

1.மன அழுத்தம் அதிகரிக்க ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மூன்றாம் அதிபதி நீச்சம், அஸ்தமனம் அடைந்து, ஐந்தாம் அதிபதியுடன் சேர்ந்து இருந்தால் மனக்குழப்பமும், கோழை மனதாகவும் இருப்பார்கள்.

2. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான ஐந்தாம் அதிபதி நீச்சம், அஸ்தமனம் அடைந்து மூன்றாம் அதிபதியுடன் சேர்ந்திருந்தால் எவ்வளவு தைரியமானவராக இருந்தாலும், தான் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்குமா? என்ற மனக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும்.

3. லக்னத்தில் சனி, ராகு, கேது, அஷ்டமாதிபதி இருந்தாலோ அல்லது பார்வை சேர்க்கை பெற்றாலோ அல்லது லக்னாதி பதியுடன் சனி, ராகு, கேது இணைந்தாலோ அல்லது 6,8,12-ம் அதிபதியுடன் அமர்ந்தாலும் மன ரீதியான பாதிப்பு ஏற்படும்.

4.ஜனன கால ஜாதகத்தில் அதிக வக்ர கிரகம் இருந்தாலும், மன அழுத்தம் உண்டாகும்.

சூரியன், சந்திரன்உடன் ராகு கேது கிரஹண தோஷம்

ஒருவரின் ஆழ்ந்த சிந்தனை, ஆழ்மனதை குறிக்கும் கிரகம், 5ஆம் அதிபதியான சூரியன். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன், ராகு - கேது மற்றும் சனியுடன் இணைந்திருந் தாலோ, சூரியன் நீச்சம் பெற்றிரு ந்தாலோ, 6,8,12ஆம் வீட்டில் சூரியன் மறைந்தவர்கள், அஷ்டம, பாதக அதிபதியோடு சூரியன் சம்பந்தம் பெற்றவர்கள் மன விரக்தியை அதிகம் சந்திக்கிறார்கள்.

மூன்றாம் இடத்தில் பாவ கிரகங்க ளான சூரியன், செவ்வாய் இருந்தால், அந்த நபர் மன தைரியம் கொண்டவ ராக இருப்பார். மூன்றாம் இடத்தில் சுப கிரகங்கள் ஆதிக்கம் மிகுதியாக இருந்தால் சிறிய விஷயத்திற்கு கூட அதிகமாக யோசித்து பெரியதாக மனக்குழப்பத்தை ஏற்படுத்துவர்கள்.

மன நோய்

சந்திரன் மனகாரகன். ஜாதகத்தில் சந்திரன் பாதிப்பிற்கு உள்ளாகும் போது அதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங் களுடன் சேர்க்கை பெற்றிருப்பது நல்லதல்ல. மன நோய் உண்டாகும்.

இங்கே கொடுக்க பட்டுள்ள ஜாதகம் - மனநோயினால் பாதிக்கப்பட்டு பின்பு மீண்ட ஜாதகர்

சந்திரனும் ராகுவும் கூட்டணி

ஜாதகர் திருவோண நட்சத்திரக்கா ரர்.ஜாதகரின் 14வது வயதில் ராகு மகாதிசை தொடங்கி 32 வயது வரை நடந்தது. ஜாதகருக்கு 28 வயது ஆகும் பொழுது , ராகு தசை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பொழுது இவருக்கு மனசிதைவு நோய் ஏற்பட்டது. . ஜாதகத்தில் ராகுவுடன் கூட்டாக இருப்பது சந்திரன். சந்திரனும் ராகுவும் கூட்டணி அமைத்து , ராகு தசை நடைபெற்றால் , அத்தகைய அமைப்பு ஜாதகருக்கு மன சிதைவு ஏற்பட்டது.

மனசிதைவு நோய்

ராகுவும் , சந்திரனும் 7ம் பார்வையாக ஜாதகனின் 10ம் இடத்தைப் பார்க்கி றார்கள். வேலை செய்த இடத்தில் ஏற்பட்ட வேலைப் பளுவினால் ஜாதகனுக்கு கடுமையான மனசிதைவு நோய் ஏற்பட்டது. வைத்தியம் பார்த்தார் கள். ஜாதகனைப் ப்ரட்டிப் போட்டு விட்டு 32 வயதில் ராகுதிசை முடிந்தவுடன் ஜாதகனுக்கு மனநோய் குணமானது. விடுபட்டார். அடுத்து வந்த குரு மகா திசை அதற்கு உதவியது. குரு பகவானும் தனது 9ம் பார்வையால் தொழில ஸ்தானத்தைப் பார்ப்பதைப் பாருங்கள். குரு தசையில் ஜாதகனின் வேலைப் பளுவை முற்றிலுமாகக் குறைப்பதற்கு உதவி செய்து ஜாதகனைக் குரு பகவான் காப்பாற்றினார்.

மனச்சிதைவு நோய் (Schizophrenia)

1. இந்நோய் மூளையில் உள்ள சில ரசாயன குறைபாடுகள் மற்றும் வேறுபாடுகளினால் வருகிறது.

2. மரபு வழியாக இந்நோய் வரலாம்.

3. ஆண், பெண் இருபாலரையும் இது சமமாகவே தாக்கும்.

4. இது தொற்று நோய் அல்ல.

5. மக்கள் தொகையில் நூறில் ஒருவர் மனச்சிதைவு நோயினால் பாதிக்கபடுவர்.

மனச்சிதைவு நோய்க்கான அறிகுறிகள் என்ன ?

1. நடத்தையில் மாறுதல்

2. தனக்குள்ளே பேசிக்கொள்ளுதல் அல்லது சிரித்தல்

3. மற்றவர்களுடன் பேசி பழகுவது குறைந்து தனிமையை நாடுதல்

4. தெளிவில்லாத சிந்தனை, குழப்பமான பேச்சு

5. குளிப்பது, உடை மாற்றுவது, சாப்பிடுவது போன்ற தினசரி இயல்பாக செய்யும் செயல்கள் கூட பாதிப்பு.

6. தனியாக இருக்கும் பொழுது காதில் குரல் கேட்பது

7. தேவையற்ற சந்தேக உணர்ச்சி (தன்னை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள், தன்னை கொல்ல சதி நடக்கிறது, தனக்கு யாரோ சூனியம் வைத்து விட்டார்கள், தன்னை யாரோ எப்பொழுதும் தொடர்கிறார்கள் என்பது போன்ற சந்தேகங்கள்)

8. மேற்கூறிய சந்தேக உணர்வினால் உந்தப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சண்டை கொள்ளுதல்.

9. இதே காரணங்களினால் வீட்டை விட்டு வெளியேறி எங்கேனும் சென்று விடல்.

மனச்சிதைவு நோயை குணமா க்க முடியுமா ?

மனச்சிதைவு நோயை நிச்சயமாக குணமாக்க முடியும்.

அதற்குரிய, மருந்துகளை தொடர்ந்து தவறாமல் உட்கொண்டால், காதில் குரல் கேட்பது,தனக்குள் பேசிகொள்வது, சந்தேக உணர்ச்சி, தெளிவில்லாத சிந்தனை போன்றவை மறைந்து மற்றவர் போல் ஆகலாம்.

இந்த மருந்துகளை , நிறைய நாட்கள் தொடர வேண்டும்.

மருந்துகளை நடுவில் நிறுத்தினால் மனச்சிதைவு நோய்க்கு உரிய அறிகுறிகள் மீண்டும் தோன்றலாம்.

முக்கியமாக இந்த மருந்துகளை, நோய் உருவானவுடன் தாமதப்படுத்தாமல் உடனே தொடர்ந்து உட்கொண்டால், குணமாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது



சந்திரதோஷம் பரிஹாரம்

1.ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும்

.2.மூன்றாம் பிறை தரிசனம்

மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

3. ஊதியூர்

அமாவாசை,பௌர்ணமி தினங்களில் கொங்கணர் கோவில் சிறப்பு தரிசனம்,அன்னதானம் நடை பெறுகிறது

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு பக்தர்கள் கூடி மூலிகை ரசத்தை காச்சி எல்லோருக்கும் அளிப்பார்கள் ,அன்பர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் , முடிந்தவர்கள் சென்று ரசத்தை அருந்தி வாருங்கள் .கொங்கணர் ஜனன நட்சத்திரம் உத்திராடம் அன்று குரு பூஜை நடைபெறுகிறது ...அருமையான பார்க்க வேண்டிய புண்ணிய தலம் ஒரு முறை சென்று வாருங்கள்.

இங்கு பௌர்ணமி திதி மிகவும் முக்கியமானது. இந்த மலை பாறைகளில் உள்ள சந்திரகாந்த கல் படிமங்கள் பௌர்ணமி இரவில் நிலா ஒளியில் பிரதிபளிக்கும். இது நம் உடலில் படுவதன் மூலம் உடல் மன ரீதியான அனைத்து நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் இரவு முழுவதும் பக்தர்கள் பாறைகளில் படுத்து இருப்பர்.

ஊதியூர் இம்மலை தாராபுரத்திலிருந்து ஈரோடு செல்லும் வழித்தடத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .இம்மலையின் பழைய பெயர் பொன்ஊதிமாமலை என்பதாகும் .

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைக ளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment