7ல் தனித்த குரு
கணவன் மனைவி பிரச்சினை லக்னத்திற்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து
நின்றால், மண வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும்.
கணவன்- மனைவிக்குள் சதா பிரச்னைகள் ஏற்படும். வழக்குகளை கூட சந்திக்க வேண்டி வரும்.
7ல் குரு நின்றதால் ஜாதகரின் திருமண வாழ்வு 3 மாதங்கள் கூட நிலைக்க வில்லை . இவருக்கு
அமைந்தது திருநங்கை மணப்பெண். இவர் மனைவி இல்லற
சுகத்திற்கு ஒத்துழைக்க வில்லை. இவர் கை பட்டாலே சண்டை இடும் மணப்பெண் அமையப்பெற்றார். அதனால் இவர் மனைவியை மருத்துவ
பரிசோதனை செய்து மருத்துவரிடம் சான்றிதழ் பெறவேண்டும் என்று அழைத்த பொழுது இவருக்கு
அவர்கள் குடும்பத்தினர் தாமாக முன் வந்து விவாக ரத்து அளித்தனர்
7ல் அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த
உண்டு
குரு
பகவானானவர் கேந்திரத்தில் நிற்பது தனித்த குருவாக இல்லாமல் இருப்பதே நல்லதாகும்.
குரு தனித்து இருந்தால் கிரந்தங்கள் கூறுவது
அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு
"என்பதேயாகும். இதிலிருந்து குரு தனித்து நிற்பது என்பது சுபமல்ல என்பது
விளங்கும்.
7ல் குரு ஆட்சி உச்சம் பெற்றால் கேந்திர ஆதிபத்திய தோஷம்ஒரு
சுப கிரகம் கேந்திரத்திற்கு அதிபதி ஆகி பாப கிரக சேர்க்கை பார்வை தொடர்பு பெறாமல் கேந்திர
வீட்டிலேயே ஆட்சி உச்சம் மூல திரிகோணம் பெறுவது கேந்திர ஆதிபத்திய தோஷம்.ஒன்றாம் வீடாகிய
லக்கினம் கேந்திரம் மற்றும் திரிகோணம் ஆகியவற்றின் இணைப்பு புள்ளி என்பதால் அங்கே உள்ள
சுப கிரக கேந்திர அதிபதிகள் தோஷம் செய்வது இல்லை 4,7,10 ம் வீட்டில் தான் அதிக அளவில்
இந்த தோஷம் இருக்கும்.
கேந்திர ஆதிபத்திய தோஷம்என்ன செய்யும்?
கேந்திர ஆதிபத்திய
தோஷம் பெறும் கிரகம் ஆதிபத்தியத்திற்கு ஏற்ப காரக மற்றும் ஆதிபத்திய ரீதியான குறைகளை
ஜாதகர் வாழ்வில் கொடுக்கும்..
7ல் குரு ஆட்சி உச்சம்
பெற்றால் கேந்திர ஆதிபத்திய தோஷம்
மிதுனம் மற்றும் கன்னி லக்கினங்களுக்கு குரு தனுசு மற்றும் மீனத்தில் (7ம் இடத்தில் ) அமையப்பெற்றால் கடுமையான கேந்திர ஆதிபத்திய தோஷத்தை ஏற்படுத்துவார் .
குரு கொடுக்கும் கேந்திர ஆதிபத்திய தோஷம் - சிறந்த உதாரண ஜாதகம் குரு கொடுக்கும் கேந்திர ஆதிபத்திய தோஷம்
மிதுன லக்கினத்தில் பிறந்த செல்வி ஜெயலலிதா திருமண செய்யாமலேயே வாழ நேரிட்டது. சோபன் பாபு வுடன் திருமண உறவில் இருந்தாலும் , அவர் மூலம் ஒரு குழந்தை பிறந்தது என்று சொல்ல பட்டாலும் , அந்த திருமண வாழ்வு ஊர் அறிய உலக அறிய வாழ முடிய வில்லை
இரண்டு தாரம்
ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு
2ம் இடத்தில் சனி
ஜாதகத்தில் 2ம் இடத்தில் சனி இருந்தால் அவரின் குடும்பத்தில் பிரிவு, வீண்
கருத்து வேறுபாடு, வாக்குவாதம், பொருளாதார நெருக்கடியும், ஏற்றத் தாழ்வு, தேவையற்ற விவாதங்க ளில்
ஈடுபடுதல்,உறவுகளிடத்தில் மனக் கசப்புகள் ஏற்பட்டு மறையும். முரட்டுத்தனமான
செயல்பாடுகளை உடையவர்கள்.பிடிவாத குணம் கொண்டவர்கள்.சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்கள்.
இரண்டில் சனி இருந்தால்
– இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள்அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன்.
செவ்வாய் திக் பலம்
செவ்வாய் பத்தாம் வீட்டில்
தெற்கில் தனது திசை பலத்தைப் பெறுகிறார், ஜாதகருக்கு தொழிலில் பெரிய உயரத்திற்கு உயர்த்தும்,
வலிமையான ஆளுமை, ஆற்றல் மற்றும் எதிரிகளை வெற்றி
கொள்வார். தன் வழியில் வரும் அனைத்து தடைகளையும் தைரியமாக சமாளிக்கும் சக்தியை ஜாதகருக்கு கொடுக்கும்.
2 மற்றும் 7க்கு உரிய செவ்வாய் 10ல் நீச்சம் ஆனால் திக் பலம்
அம்சத்தில் உச்சம்
2 மற்றும் 7க்கு உரிய
செவ்வாய் நீச்சம் அதனால் முதல் திருமணம் விவாக ரத்தில் முடிந்தது. ஆயினும் செவ்வாய்
திக் பலம் பெற்று இருப்பதாலும் , அம்சத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும் , இரண்டாம்
திருமணம் நீடித்து இருக்கும்.
2 மற்றும் 7க்கு உரிய
செவ்வாய் 10ல் நீச்சம்
2 மற்றும் 7க்கு உரிய
செவ்வாய் ராசியில் நீச்சம் ஆனாலும் , ஆட்சி பலத்திற்கு சமமான திக் பலம் பெற்று நவாம்சத்தில்
உச்சமடைந்த இரண்டாம் திருமணம் நீடித்து இருக்கும்.
No comments:
Post a Comment