Search This Blog

Monday, June 5, 2023

நவகிரஹ தோஷ பரிஹாரம் நவகிரஹ தோஷங்களை போக்க ஜாதகரே செய்யும் காசு பணம் செலவில்லாத பரிகாரங்கள்

 சூரிய தோஷ பரிஹாரம்

நவதானியங்களில் கோதுமை சூரியனுக்கு உரியது கோதுமை , கோதுமையால் செய்த உணவுப் பண்டங்களை தானம் செய்தாலும் விசேஷ நன்மை கிடைக்கும். ஞாயிற்று கிழமை தினத்தில் ஒரு வேளை உணவை தவிர்த்து விரதம் இருந்து, சூரிய பகவானுக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். உங்கள் கைகள் மற்றும் விரல்களில் செம்பு வளையம் அல்லது செம்பு மோதிரத்தை எப்போதும் அணிந்திருப்பது நல்லது. கருப்பு நிற பசு மாட்டிற்கு ஞாயிற்று கிழமையில் உணவளிப்பதும் உங்களின் சூரிய தோஷத்தை போக்கும் சிறந்த பரிகார முறையாகும். ஜாதகத்தில் சூரியன் நீசமாக இருப்பவர்கள் சூரியன் பலம் இழந்துஇருப்பவர்கள் , ஆதித்ய ஹரிதாயத்தை தினமும் படித்தால்சூரியனால் வரும் தோஷத்தில் இருந்து விடுபடலாம். சந்திர தோஷ பரிஹாரம் நவகிரக சன்னிதியில் இருக்கின்ற சந்திரனுக்கு நெல் சமர்ப்பித்து, வெள்ளை மலர் சாற்றி, ஒரு தேங்காயை உடைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, அதன் உள்ளே நெய் ஊற்றி,தீபம் ஏற்றி வருவதால் சித்தம் தெளிவடையும், ஞாபக சக்தி அதிகரிக்கும், சிறந்த பலம் பெற்று சந்திர திசை, சந்திர புக்தி நடைபெறும் காலங்களில் ஜாதகருக்கு சந்திர பகவானால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
செவ்வாய் தோஷ பரிஹாரம் செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற் கொள்வது, தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பது நல்லது
புதன் தோஷ பரிஹாரம்
ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் காலை 7 மணியிலிருந்து 9.30 மணிக்குள்ளாக பெருமாள் கோயிலுக்கு சென்று, அவரை வழிபடுவது புதனின் தோஷத்தை குறைக்கும். அந்த புதன் கிழமைகளில் சிவன் கோயிலிலுள்ள நவக்கிரக சந்நிதியில், புதன் பகவானுக்கு பச்சை பயிறுகளை சமர்ப்பித்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுவதால் புதன் பகவான் நற்பலன்களை அளிப்பார். குரு தோஷ பரிஹாரம் குரு பகவானின் பரிபூரணமான அருள் கிடைக்க கோயில்களில் நடைபெறும் யாக பூஜைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி தரலாம். மேலும் ஏழ்மையான நிலையில் இருக்கின்ற அந்தணர்களுக்கு மஞ்சள் நிற ஆடைகளை தானம் செய்வதும், குரு பகவானின் அருட்கடாட்சத்தை பெற்றுத்தரும் ஒரு சிறந்த பரிகாரமாக உள்ளது. குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம், புஷ்பராகமணி, வெண்முல்லை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட குரு பகவானை வணங்க வேண்டும். அரசமர சமித்துகளால் ஹோமம் செய்து கடலைப்பொடி அன்னத்தால் அல்லது எலுமிச்சை ரச அன்னத்தால் ஆகுதி செய்து வேள்வியை முடிக்க வேண்டும். கொண்டைக்கடலையில் அவருக்கு மாலை அணிவிக்க வேண்டும். குரு கீர்த்தனைகளை அடாணா ராகத்தில் பாடி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இவற்றால் குரு தோஷம் நீங்கும்.


சுக்கிர தோஷ பரிஹாரம்
வெள்ளிக்கிழமைகளில் வீட்டுப் பூஜையறையில் மகாலட்சுமி திருவுருவப் படத்தை அலங்கரித்து வைத்து, நெய் தீபம் ஏற்றி, மகாலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் பாராயணம் செய்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். வெள்ளிக்கிழமை தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை நேரமான காலை 6 மணி முதல் 7 மணி குள்ளான நேரத்தில் நவகிரக சந்நிதி சென்று, சுக்கிர பகவானுக்கு மல்லிகை பூக்களை சமர்ப்பித்து, சர்க்கரை பொங்கல் அல்லது கற்கண்டுகளை நைவேத்தியம் வைத்து, நெய் தீபம் ஏற்றி 9 முறை வலம் வர வந்து, சுக்கிர பகவானை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 9 வாரங்கள் தவறாமல் சுக்கிர பகவான் வழிபாடு செய்ய வேண்டும். ஒன்பதாவது வாரத்தின் இறுதியில் பச்சரிசியை ஏழைப் பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும். சனி தோஷ பரிஹாரம் சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு வர தோஷங்கள் அகலும் சனிபகவானின் தோஷம் நீங்க சிவராத்திரியில் சிவனை வழிபடுங்கள். சிவனை வழிபடுவதால் சனிக்கு தனி அந்தஸ்து கிடைக்கும். அதனால் தோஷங்க நீங்கும் தினமும் ஒருகைப்பிடி அன்னம் எள்சேர்த்து காகத்திற்கு வைப்பது நன்மை தரும். சனிக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது 5 அகல் தீபம் நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவதும், சிவதுதி, அனுமன் துதிகளைச் சொல்வதும் நல்லது. தினமும் சிவன், லட்சுமி நரசிம்மர், அனுமன், சனிபகவான் காயத்ரி மந்திரங்களை மனதாரக் கூறுங்கள். சனி பிரதோஷ தினங்களில் நந்தி தரிசனம் செய்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானது. ராகு தோஷ பரிஹாரம் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும் தோஷ நிவர்த்தி பெறலாம். அம்மன், துர்க்கை, சரபேஸ்வரர் இவர்களுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் தோஷம் விலகும். ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
கேது தோஷ பரிஹாரம்
கேது பகவான் “ஞானகாரகன்” என்பதால் ஜீவ சமாதியடைந்த ஏதேனும் ஒரு சித்தரின் சமாதி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். துறவிகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் அளிப்பதும் கேது தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வந்தால் கேது தோஷம் விலகும்.

No comments:

Post a Comment