அமெரிக்கா முன்னாள்
அதிபர் பராக் ஒபாமா ஜாதகம்- லக்கினம் மற்றும் லக்கினாதிபதி வலுப்பெற்றால் யோகமான வாழ்வு .
ஒரு ஜாதகத்தில் எந்த லக்கினமாக இருந்தாலும் லக்கினம் மற்றும் லக்கினாதிபதி
நிலையை நன்கு ஆராய வேண்டும்.
லக்கினம் , மற்றும்
லக்கினாதியாதி வலுத்தால் , உயர்தரமான யோக வாழ்வு .அமைகிறது .
லக்கினம் மற்றும் லக்கினாதிபதி
வலுப்பெற்று , மற்ற கிரஹங்கள் வலுப்பெற்றால் , ஜாதகர் ஒரு மன்னனை போன்று வாழ்வர்.
ஒபாமா ஜாதகத்தில் லக்கினாதிபதி
சனி லக்கனத்தில் ஆட்சி பெற்று குருவுடன் இனனிந்து (குரு லக்கினத்தில் திக்பலம்) மிக வலுவான சச யோகம் , சாமர யோகம் , சிவராஜ்ய யோகம்
அமையப்பெற்றதால் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி
வகிக்க முடிந்தது.
மனைவியை குறிக்கும்
கிரகமான (7ம் அதிபதி உச்சம்) சந்திரன் 5 இடத்தில உச்சம் பெற்றதால் மனைவியால் யோகம்.
பல ஜென்மங்களில் புனியம்
செய்து இருந்தால் குரு லக்கினத்தில் இருப்பார்.
லக்கினத்தில் குரு
திக்பலம்
1.நேர்மையானவர்கள்
2. நல்ல உடலமைப்பு
3. பரந்த மனப்பான்மை
4. அறிவாளிகள்
, மத தலைவர்கள் , பிறருக்கு வழிகாட்டுவார்கள்
5. சட்டங்களை மதித்து
நடப்பவர்கள்
6. குறைந்த ஆசாபாசங்கள்
உடையவர்கள்
7. யாரையும் பகைத்து
கொள்ளமாட்டார்கள் ,
8. பெரிய மனிதர்கள்
நட்பு ,
குரு நீச்சம் பெற்றாலும்
திக் பலம் அடைந்ததால் நீச்ச பங்க ராஜ யோகம் . நீச்சம் நின்ற ராசி நாதன் சனி ஆட்சி பெற்றதால் நீச்ச பங்க
ராஜயோகம்
ஒபாமா ஜாதகத்தில் புஷ்கர நவாம்சமான உத்ராஷாட நட்சத்திரம் 4 வது பாதத்தில் சனியும் குருவும் உள்ளனர். இரண்டு கிரகங்களும் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரம் சாரம் பெற்று உள்ளனர் மற்றும் சூரியன் அரசாங்க கிரகம் ஆவார் . சூரியன் 8 ஆம் அதிபதியாக இருந்தாலும், புஷ்கர நவாம்சம் இங்கு ஒரு முக்கிய தீர்மானிக்கும் காரணியாகும், இது ஜாதகரின் பொது அந்தஸ்தை அசைக்க முடியாத அளவிற்கு உயர்த்தியது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர்த்தியது.
ஒரு சிலருக்கு மனைவியால்
யோகம் ஏற்படும். ஒபாமா ஜாதகத்தில் 7ம் அதிபதி யான சந்திரன் அவருடைய மூல திரிகோண ராசி யில் உச்சம். ஒபாமாவின் மனைவி ஒபாமாவிடம் காரியதரிசியாக
பணியாற்றியவர். அவரையே காதலித்து மணந்து கொண்டார். 7ம் அதிபதி சந்திரன் உச்சம் பெற்றதால்
மனைவி வந்த பிறகு அதிர்ஷ்டம் ஒபாமாவை அரவணைத்து
கொண்டது
No comments:
Post a Comment