யாரெல்லாம் கனக புஷ்பராகம் அணிய வேண்டும் ? Yellow Sapphire
யாரெல்லாம் கனக புஷ்பராகம் அணிய வேண்டும் ? Yellow Sapphire
கனக புஷ்பராகம் - அதிர்ஷ்டக்
கற்கள்
கனகம் என்ற சொல்லுக்குத் தங்கம் என்று பொருள். தங்கம் மஞ்சள் நிறமுடையது.
இதனால் தான் தங்க நிறமுடைய புஷ்ப ராகத்தை கனக புஷ்பராகம் சுமாரான எடை கொண்டதாகவும்,
ஒளி ஊடுருவும் ரத்தின கல்லாகவும் பயன்படுகிறது.
வெற்றி வேல்
மணி
‘தேடுதற்கு அரிதான நவமணி அழுத்தி இடு… சண்முகன் கை வேலே’
என்று முருகனின் கையில் இருக்கும் வெற்றி வேலில் தேடியும் கிடைப்பதற்கு அரிதான ஒன்பது
இரத்தினங்கள் பதிக்கப்பட்டிருப்பதை வேல் விருத்தம் போற்றிப் புகழ்கிறது.
அக்னி புராணம்,
கருட புராணம்
நவ ரத்தினங்களில் ஒன்றான புஷ்பராகம் நமது இதிஹாஸங்களிலும்
அக்னி புராணம், கருட புராணம் ஆகிய நூல்களிலும் பெரிது சிறப்பாகப் பேtசப்படும் ரத்தினம்.
கருடபுராணத்தில் 68ஆம் அத்தியாயம் முதல் 80ஆம் அத்தியாயம்
வரை ஒன்பது நவரத்தினங்கள் பற்றிய விளக்கமும் அவற்றைச் சோதனை செய்து தேர்வு செய்யும்
முறையும் நன்கு விளக்கப்பட்டுள்ளது. 74ஆம் அத்தியாயம் புஷ்பராகத்தைப் பற்றிப் புகழ்ந்து
விளக்குகிறது.
Topaz
புஷ்பராகத்தை ஆங்கிலத்தில் டோபாஸ் (Topaz) எனக் கூறுவர். தபஸ் என்ற
சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து
டோபாஜியோஸ் (Topazios) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை
உருவானதாகக் கருதுகின்றனர்.
பைபிள்
மஞ்சள் நிற இரத்தினம் பற்றிப் பல இடங்களில் பைபிள் குறிப்பிடுகிறது.
மன்னர்கள் அணிந்த
கனக புஷ்ப ராகம்
19ஆம் நூற்றாண்டில் ரஷியாவில் ஜார் அரசாண்ட காலத்தில்,கனக புஷ்ப ராகத்தைஜார் மன்னரும் அவர் குடும்பத்தினரும் அணிந்தனர். 1680 கேரட்டில் கிடைத்த புஷ்பராகம் போர்த்துக்கீசிய மன்னரின் மகுடத்தில்
பதிக்கப்பட்டது 31000 கேரட் உள்ளகனக புஷ்ப
ராகம் கல் எல்-டோராடோ டோபாஸ் என அழைக்கப்படுகிறது. இதன் எடை 6.2 கிலோ ஆகும். இதுவும்
பிரேஜிலில் வெட்டி எடுக்கப்பட்ட கல் ஆகும். 37 கிலோ கல்லிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு
உருவாக்கப்பட்ட இந்த அரிய கல் இப்போது பிரிட்டிஷ் அரச வம்சத்தினரிம் உள்ளது.
யாரெல்லாம் கனக
புஷ்பராகம் அணிய வேண்டும்?
1.குரு பகவான் அதிபதியான தனுசு மற்றும் மீனராசிக்காரர்கள் கனக புஷ்பராகம் அணியலாம்.
2.கனக புஷ்பராகம். குரு திசை நடப்பவர்களும்அணியலாம்.
3. 3,12,21 ஆகிய தேதியில் பிறந்தவர்கள்இதை அணியலாம்.
4.ஜாதகத்தில் குரு பகவான் 6,8,12 ல் மறைந்தவர்கள்அணியலாம்.
5. ஜாதகத்தில் குரு நீச்சம் அடைந்து நீச்ச பங்க ராஜ யோகம் அடையாதவர்கள் கனக புஷ்ப
ராகத்தை அணிய வேண்டும்.
6. ஜாதகத்தில் அம்சத்தில் குரு நீச்சம் அடைந்தவர்கள் கண்டிப்பாக கனகபுஷ்ப ராகம் அணிய
வேண்டும்.
7. குரு பகவான் ஜாதகத்தில்குரு அஸ்தங்கம்அடைந்து இருந்தால் கண்டிப்பாக கனகபுஷ்ப ராகம் அணிய
வேண்டும்.
குரு சேர்ந்து அஸ்தங்கம்அடைந்தால் புத்திர தடையை ஏற்படுத்துவார்..ஏனைய பிற அமைப்புகள் பொறுத்து தனயோகம் அமைகிறது.
குரு சேர்ந்து அஸ்தங்கம்
அடையும் போதுபழமையில் நம்பிக்கையாக
இருத்தல் எதனையும் செய்ய முடியும் என அதீத கர்வத்துடன் இருத்தல்
அளவுக்கு மீறிய வாக்குறுதிகளை கொடுத்தல்
தடங்கலில் தடுமாறி மீளாமல் இருத்தல்
தம்மால் மட்டுமே நீதியினை நிலைநாட்டமுடியும்
என்று இருத்தல்ஒழுக்கமானவராக தன்னை காட்டிக்கொள்ளுதல்
நியாபகமறதி அதிகம் இருத்தல்உடல் வலி,வாயு தொல்லைகளினால் அவதிப்படுதல்
குரு வக்ர நிலையில் இருக்கும் போது பாதிப்பை சந்திப்பவர்கள், வியாழக்கிழமைகளில் மஞ்சள்
நிற ஆடை அணிந்து குருபகவானை வணங்கவும். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை சாற்றவும்
8. ஜாதகத்தில் பகவான் குரு வக்கிரம்அடைந்துஇருந்தாலும் கனகபுஷ்ப ராகம் அணிய வேண்டும். உதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு குரு யோகாதிபதி ஆவார் குரு வக்ரம்
பெற்று நிற்கும்பொழுது தனது ஆதிபத்திய வீடுகளான 9 மற்றும் 12ஆம் வீட்டு பலன்களை முழு
பலத்தோடு செய்வார் ஆனால் தனது காரகத்துவ ரீதியாக அவர் குறைகளை தருவார் குறை என்றால்
குறைத்துத் தான் தருவார்கள் தவிர அந்த காரகத்துவங்கள் இல்லாமல் போய்விடாதுஎந்த கிரகம்
வக்ரமாகி உள்ளதோ அந்த காரக உறவுகளில் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உதாரணமாக.. குரு
வக்ரம் எனில்.. குழந்தைகளிடம்
குரு வக்ரம் பெற்றால் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை,
புத்திர பாக்கிய தடை, பெண் என்றால் கர்பபை பிரச்சனைஉண்டாகிறது
குரு வக்கிரம் பெற்றால் பல இன்னால்கலைத்தரும் பாதக,மாரகாதிபதியாகியிந்தால் மாரகத்தையும். அரசு வகை தண்டனைகள் கிட்டும்.
தெழில்வகை யில் பல சங்கடங்கலைத் தருவர். கோட்சாரத்தில் குரு வக்கிரம் பெறும் காலத்தில்
மிக எச்சரிக்கையு டன் இருப்பாது அவசியம். சுய கௌரவம் பாதிக்கும். மறைமுக விஷயங்கள்
அம்பலம் ஆகும்.
ஒருவர் சுய ஜாதகத்தில் வக்கிர கிரகங்கள்
இருந்தால் அந்த காரகத்துவ பலன்கள் அந்த திசா காலத்தில் தூக்கலாக கொடுக்கிறது.உதாரணமாக
குரு வக்கிரம் எனில் எந்த நேரத்திலும் குழந்தைகளை பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும்.குழந்தைகளுக்காக
நிறைய தியாகம் செய்வார்கள் குழந்தைக்கு தேர்வு எனில் இவர்களும் பக்கத்தில் டீ காபி
போட்டு கொடுத்து முழித்து கொண்டு இருப்பார்.இது ஆண்களின் ஜாதகத்தில் இருந்தாலும் மேலே
சொன்ன படி பிள்ளையின் ஞாபகமாகவே இருப்பார்கள்
.குரு ஐந்தில் வக்ரம் எனில் குழந்தை
பெற்றுக்கொள்ள நிறையவே நேரம் பணம் செலவு செய்வார்கள்.குழந்தை பிறந்த பின் அவர்கள் கூடவே
பயணம் செய்வார்.இவர்களுக்கு அனைத்தும் குழந்தை தான் என்று இருப்பார்.(குரு குழந்தை, குரு வக்கிரமானாலும்
ஐந்தாம் பாவகம், ஐந்தாம் அதிபதி நன்றாக இருந்தால் பலன் மாறுபடும்)
எந்த மாதிரியான பலன்களைகொடுக்கும் ?
இதை அணிந்தால் மன நிம்மதியைக் கொடுக்கும்,
நல்ல செல்வத்தைக் கொடுக்கும்.
இந்தக் கல் அணிவது நமக்கு கம்பீரத்தைக் கொடுக்கும்.
துணிச்சல் பிறக்கும்.
பொருளாதாரத்தில் முன்னேற்றம்
கனக புஷ்பராகம்அணிவது நமக்கு கம்பீரத்தைக் கொடுக்கும்.
துணிச்சல் பிறக்கும்
பொருளாதாரத்தில் முன்னேற்றம்உண்டாகும்.
திருமணத் தடை நீங்கும்.
வீடு கட்டும் வாய்ப்பு உண்டாகும்.
பெரும்புகழ் கிடைக்கும்.
சூழ்ச்சிகளில் இருந்து நம்மை விடுவிக்கும் . கோபம் குறையும்.
நிலம், வீடு, வாகனம், வாங்கும்
நிலை உருவாகும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பைக் கொடுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
நுரையீரல்,இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து காக்கும்.
நல்ல செரிமானத்தை கொடுக்கும்.
மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகிய வற்றில் இருந்து காக்கும்.
உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.
எப்படி உண்மையான
கனக புஷ்ப ராகம்என்பதை அறிவது ?
இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். போலியான கற்கள்
சந்தையில் நிறைய உள்ளது. சாதாரண கற்களை மஞ்சள் நிறம் ஏற்றி கனக புஷ்ப ராக கல் என்று
ஏமாற்றுகிறார்கள்.ஆகையால் மிக்க கவனம் தேவை
.
1.அகத்தியர் தனது “அகத்தியர்
வாகடம்” என்ற நூலில்
எப்படி உண்மையான கனக புஷ்ப ராகம்என்பதை அறிவதற்கு
வழிமுறையை சொல்லிஉள்ளார். உண்மையான கனக புஷ்ப
ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
2.மத்திய அரசால் அங்ககரிக்க பட்ட பரிசோதனை மையத்தில் சோதனை செய்து
அவர்கள் இதுஇயற்கையான கனக புஷ்ப ராகம் என்று
சான்றிதழ் அளிப்பார்கள்.
பிறவியோகியாக
குரு
பிறவியோகியாக குரு பகவான் ஜாதகத்தில்அமையப் பட்டவர்கள் அணிவது. பிறவியோகியானது ஜாதகத்தில் சூரியன் மற்றும் சந்திரன் இருக்கும் இராசி,
பாகை, நிமிடம் தகவல்கள் மூலமாக கணக்கிடப்படும்.
பிறவியோகிகுருபகவானுக்கு
உரியன : இரத்தினம் - புட்பராகம்; திசை - வடக்கு; வண்ணம் - மஞ்சள்; உலோகம் - தங்கம்
முதலியன.
பிறவியோகி வியாழனுக்கு உரிய
இரத்தினமான புட்பராகம்,பின்புறம் திறந்த
நிலையில், open settingபொருத்தப் பட்ட மோதிரம்,
ஆள்காட்டி விரலில் அணிவது வாழ் நாட்கள் முழுவதும் நல்ல பலன்களை கொடுக்கும்.
மகாதிசை வரிசையில் பிறவியோகி கிரகம் முதல் எண்ணி வர 6 வது வரும்
கிரகம் அவயோகி என்று குறிப்பிடப்படும்.
உதாரணமாக குரு பகவான் ஜாதகருக்கு பிறவியோகி என்றால் சூரியன் அவருக்கு
அவயோகி என்று குறிப்பிடப்படும்.
அவயோகி சம்பந்தப்பட்டவை ஜாதகருக்கு தீயபலன்களை கொடுக்கும். இவர்கள்
மாணிக்கம் அணிவதை தவிர்க்க வேண்டும்.இவர்களுக்கு
சூரிய திசை , புத்தி , அந்திரம் யோக பலன்களை தராது..
சுக்கிர பகவான் ஒருவருக்கு பிறவியோகி என்றால்குரு பகவான் அவருக்கு அவயோகி ஆவார், இவர்கள் கனக
புஷ்ப ராகம் அணிந்தால் யோகமான பலன்களை குரு தசை , புத்தி மற்றும் அந்திரம் ஆகியவற்றில்
இவர்களுக்கு தருவார்கள்.
விலக்கத்தக்க புஷ்பராகம் :-
மேல் பரப்பில் கரும் புள்ளிகள் இருப்பது, கரடுமுரடாக இருப்பது, வெண்மையாக
இருப்பது, ஒளி இழந்து இருப்பது, இயல்பான தனது வண்ணத்துடன் இன்னொரு வண்ணம் கலந்திருக்காமல்
இருப்பது, புள்ளிகள் இருப்பது
– இப்படி உள்ள புஷ்பராகம் விலக்கத்தக்கது.
புஷ்பராகம் எப்போது அணிய வேண்டும்
?
புஷ்பராகக் கல்லை அணியும்போது வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் உடலில்
படும்படி அணிந்து கொள்வது நல்லது. மற்ற நாட்களிலும் குரு ஹோரையில் அணிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment