கிரஹ யுத்தம் -
சூரியன் மற்றும் சந்திரனை தவிர்த்து மற்ற கிரஹங்கள் ஒரு பாகைக்குள்
வரும்பொழுது இரண்டு கிரஹங்களுக்கும் யுத்தம் ஏற்படும். அதிக பாகையில் நிற்கும் கிரகம்
தோற்றுவிடும். அதை விடக் குறைந்த பாகையில் உள்ள கிரகம் வெற்றி பெறும்.
இங்கே புதன் 62:47:6 பாகையிலும்
சுக்கிரன் 63:46:31 பாகையுலும் நின்றதால் கிரஹ யுத்தம். சுக்கிரன் அதிக
பாகையில் நின்றதால் தோல்வி. புதன் சுக்கிரனை
குறைந்த பாகை வாங்கியதால் கிரஹ யுத்தத்தில் தோல்வி.
கும்ப லக்கினத்திற்கு சுக்கிரன்
யோககாரகர் என்பதால் அவர் தோல்வி அடைவதால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தடை
ஏற்படுத்துவார். அதிர்ஷ்டம் தட்டி போகும்.
சுக்கிர தசை புக்தி அந்திரம் நன்றாக வேலை செய்ய இவர்கள் கண்டிப்பாக சுக்கிரனுடைய ராசி
கல்லான வைரம் அணிய வேண்டும். சுக்கிரன் கிரஹ
யுத்தத்தில் தோல்வி அடைந்தாலும் வக்கிரம் பெற்றதால் யோகத்தை தருவார் ஜாதகருக்கு. சுக்கிர
வழிபாடு வெள்ளிக்கிழமைகளில் கண்டிப்பாக செய்ய வேண்டும்
செவ்வாய், குரு, சுக்கிரன்,
புதன், சனி ஆகிய 5 கிரகங்களுக்கு மட்டுமே கிரக யுத்த விதிகள் உண்டு.செவ்வாயுடன்
இணைந்துள்ள கிரகங்கள் செவ்வாயின் பாகையை விட குறைவான பாகையில் இருந்தால் அந்த கிரகங்கள்
யுத்தத்தில் தோல்வி அடைந்து தன் சுயபலத்தை இழந்து விடுகின்றன.
No comments:
Post a Comment