Monday, December 18, 2023

திருநள்ளாறு வாக்கிய பஞ்சாங்க சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023 -2...


சிம்மம்:

திருநள்ளாறு சனி பெயர்ச்சி

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5-20 மணிக்கு மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

சிம்ம ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில்  சிம்ம  ராசிக்கு  சனி  சப்தம ஸ்தானமான  7ம் இடத்திற்கு வருவதும் , ராகு 8ல் இருப்பதும் கேது 2 ல் இருப்பதும் குரு  9ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   10ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் நன்மை மற்றும் தீயபலன்கள் கலவையாக  நடைபெறும். சனி 7ல்  கோச்சாரத்தில் இருப்பது கடினமான பலன்களை  சிம்ம ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். ராகு 8ல் இருப்பதும் குரு 10 ம்  இடத்தில்  இருப்பதும் சுமாரான பலன்களை தரும், ஆகையால் கடக  ராசி நேயர்கள்  சனி ,ராகு , கேது மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.



சிம்ம   ராசி நேயர்கள்  வெறும் 25 சதவீதம்  யோகமான பலன்களை மட்டும்  அனுபவிக்க இருக்கிறார்கள். சிம்ம ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மை மற்றும் தீய பலன்கள் கலவையாக நடக்க இருக்கிறது. .

சிம்ம  ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே  கலவையாக நடைபெறும்.

மேலும் பாதகாதிபதி , மாரகாதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும்  இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.

 கண்டச்சனி காலம் என்றாலும் கவலை வேண்டாம்.

சனிபகவான் சிம்ம  ராசிக்கு ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானத்தில் கண்டச்சனியாக பசஞ்சரிக்க போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசி நேயர்களுக்கு உயர்தரமான  பலன்கள் கிடைக்கப்போகிறது. இந்த சனி பெயர்ச்சியால்  வேலையில்  உள்ளவர்களுக்கு  பதவி உயர்வை தருவார்,



ஒரு சில சிம்ம ராசி நேயர்கள் .வெளிநாடு  படிக்க அல்லது வேலை செய்ய அல்லது தொழில் தொடங்குவார்கள். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு  எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.. 7ம் இடத்தில் ஆட்சி பெற்ற  சனி பகவானால் சச யோகத்தால்  யோகமான பலன்கள் சிம்ம ராசி நேயர்களுக்கு உண்டாகும்.. பண வரவும் சேமிப்பும் அதிகரிக்கும். கும்ப ராசியில் உள்ள ஆட்சி பெற்ற சனியின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் தீய பலன்கள் குறையும். ஏழுக்கு உடைய சனி  ஏழில் இருப்பதால் திருமணம் தடைகளை தாண்டி இந்த இரண்டரை ஆண்டுகளில் தடைபெற்ற திருமணம் நிறைவேறும்.

ஏப்ரல் 2025ஆம் ஆண்டு வரை களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் கணவன் மனைவி குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நன்மை தரும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

வருகின்ற 1 மே 2024 முதல் குரு பகவான் சிம்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்திற்கு வர இருக்கிறார். கோச்சாரத்தில் குரு 10ல் இருக்கும் பொழுது வேலை மற்றும் தொழிலில் பிரச்சனைகளை இருக்கும். 10ல் குரு வரும் பொழுது பதவி பாழ் என்று கூறுவார்கள். பிரதமர் , முதல் அமைச்சர் , அமைச்சர் பதவிகளை குரு 10ல் பொழுது அரசியல்வாதிகள் இழந்து இருக்கிறார்கள். துரியோதனன் பட்டம் இழந்ததும் , இறைவனே ஒரு தலைஓட்டில் இரந்துண்டு வாழும் நிலைக்கு தள்ள பட்டதும் குரு 10ம் இடத்திற்கு வந்த பொழுதுதான் என்பதை நாம் உணர வேண்டும். சிம்ம ராசி நேயர்கள் செய்யும் வேலையில் அல்லது தொழிலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம் இது .



கோச்சாரத்தில் கேது 2ம் இடத்திலும் ராகு 8ம் இடத்திலும் சிம்ம ராசிக்கு சஞ்சாரம் செய்வது நன்மையான பலன்கள் நடை பெறுவதற்கு தடையை ஏற்படுத்தும். முன் கோபத்தால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பரிஹாரம்

சனிக்கிழமையன்று ஊனமுற்றோர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். சனிபகவானின் குருவான கால பைரவரை தினமும் மற்றும் தேய்பிறை அஷ்டமியில்  வணங்குங்கள்  சனி பகவான் உங்களுக்கு நன்மையே தருவார்.சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவான், பைரவரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

சிம்ம    ராசிக்கு  ராகு  8 ல் இருப்பதும் கேது 2ல் இருப்பதும் , குரு   வருகின்ற 1 மே 2024  முதல்   10ம் இடத்தில் தனகாரகர் குரு அமர்ந்து  இருப்பதும் தீய பலன்களை சிம்ம   ராசி நேயர்கள் அனுபவிக்க நேரிடும். ஆகையால் உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில்ராகு  பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி சனிக் கிழமைகளில் வழிபடலாம். செவ்வாய் கிழமை தோறும் கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும் .


No comments:

Post a Comment