Tuesday, December 19, 2023

திருநள்ளாறு வாக்கிய பஞ்சாங்கபடி சனீ பெயர்ச்சி கன்னி ராசி பலன்கள் 2023 ம...


         கன்னி ராசி  சனி பெயர்ச்சி பலன்கள்

கன்னி ராசிக்கு ருண ரோக சத்ரு சனி

திருநள்ளாறு சனி பெயர்ச்சி

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5 மணி 23 நிமிடத்திற்கு  மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.



கன்னி  ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில்   கன்னி  ராசிக்கு  சனி  ருண ரோக சத்ரு  ஸ்தானமான  6ம் இடத்திற்கு வருவதும் , ராகு 7ல் இருப்பதும் கேது 1 ல் இருப்பதும் குரு  8ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   9ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் நன்மை மற்றும் தீயபலன்கள் கலவையாக  நடைபெறும்.

சனி 6ல்  கோச்சாரத்தில் இருப்பது யோகமான பலன்களை  கன்னி ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள்.

கன்னி ராசிக்கு 6ம் இடத்தில் சனி அமர இருப்பதால் ,  கன்னி ராசி நேயர்களின்  வாழ்க்கை முழுவதும் வலிமையும், பலமும் நிறைந்தவராக, எதிரிகள் பந்தாடப்படுவர். எதிர்பாராத பண வரவு கிடைப்பதோடு, தைரியமும், துணிவுடன் தன் வாழ்க்கையை நடத்துவார்.ஆரோக்கியம் மேம்படும், மனோ தைரியம் மிகுந்து காணப்படும்.

ராகு 7ல் இருப்பதும் கன்னி ராசியில் கேது இருப்பதும் குடும்ப வாழ்க்கையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .



குரு 9 ம்  இடத்தில்  இருப்பதும் நன்மையான  பலன்களை தரும். ஓடிப்போனவனுக்கு குரு 9ல் என்று கூறுவார்கள். கன்னி ராசி மாணவர்கள் கல்வியில் மனமை அடைவார்கள். புதிய ஆராய்ச்சிகளை செய்து ஒரு சிலர் முனைவர் பட்டம் பெறுவார்கள்., இது நாள் வரை  புத்திர பாக்கியம், தடைபெற்றவர்களுக்கு தற்சமயம் உண்டாகும். விரும்பிய வண்ணம் காரிய வெற்றி, நிலபுலன் சேர்கை ஆகியவை ஏற்படும்.

ஆகையால் கன்னி ராசி நேயர்கள்,ராகு , மற்றும் கேது பிரீத்தி செய்வது நன்மை தரும்.

கன்னி  ராசி நேயர்கள்   85 சதவீதம் யோகமான பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள். கன்னி ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மையான பலன்களே அதிகம்  நடக்க இருக்கிறது.

கன்னி   ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே  கலவையாக நடைபெறும்.



மேலும் பாதகாதிபதி , மாரகாதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும்  இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.

சனி ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின், கோட்சார ரீதியாக கெடுபலன் தரும் ஸ்தானத்தில் இருப்பினும் அது அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

 கன்னி ராசிக்காரர்களே.. சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஐந்தாம் இடத்தில  இருந்து கன்னி ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். பொதுவாக சனி பகவான் 3 ,6, 11 போன்ற இடங்களில் சஞ்சரிக்கும் பொழுது ஜாதகருக்கு யோகமான பலன்களை அள்ளித்தருவார் என்பதில் சிறிதளவும் ஐயம் கொள்ள வேண்டாம்.   6ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து சனி பகவான் முழு ராஜயோகத்தையும் கன்னி ராசி நேயர்களுக்கு தரப்போகிறார். . ஆறாம் வீட்டு அதிபதி சனி பகவான் ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பது ஹர்ஷ யோகம் என்று அழைக்கபடும்.

இந்த ஹர்ஷ யோகத்தால் , கன்னி ராசியை நேயர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுப்பர். ஆரோக்கியத்தில் நல்ல முனேற்றம் காணப்படும். நல்ல துணிச்சலை தரும்.. தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பார்கள். . மாணவர்களுக்கு உயர் கல்வி யோகம் உண்டாகும். .எதிரிகளை வெல்லும்ஆற்றலை கொடுக்கும். வம்பு , வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும்.

.சனி பகவான் ஆறாம் வீடானா கும்பத்திற்கு  தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும்.  ஆரோக்கியம் பெருகும். வருமானம் பெருகி கடன்கள் அடைபடும். . அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர்  எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி வரும்.. புதிய தொழில்களை மூலம் லாபங்கள் அதிகரிக்கும். . எதிரிகளை வெற்றிக்கொள்வீர்கள்.. உங்களின் வாழ்க்கையில்  ராஜயோகத்தை தரப்போகிறார் சனி பகவான். இனி இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம். யோகமான வாழ்கை தேடி வரும். வரும் தை மாதத்திற்குப் பிறகு கன்னி ராசிக்காரர்களின் செல்வமும் செல்வாக்கும் ஓங்கி காணப்படும்.

பரிஹாரம்

ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் ருண ரோக சத்ரு ஸ்தான சனி என்பதால் திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

ராகு 7ல் இருப்பதும் கன்னி ராசியில் கேது இருப்பதும்  குடும்ப வாழ்வில் சில சங்கடங்களை ஏற்படுத்தும்.ஆகையால் உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில் கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி செவ்வாய் கிழமைகளில் வழிபடலாம். ராகு பகவானுக்கு சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும் .


No comments:

Post a Comment