சிம்மம்
வருகின்ற ஏப்ரல் 2024 வரை குரு பகவான்
9ல் கோச்சாரத்தில் சஞ்சரிப்பார். இதுநாள் திருமணம் தடைபெற்றவர்களுக்கு தற்சமயம் திருமணம்
நடைபெரும். குடும்பத்தில் குதூகலம் மிகும். பண வரவு சரளமாக இருக்கும்
வரும். 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல்
குரு பகவான் 10ல் அமர்ந்து 2,4 ,6 இடங்களை பார்வை செய்வார். பிரிந்த குடும்பம் ஒன்று
சேரும். தன வரவு சரளமாக இருக்கும். சொத்துக்கள் , வாஹனம் வாங்குவீர்கள். கடன்களை அடைக்க
கூடிய நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக கண்களில் இருந்த பார்வை கோளாறு இப்போது சரியாகும். உங்களுடைய பேச்சு சாதுர்யத்தால் எதிரிகளை
வெல்வீர்கள். ஒரு சில நேயருக்கு தாய் வழி சொத்து கிடைக்கும்.நீண்ட காலமாக இருந்த உடல்
நல பிரச்னைகள் நீங்கி நல்ல ஆரோக்கியம் பெறுவார்கள்.
குரு 10ம் இடத்தில வருகின்ற 30-4-2024 வரை சஞ்சரிக்க
இருப்பதால் வேலையில் அல்லது தொழிலில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாழக்கிழமைகளில்
நவகிரஹங்களில் உள்ள குரு பகவானை வழிபட பிரச்சனைகள் தீரும்.
கண்டச்சனி
காலம் என்றாலும் கவலை வேண்டாம்.
சனிபகவான் சிம்ம ராசிக்கு ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானத்தில் கண்டச்சனியாக
பசஞ்சரிக்க போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசி நேயர்களுக்கு உயர்தரமான பலன்கள் கிடைக்கப்போகிறது. இந்த சனி பெயர்ச்சியால் வேலையில்
உள்ளவர்களுக்கு பதவி உயர்வை தருவார்,
ஒரு சில சிம்ம ராசி நேயர்கள் .வெளிநாடு படிக்க அல்லது வேலை செய்ய அல்லது தொழில் தொடங்குவார்கள்.
வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த
முன்னேற்றம் உண்டாகும்.. 7ம் இடத்தில் ஆட்சி பெற்ற சனி பகவானால் சச யோகத்தால் யோகமான பலன்கள் சிம்ம ராசி நேயர்களுக்கு உண்டாகும்..
பண வரவும் சேமிப்பும் அதிகரிக்கும். கும்ப ராசியில் உள்ள ஆட்சி பெற்ற சனியின் பார்வை
உங்கள் ராசியின் மீது விழுவதால் தீய பலன்கள் குறையும். ஏழுக்கு உடைய சனி ஏழில் இருப்பதால் திருமணம் தடைகளை தாண்டி இந்த இரண்டரை
ஆண்டுகளில் தடைபெற்ற திருமணம் நிறைவேறும்.
ஏப்ரல் 2025ஆம் ஆண்டு வரை களத்திர
ஸ்தானமான ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் கணவன் மனைவி குடும்பத்தில் விட்டு கொடுத்து
போவது நன்மை தரும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
தங்கள் கூட்டாளிகளின் நடவடிக்கைகளை
உன்னிப்பாக கவனித்து வரவேண்டும். சனி கிழமைகளில்
சனி ப்ரீதி செய்வது நன்மை தரும்.
No comments:
Post a Comment