கடகம்
வருகின்ற ஏப்ரல் 30 2024 வரை குரு பகவான் 10ல் இருப்பதால் , வேலையில்
தொழிலில் மிக்க கவனம் தேவை. வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு
செய்து வரவும் .
கடக ராசிக்கு சனிபகவான் இதுநாள் வரை
ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக்
கொடுத்தார் இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். அகப்பட்டவனுக்கு அஷ்டம
சனி என்று கூறுவார்கள்.
இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை
எதிர்கொண்டாலும் அவற்றை சமாளிக்கும் திறன்
உங்களுக்கு ஏற்படும்.. எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது சரள யோகம் ஆகும். நீண்ட ஆயுள் , ஆரோக்கியமான உடல்
அமைப்பு , காரியங்களில் வெற்றி ஆகியவை உண்டாகும்.
எதிர்பாராத பணவரவு வந்து கடக ராசி நேயர்களை திக்குமுக்காட வைக்கும்.
கடன் வாங்கி புதிய பணமுதலீடுகளை செய்ய
வேண்டாம். புதிய தொழில் முயற்சிகள் மே
2024 க்கு பிறகு மேற்கொள்ளலாம். நீங்கள் பார்த்து வருகின்ற வேலையை
விடும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை
யோசிக்கவும். மற்றவர்கள் கூறும் பேராசை வார்த்தைகளை
நம்ப வேண்டாம்.
பங்குச்சந்தை முதலீடுகளில் ஈடுபட வேண்டாம்..
இருக்கிறதை வைத்துக்கொண்டு மனநிறைவு உடன் வாழுங்கள்.
பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.
இந்த ஆண்டு முழுவதும் கேது 3ல் சஞ்சரிப்பது யோகமான பலன்களை தரும், ராகு 9ல் இருப்பது
தந்தையின் ஆரோக்யத்தில் கவனம் தேவை. ஏப்ரல் 2024 வரை குரு பகவானுக்கு நெய் தீபம் வியாழக்கிழமைகளில்
கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது யோகத்தை தரும்.
No comments:
Post a Comment