Search This Blog

Sunday, December 31, 2023

மிதுன ராசிக்கு 2024 புத்தாண்டு பலன்கள் என்ன? மிதுன ராசிக்கு 2024 ஆண்டு ...


மிதுனம்:

11ல் உள்ள லாப  குரு பண பலத்தையும் மன பலத்தையும்  அதிகரிக்க செய்வார்.. செய் தொழிலில் ஏற்றம் காணும்.. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அமைதியும் ஆனந்தமும் குடியேறும். புதிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும்.

2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குருவின் பயணம் நிறைய விரைய செலவுகளை தரப்போகிறது. பணத்தை பத்திரப்படுத்துங்கள்.வீண் சிலைவுகளை குறையுங்கள். தாயின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் காணப்படும். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். எதிரிகளை வெற்றி காணிப்பீர்கள். ஆரோக்கியம் உயரும் . ஒரு சில நேயருக்கு தாய் வழி சொத்து கிடைக்கும். மரண பயம் நீங்கும்; சிறு விபத்துகள் ஏற்பட்டாலும் தப்பித்துக் கொள்ளலாம்.நல்ல மன நிலை உண்டாகும்



மிதுன ராசி நேயர்களுக்கு அஷ்டமத்து சனி முடிவுக்கு வரப்போவதால்  இது நாள் வரை மிதுன ராசிக்காரர்கள்  அனுபவித்த கஷ்டங்கள் தீரப்போகிறது. பொருளாதார நெருக்கடிகள் நீங்கி தாராள பணவரவு ஏற்படும்.. தீராத நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு விடிவுகாலம் வரப்போகிறது.

 உடல் ஆரோக்கியம்  மேலோங்கும். உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். அஷ்டம சனியால் எத்தனையோ பிரச்சினைகளையும் அவமானங்களையும் சந்தித்த மிதுன ராசி நேயர்களுக்கு இனி எல்லாம் நல்லதாகவே நடக்கப்போகிறது.



ஒன்பதில் உள்ள பாக்ய சனியால் அதிர்ஷ்ட காற்று அதிகரிக்க போகிறது.. பணவரவு  சரளமாக இருக்கும். வேலையில் சம்பளம் மற்றும் பதவி  உயர்வு  கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம்  ஏற்படும்.. நகை, பொன் பொருள், சொத்து , வாகன  சேர்க்கை உண்டாகும்.. நிறைய தான தர்மங்களை தர்ம சனி காலத்தில் செய்வது கர்ம வினையை அகற்றும்.

2024 முழுவதும் கேது  பகவான்  மிதுன ராசிக்கு 4ல் இருப்பது யோகமான பலன்களை  தருவதற்கு தடை ஏற்படுத்தும். உங்கள் தாயாரின் உடல் நிலை யில் கவனம்  செலுத்த வேண்டும். செவ்வாய் கிழமைகளில் கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். குரு 12ல் கோச்சாரத்தில் வரும் பொழுது குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில்  நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் .உங்கள் குலதெய்வத்தை அடிக்கடி மனிதில் நினைத்து வழிபட்டு வர வளமான வாழ்வு அமையும்.




No comments:

Post a Comment