Search This Blog

Sunday, December 31, 2023

கடக ராசிக்கு 2024 புத்தாண்டு பலன்கள் என்ன? கடக ராசிக்கு 2024 ஆண்டு என...


கடகம்

வருகின்ற ஏப்ரல் 30 2024 வரை குரு பகவான் 10ல் இருப்பதால் , வேலையில் தொழிலில் மிக்க கவனம் தேவை. வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவும் .

வரும். 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் 11ல் அமர்ந்து 3,5 ,7 இடங்களை பார்வை செய்வார். எதிரிகள் தொல்லை விலகும்.  மன தைரியம் அதிகம் உண்டாகும். எந்த பிரச்சனைகளை சமாளிக்கும் மனவலிமை உண்டாகும். இதுநாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்சமயம் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்விக சொத்து சார்ந்த சிக்கல்கள் நீங்கி சொத்து அவர்கள் கைக்கு வரும்குழந்தைகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உயர் கல்வி வாய்ப்பு , மருத்துவம் போன்ற துறைகளில் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதால் பெற்றோர்கள் மனது குளிரும். இல்லற வாழ்க்கை இனிமையை அமையும். கனனவன் மனைவி உறவில் நல்ல அன்னியோன்யம் ஏற்படும். கூட்டாளிகளால் நல்ல லாபம் அமையும். இதுநாள் வரை பிரிந்து இருந்த கணவன் மனைவி தற்சமயம் மனக்கசப்பு நீங்கி ஒன்று சேருவார்கள்.

கடக ராசிக்கு சனிபகவான் இதுநாள் வரை ஏழாம் வீட்டில்  கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார் இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். அகப்பட்டவனுக்கு அஷ்டம சனி என்று கூறுவார்கள்.



இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும்  அவற்றை சமாளிக்கும் திறன் உங்களுக்கு ஏற்படும்.. எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது  சரள யோகம் ஆகும். நீண்ட ஆயுள் , ஆரோக்கியமான உடல் அமைப்பு , காரியங்களில் வெற்றி ஆகியவை உண்டாகும்.  எதிர்பாராத பணவரவு வந்து கடக ராசி நேயர்களை திக்குமுக்காட வைக்கும்.

கடன் வாங்கி புதிய பணமுதலீடுகளை செய்ய வேண்டாம்.  புதிய தொழில் முயற்சிகள் மே 2024 க்கு பிறகு மேற்கொள்ளலாம். நீங்கள் பார்த்து வருகின்ற  வேலையை  விடும் முன்பு ஒருமுறைக்கு  இருமுறை யோசிக்கவும். மற்றவர்கள் கூறும்  பேராசை வார்த்தைகளை நம்ப வேண்டாம்.



பங்குச்சந்தை முதலீடுகளில் ஈடுபட வேண்டாம்.. இருக்கிறதை வைத்துக்கொண்டு மனநிறைவு உடன்  வாழுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று  கவனம் தேவை. இந்த ஆண்டு முழுவதும் கேது 3ல் சஞ்சரிப்பது யோகமான பலன்களை தரும், ராகு 9ல் இருப்பது தந்தையின் ஆரோக்யத்தில் கவனம் தேவை. ஏப்ரல் 2024 வரை குரு பகவானுக்கு நெய் தீபம் வியாழக்கிழமைகளில் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது யோகத்தை தரும்.


No comments:

Post a Comment