2024 புத்தாண்டு
ராசி பலன்கள்
இந்த புத்தாண்டு சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் தொடங்குகிறது.
இந்த 2024 புத்தாண்டு தொடங்கும் போது சந்திரன், குரு மற்றும் சனியின் பார்வையை பெறுகிறார்.
புத்தாண்டு அன்று தனுசு ராசியில் சூரியனும்
செவ்வாயும் இணைகிறார்கள். விருச்சிக ராசியில் சுக்கிரனும் புதனும் இணைகிறார்கள். மீன
ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் இருப்பார்கள்.
2024 ஆம் ஆண்டு முழுவதும் ராகு, கேது
மற்றும் சனி ஆகியவை ஒரே ராசியில் இருக்கும். குரு பகவான் மே 01, 2024 அன்று மேஷ ராசியில்
இருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார். குரு ரிஷப ராசியில் இருந்து, கேது-வை பார்வையிடுவது
கோடீஸ்வர யோகத்தை தரும். இதனால் அனைவரின் பொருளாதார
நிலை உயரும் .குரு கேது பார்வை
மேஷம்:
ஜென்ம குரு பொருளாதார ரீதியாக சில
சங்கடங்களை ஏற்படுத்துவார். எவ்வளவுதான் பணம் வந்தாலும் செலவு கையை கடிக்கும். பொருளாதார
நெருக்கடியை சந்திக்க தயாராகுங்கள். சில காலம்தான் கவலை வேண்டாம். 2024 ஆம் ஆண்டு மே
மாதத்தில் குரு பகவான் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் அற்புத யோகங்கள் வரப்போகிறது.
தனகாரகர் குரு தன ஸ்தானத்தில் அமரபோவது பணம்
பல வழிகளில் இருந்தும் தண்ணீர் போல் கொட்ட இருக்கிறது.
மே 2024 முதல் குரு பகவான் 2ல் அமர்ந்து 6,8,10 இடங்களை
பார்வை இடுவார். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். எதிரிகளை வெற்றி காணிப்பீர்கள்.
ஆரோக்கியம் உயரும் . 10 ம் இடத்தை பார்ப்பதால் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம்
உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை தரும். பதிவு உயர்வு , அனுகூல இடமாற்றம்
ஏற்படும். மரண பயம் நீங்கும்; சிறு விபத்துகள்
ஏற்பட்டாலும் தப்பித்துக் கொள்ளலாம்.நல்ல மன நிலை உண்டாகும்.
இரண்டரை ஆண்டுகள் லாப சனி காலம் என்பதால் பலன்களும் நன்மைகளும் அதிகரிக்கும்
சனி பகவான் மேஷ ராசிக்கு 10 மற்றும் 11ம் அதிபதி,
11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்யப்போகிறார்.
2024 ஆண்டு ஒரு பிரகாசமான ஆண்டாக மேஷ ராசி நேயர்களுக்கு இருக்க போகிறது..
பல தடைகளை உடைத்து வெற்றி கான்பீர்கள். நீங்கள் எண்ணியது கைகூடும்
தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு 2024ஆம் ஆண்டு முதல் பிரகாசமாக இருக்க போகிறது. வேலையில் இருப்பவர்கள்
கூட சொந்த தொழில் தொடங்குவீர்கள். உத்யோக உயர்வை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு
நல்ல செய்தி தேடி வரும். வேலையில் இருப்பவர்கள்விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.
புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும்.
மேஷ ராசிக்கு கேது 6ல் இந்த ஆண்டு
முழுவதும் சஞ்சரிக்க இருக்கிறார் கோச்சாரத்தில்
. 6ல் உள்ள கேது அற்புதமான பலன்களை தர இருக்கிறார். ராகு 12ல் இருப்பது நன்மை தராது.
சனிக்கிழமைகளில் ராகு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.
வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு
நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் யோகமான
பலன்கள் நடைபெறும். உங்கள் குலதெய்வத்தை
அடிக்கடி மனிதில் நினைத்து வழிபட்டு வர வளமான வாழ்வு அமையும்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்கு குரு பகவான் வரும் 30 ஏப்ரல் 2024 வரை
12ல் சஞ்சரிப்பார். வேலை அல்லது தொழில் நிமித்தமாக
அலைச்சல் இருக்கும். விரய சிலவுகளை தவிர்க்கவும்
வருகிற 1 மே 2024 முதல் ரிஷப ராசிக்கு
குரு ஜென்ம ராசியில் அமர்ந்து 5,7,9 இடங்களை பார்வை இடுவார். இதுநாள் குழந்தை பாக்கியம்
இல்லாதவர்களுக்கு தற்சமயம் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்விக சொத்து சார்ந்த சிக்கல்கள்
நீங்கி சொத்து அவர்கள் கைக்கு வரும்குழந்தைகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
உயர் கல்வி வாய்ப்பு , மருத்துவம் போன்ற துறைகளில் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின்
வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதால் பெற்றோர்கள் மனது குளிரும். இல்லற வாழ்க்கை
இனிமையை அமையும்.
கனனவன் மனைவி உறவில் நல்ல அன்னியோன்யம்
ஏற்படும். கூட்டாளிகளால் நல்ல லாபம் அமையும். இதுநாள் வரை பிரிந்து இருந்த கணவன் மனைவி
தற்சமயம் மனக்கசப்பு நீங்கி ஒன்று சேருவார்கள். பல கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்யும்
யோகம உண்டாகும். தானம் , தர்மம் செய்யும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும்,
வெளிநாட்டில் வேலையும் கிடைக்க வாய்ப்புகள்
அதிகம். தந்தையின் தொழில் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
ரிஷப ராசி நேயர்கள் 85 சதவீதம் யோகமான பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள். எதிர்பாராத
தன லாபங்கள் மற்றும் செல்வ சேர்க்கை உண்டாகும் ரிஷப ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் யோகமான பலன்கள் நடக்க இருக்கிறது.
புதிய கடன்கள் வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். வங்கிகளில் தொழில் செய்வதற்காக புதிய கடன்கள் கிடைக்கும். ரிஷப ராசிக்கு பத்தில் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் அமைவதால் யோக பலன்கள் ஏற்படும்.சனியால் உங்களுக்கு
கிடைக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் தடுக்க முடியாது.
இது நாள் வரை திருமணம் தடை பெற்றவர்களுக்கு தற்சமயம் சனி பகவான் அருளால் திருமணம் நடக்கும்,
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும்.
புது வேலை அல்லது தொழில் அமையும். நீங்கள் வகிக்கும் பதவியில் புது உற்சாகம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.
2024 முழுவதும் ராகு பகவான் 11ல் இருப்பது யோகமான பலன்களை ரிஷப ராசி கேயர்களுக்கு யோகமான பலனகளை தர இருக்கிறது. கேது 5ல் இருப்பது குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றிய மன கலக்கத்தை தரும். செவ்வாய் கிழமைகளில் கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். உங்கள் குலதெய்வத்தை அடிக்கடி மனிதில் நினைத்து வழிபட்டு வர வளமான வாழ்வு அமையும்.
மிதுனம்:
11ல் உள்ள லாப குரு பண பலத்தையும் மன பலத்தையும் அதிகரிக்க செய்வார்.. செய் தொழிலில் ஏற்றம் காணும்..
திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அமைதியும் ஆனந்தமும் குடியேறும். புதிய பதவிகள்,
பொறுப்புகள் தேடி வரும்.
2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குருவின்
பயணம் நிறைய விரைய செலவுகளை தரப்போகிறது. பணத்தை பத்திரப்படுத்துங்கள்.வீண் சிலைவுகளை
குறையுங்கள். தாயின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் காணப்படும். வழக்குகளில் சாதகமான நிலை
ஏற்படும். எதிரிகளை வெற்றி காணிப்பீர்கள். ஆரோக்கியம் உயரும் . ஒரு சில நேயருக்கு தாய்
வழி சொத்து கிடைக்கும். மரண பயம் நீங்கும்; சிறு விபத்துகள் ஏற்பட்டாலும் தப்பித்துக்
கொள்ளலாம்.நல்ல மன நிலை உண்டாகும்
மிதுன ராசி நேயர்களுக்கு அஷ்டமத்து
சனி முடிவுக்கு வரப்போவதால் இது நாள் வரை மிதுன
ராசிக்காரர்கள் அனுபவித்த கஷ்டங்கள் தீரப்போகிறது.
பொருளாதார நெருக்கடிகள் நீங்கி தாராள பணவரவு ஏற்படும்.. தீராத நோய்களால் அவதிப்பட்டு
வந்தவர்களுக்கு விடிவுகாலம் வரப்போகிறது.
உடல் ஆரோக்கியம் மேலோங்கும். உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.
அஷ்டம சனியால் எத்தனையோ பிரச்சினைகளையும் அவமானங்களையும் சந்தித்த மிதுன ராசி நேயர்களுக்கு
இனி எல்லாம் நல்லதாகவே நடக்கப்போகிறது.
ஒன்பதில் உள்ள பாக்ய சனியால் அதிர்ஷ்ட
காற்று அதிகரிக்க போகிறது.. பணவரவு சரளமாக
இருக்கும். வேலையில் சம்பளம் மற்றும் பதவி
உயர்வு கிடைக்கும். செய்யும் தொழிலில்
லாபம் ஏற்படும்.. நகை, பொன் பொருள், சொத்து
, வாகன சேர்க்கை உண்டாகும்.. நிறைய தான தர்மங்களை
தர்ம சனி காலத்தில் செய்வது கர்ம வினையை அகற்றும்.
2024 முழுவதும் கேது பகவான்
மிதுன ராசிக்கு 4ல் இருப்பது யோகமான பலன்களை தருவதற்கு தடை ஏற்படுத்தும். உங்கள் தாயாரின் உடல்
நிலை யில் கவனம் செலுத்த வேண்டும். செவ்வாய்
கிழமைகளில் கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். குரு 12ல் கோச்சாரத்தில்
வரும் பொழுது குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில்
நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் .உங்கள் குலதெய்வத்தை அடிக்கடி மனிதில் நினைத்து
வழிபட்டு வர வளமான வாழ்வு அமையும்.
கடகம்
வருகின்ற ஏப்ரல் 30 2024 வரை குரு பகவான் 10ல் இருப்பதால் , வேலையில்
தொழிலில் மிக்க கவனம் தேவை. வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு
செய்து வரவும் .
வரும். 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல்
குரு பகவான் 11ல் அமர்ந்து 3,5 ,7 இடங்களை பார்வை செய்வார். எதிரிகள் தொல்லை விலகும். மன தைரியம் அதிகம் உண்டாகும். எந்த பிரச்சனைகளை
சமாளிக்கும் மனவலிமை உண்டாகும். இதுநாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்சமயம்
குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்விக சொத்து சார்ந்த சிக்கல்கள் நீங்கி சொத்து அவர்கள்
கைக்கு வரும்குழந்தைகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உயர் கல்வி வாய்ப்பு
, மருத்துவம் போன்ற துறைகளில் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் வாழ்வில்
நல்ல முன்னேற்றம் காணப்படுவதால் பெற்றோர்கள் மனது குளிரும். இல்லற வாழ்க்கை இனிமையை
அமையும். கனனவன் மனைவி உறவில் நல்ல அன்னியோன்யம் ஏற்படும். கூட்டாளிகளால் நல்ல லாபம்
அமையும். இதுநாள் வரை பிரிந்து இருந்த கணவன் மனைவி தற்சமயம் மனக்கசப்பு நீங்கி ஒன்று
சேருவார்கள்.
கடக ராசிக்கு சனிபகவான் இதுநாள் வரை
ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக்
கொடுத்தார் இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். அகப்பட்டவனுக்கு அஷ்டம
சனி என்று கூறுவார்கள்.
இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை
எதிர்கொண்டாலும் அவற்றை சமாளிக்கும் திறன்
உங்களுக்கு ஏற்படும்.. எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது சரள யோகம் ஆகும். நீண்ட ஆயுள் , ஆரோக்கியமான உடல்
அமைப்பு , காரியங்களில் வெற்றி ஆகியவை உண்டாகும்.
எதிர்பாராத பணவரவு வந்து கடக ராசி நேயர்களை திக்குமுக்காட வைக்கும்.
கடன் வாங்கி புதிய பணமுதலீடுகளை செய்ய
வேண்டாம். புதிய தொழில் முயற்சிகள் மே
2024 க்கு பிறகு மேற்கொள்ளலாம். நீங்கள் பார்த்து வருகின்ற வேலையை
விடும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை
யோசிக்கவும். மற்றவர்கள் கூறும் பேராசை வார்த்தைகளை
நம்ப வேண்டாம்.
பங்குச்சந்தை முதலீடுகளில் ஈடுபட வேண்டாம்.. இருக்கிறதை வைத்துக்கொண்டு மனநிறைவு உடன் வாழுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. இந்த ஆண்டு முழுவதும் கேது 3ல் சஞ்சரிப்பது யோகமான பலன்களை தரும், ராகு 9ல் இருப்பது தந்தையின் ஆரோக்யத்தில் கவனம் தேவை. ஏப்ரல் 2024 வரை குரு பகவானுக்கு நெய் தீபம் வியாழக்கிழமைகளில் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது யோகத்தை தரும்.
சிம்மம்
வருகின்ற ஏப்ரல் 2024 வரை குரு பகவான்
9ல் கோச்சாரத்தில் சஞ்சரிப்பார். இதுநாள் திருமணம் தடைபெற்றவர்களுக்கு தற்சமயம் திருமணம்
நடைபெரும். குடும்பத்தில் குதூகலம் மிகும். பண வரவு சரளமாக இருக்கும்
வரும். 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல்
குரு பகவான் 10ல் அமர்ந்து 2,4 ,6 இடங்களை பார்வை செய்வார். பிரிந்த குடும்பம் ஒன்று
சேரும். தன வரவு சரளமாக இருக்கும். சொத்துக்கள் , வாஹனம் வாங்குவீர்கள். கடன்களை அடைக்க
கூடிய நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக கண்களில் இருந்த பார்வை கோளாறு இப்போது சரியாகும். உங்களுடைய பேச்சு சாதுர்யத்தால் எதிரிகளை
வெல்வீர்கள். ஒரு சில நேயருக்கு தாய் வழி சொத்து கிடைக்கும்.நீண்ட காலமாக இருந்த உடல்
நல பிரச்னைகள் நீங்கி நல்ல ஆரோக்கியம் பெறுவார்கள்.
குரு 10ம் இடத்தில வருகின்ற 30-4-2024 வரை சஞ்சரிக்க
இருப்பதால் வேலையில் அல்லது தொழிலில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாழக்கிழமைகளில்
நவகிரஹங்களில் உள்ள குரு பகவானை வழிபட பிரச்சனைகள் தீரும்.
கண்டச்சனி
காலம் என்றாலும் கவலை வேண்டாம்.
சனிபகவான் சிம்ம ராசிக்கு ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானத்தில் கண்டச்சனியாக
பசஞ்சரிக்க போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசி நேயர்களுக்கு உயர்தரமான பலன்கள் கிடைக்கப்போகிறது. இந்த சனி பெயர்ச்சியால் வேலையில்
உள்ளவர்களுக்கு பதவி உயர்வை தருவார்,
ஒரு சில சிம்ம ராசி நேயர்கள் .வெளிநாடு படிக்க அல்லது வேலை செய்ய அல்லது தொழில் தொடங்குவார்கள்.
வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த
முன்னேற்றம் உண்டாகும்.. 7ம் இடத்தில் ஆட்சி பெற்ற சனி பகவானால் சச யோகத்தால் யோகமான பலன்கள் சிம்ம ராசி நேயர்களுக்கு உண்டாகும்..
பண வரவும் சேமிப்பும் அதிகரிக்கும். கும்ப ராசியில் உள்ள ஆட்சி பெற்ற சனியின் பார்வை
உங்கள் ராசியின் மீது விழுவதால் தீய பலன்கள் குறையும். ஏழுக்கு உடைய சனி ஏழில் இருப்பதால் திருமணம் தடைகளை தாண்டி இந்த இரண்டரை
ஆண்டுகளில் தடைபெற்ற திருமணம் நிறைவேறும்.
ஏப்ரல் 2025ஆம் ஆண்டு வரை களத்திர
ஸ்தானமான ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் கணவன் மனைவி குடும்பத்தில் விட்டு கொடுத்து
போவது நன்மை தரும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
தங்கள் கூட்டாளிகளின் நடவடிக்கைகளை
உன்னிப்பாக கவனித்து வரவேண்டும். சனி கிழமைகளில்
சனி ப்ரீதி செய்வது நன்மை தரும்.
ராகு 8லிலும் கேது 2ம் இடத்தில் இந்த
ஆண்டு முழுவதுஇருப்பது உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. குடும்ப பிரச்சைநாய்களை
சற்று சாதுர்யமாக சமாளிப்பது நன்மை தரும். சனிக்கிழமைகளில் ராகு பகவானுக்கு நெய் தீபம் மற்றும் செவ்வாய் கிழமைகளில் கேது பகவானுக்கு
நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர கெடு பலன்கள் மறையும்.
கன்னி ராசி
வரும். 2024ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதம்வரை குரு பகவான் 8ம் இடத்தில சஞ்சரிக்க
போவதால் , உங்கள் உடல் ஆரோக்யத்தில் மிக்க கவனம் தேவை. கடன் வாங்குவதை தவிர்க்கவும். இந்த கால கட்டத்தில் வியாழ
கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர யோகமான பலன்களே நடைபெறும்.
வரும். 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல்
குரு பகவான் 9ல் அமர்ந்து 1,3,5 இடங்களை பார்வை
செய்வார். கன்னி ராசி நேயர்களுக்கு வாழ்க்கையில்
பேரும், புகழும் கிடைக்கும். அவருக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.உங்களுக்கு
எதிரிகள் தொல்லை விலகும். தைரியமாக நல்ல விஷயங்களை செய்வீர்கள். இளையசகோதர்களின் வாழ்வு
வளம் பெரும். இதுநாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்சமயம் குழந்தை பாக்கியம்
உண்டாகும். பூர்விக சொத்து சார்ந்த சிக்கல்கள் நீங்கி சொத்து உங்கள் கைக்கு வரும்.குழந்தைகள் கல்வியில் நல்ல முன்னேற்றம்
காணப்படும். உயர் கல்வி வாய்ப்பு , மருத்துவம் போன்ற துறைகளில் கல்வி கற்க வாய்ப்பு
ஏற்படும். குழந்தைகளின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதால் பெற்றோர்கள்6மனது
குளிரும்.
சனி பகவான் 6ம் இடத்தில் இந்த ஆண்டு முழுவதும் ருண சத்ரு
சனியாக சஞ்சரிக்க இருக்கிறார். உங்கள் ஆரோக்கியம் மேலோங்கும். வழக்குகளில் சாதகமான
தீர்ப்பு கிடைக்கும். எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி கொள்வீர்கள். சனி பகவான் 8,12 மற்றும் 3ம் இடத்தை பார்வை இடுவார்
2024 முழுதும். மனோ தைரியம் அதிகரித்து காணப்படும்.
1ல் கேது 7ல் ராகு இல்லறவாழ்வில் விட்டு
கொடுத்து போவது நன்மை தரும். சனிக்கிழமைகளில் ராகு பகவானுக்கு நெய் தீபம் மற்றும் செவ்வாய் கிழமைகளில் கேது பகவானுக்கு
நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர கெடு பலன்கள் மறையும்.
. துலா ராசி
குரு பகவான் வரும் 30 ஏப்ரல் 2024
வரை துலா ராசிக்கு 7ல் சஞ்சரிப்பார். இந்த கால கட்டத்தில் இது வரை திருமணம் தடை பெட்ரா
துலா ராசி நேயர்களுக்கு திருமணம் நடைபெறும். இல்லற வாழ்கை இனிமையாக இருக்கும். கூட்டு
தொழில் சிறப்பாக இருக்கும்.
வரும். 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல்
குரு பகவான் 8ல் அமர்ந்து 12,2,4 இடங்களை பார்வை
செய்வார்.
ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
தெய்வ தரிசனம், மகான்களின் அருள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.பிரிந்த குடும்பம்
ஒன்று சேரும். தன வரவு சரளமாக இருக்கும். சொத்துக்கள் , வாஹனம் வாங்குவீர்கள். கடன்களை
அடைக்க கூடிய நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக கண்களில் இருந்த பார்வை கோளாறு இப்போது சரியாகும். உங்களுடைய பேச்சு சாதுர்யத்தால் எதிரிகளை
வெல்வீர்கள். ஒரு சில நேயருக்கு தாய் வழி சொத்து கிடைக்கும்.நீண்ட காலமாக இருந்த உடல்
நல பிரச்னைகள் நீங்கி நல்ல ஆரோக்கியம் பெறுவார்கள். மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு
உண்டாகும். ஒரு சிலருக்கு வெளி நாடு சென்று கல்வி கற்கும் யோகம் உண்டாகும்.
சனி பகவான் 5ம் இடத்தில் இந்த ஆண்டு முழுவதும் பஞ்சம சனியாக
சஞ்சரிக்க இருக்கிறார். சனி பகவான் 7,11 மற்றும்
2ம் இடத்தை பார்வை இடுவார். கணவன் மனைவி உறவு மேம்பட விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை
ஏற்படும்.
இந்த ஆண்டு முழுவதும் 6ல் ராகு பகவான்
சஞ்சரிக்க இருப்பது யோகமான பலன்களை தரும்.. எதிரிகளை பந்தாடுவீர்கள். வழக்குகளில் சாதகமான
தீர்ப்பு வரும். உடல் நிலை நன்றாக இருக்கும். கடன்களை தீர்ப்பீர்கள். கேது 12ல் இந்த
ஆண்டு முழுவதும் சஞ்சரிக்க இருப்பது ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். தீர்த்த யாத்திரை
, ஆன்மீக சுற்றுலா பயணத்தை மேற்கொள்வீர்கள். சித்தர்கள் , ஆன்மீக குருவின் அருள் கிடைக்கும்.
வருகின்ற மே மாதம் 2024 முதல் வியாழகிழமைகளில்
குரூ பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர நல்ல யோகமான பலன்களே ஏற்படும்.
விருச்சிக ராசி
குரு பகவான் வரும் 30 ஏப்ரல் 2024
வரை விருச்சிக ராசிக்கு 6ல் சஞ்சரிப்பார். இந்த கால கட்டத்தில் வழக்குகள் இழுபறி நிலை
ஏற்படும். கடன் வாங்கி உங்கள் சிலவுகளை சமாளிக்க நேரிடும். எதிரிகளின் கை ஓங்கும்.
2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு
பகவான் 7ல் அமர்ந்து 11,1,3 இடங்களை பார்வை
இடுவார். 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தை குரு பார்க்கும் போது, உங்களுக்கு எதிர்பாராத
பொருள் வரவு, அதிர்ஷ்டம் உள்ளிட்ட சுப பலன்களை எதிர்பார்க்கலாம்.குரு பகவான் ஜாதகத்தில்
ஜன்ம ராசியை பார்க்கும் போது, உங்கள் வாழ்க்கையில் பேரும், புகழும் கிடைக்கும். விருச்சிக
ராசி நேயருக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை
உயரும்.தைரிய, இளைய சகோதரர் ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கும் போது, உங்களுக்கு எதிரிகள்
தொல்லை விலகும். மனோ தைரியம் மிகுந்து காணப்படும்.
விருச்சிக ராசி நேயர்களுக்கு 2024
முழுவதும் அர்த்தாஷ்ட சனிகாலம் நடைபெற இருக்கிறது..
அர்த்தஷடம சனிபகவான் சங்கடங்களை தருவாரோ என்று
அஞ்ச வேண்டாம். நான்காம் வீட்டு அதிபதி நான்கில்
ஆட்சி பெற்று அமர்வதால் ஜலதி யோகம் அமையப்பெற்றதால்
அதிக சங்கடங்கள் இருக்காது. மேலும் சனி பகவான் 4ல் ஆட்சி பெற்றதால் சச மகா யோகம் அமையப்பெறுகிறது..
சனியின் பத்தாவது பார்வை விருச்சிக ராசி மீது விழுவதால் உங்கள் தொழில் பிரச்சினைகள்
முடிவுக்கு வரும்.
பணியில் இருப்பவர்களுக்கு உத்யோக உயர்வு கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். வீடு, கார்
என சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அதே நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சற்று
கவனம் செலுத்த நேரிடும். நோய்களிலிருந்து பூரணமாக குணம் அடைவீர்கள்.
சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள்
தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். ஸ்ரீ காலபைரவர்
, ஸ்ரீ ஆஞ்சேநேயரை வழிபட்டு வரவும்.
2024 ஆண்டு முழுவதும் கேது 11ல் இருப்பார்.
பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத தன லாபம் ஏற்படும். ராகு 5ல் இந்த ஆண்டு முழுவதும்
இருப்பது உங்கள் குழந்தைகளின் கவலை உங்களை வருத்தும். ராகு பகவானை சனி கிழமைகளில் நெய்
தீபம் ஏற்றி வழிபடவும்.
நீண்ட நாட்களாக வராத பணம் உங்கள் இல்லம் தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றமான அறிகுறி காணப்படும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்கு குரு பகவான் வரும்
30 ஏப்ரல் 2024 வரை ராசிக்கு 5ல் சஞ்சரிப்பார்.
இதுவரை திருமணம் தடை பெற்றவர்கள் இந்த கால கட்டத்தில் திருமணம் நடைபெறும். குழந்தைகள்
வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு
பகவான் 6ல் அமர்ந்து 10,12,2 இடங்களை பார்வை இடுவார். 6ம் இடத்தில குரு சஞ்சரிப்பதால்
உங்கள் எதிரிகளின் கை ஓங்கி காணப்படும். குருவின் பார்வை 10 ஆம் இடமான தொழில், கர்ம
ஸ்தானத்தில் படும் போது உங்களுக்கு தொழிலில் மேன்மை, பதவி உயர்வு, நீங்கள் பார்க்கும்
வேலையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தெய்வ தரிசனம்,
மகான்களின் அருள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
உங்கள் வாகு சாதுர்யத்தால் அனைவரையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் குதுகலம் உண்டாகும்.
2024 ஆண்டு முழுவதும்சனி 3ம் இடத்தில சஞ்சரிக்க இருக்கிறார்
.ஏழரை சனி முடிந்து தைரிய சனி ஆரம்பித்து விட்டது. தனுசு ராசிக்காரர்கள் கடந்த ஏழரை
ஆண்டு காலமாகவே ஏழரை சனியின் பிடியில் சிக்கி பல கஷ்டங்கள் ,துயரங்கள் நஷ்டங்களை சந்தித்து வந்தீர்கள்.. உங்களுக்கு இனி
எல்லாம் நல்லதாகவே நடக்கப்போகிறது. இனி உங்களுக்கு விடிவு காலம்தான்.
சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இருக்காது.
வேலை கிடைக்காதவர்களுக்கு இனி மேல் நல்ல வேலை வீடு தேடி வரும். தடைபெற்ற திருமணங்கள்
தற்போது கைகூடும்.தனுசு ராசி நேயர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வும் ஒரு சேர கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு
அனுகூல இடமாற்றம் கிடைக்கும்.
கேது 10ல் சஞ்சரிப்பதால் உங்கள் தொழில்
மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ராகு 4ல் சஞ்சரிப்பதால் சொத்து தகராறு
ஏற்படக்கூடும். ராகு பகவானுக்கு சனிக்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.
உங்கள் குலதெய்வத்தை அடிக்கடி மனதில் நினைத்து கொள்ளுங்கள்.. அனைத்தும் நலமாக நடைபெறும்.
மகர ராசி
மகர ராசிக்கு குரு பகவான் வரும் 30 ஏப்ரல் 2024 வரை ராசிக்கு 4ல் சஞ்சரிப்பார். தாயாரின் உடல் நிலையில் அதிகம் கவனம் செலுத்த நேரிடும்.
சொத்துக்கள் மீதான வழக்குகள் இழுபறியாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிகம் கவனம்
செலுத்த நேரிடும்.
2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு
பகவான் 5ல் அமர்ந்து 9,11,1 இடங்களை பார்வை இடுவார். இதுநாள் வரை திருமணம் தடை பெற்றவர்களுக்கு
தற்சமயம் திருமணம் நடைபெரும். குழந்தை பாக்கியம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும்,
வெளிநாட்டில் வேலையும் கிடைக்க வாய்ப்புகள்
அதிகம். தந்தையின் அனுகூலம் மற்றும் ஆதரவும் கிடைக்கும்.எதிர்பாராத பொருள் வரவு, அதிர்ஷ்டம்
உள்ளிட்ட சுப பலன்களை எதிர்பார்க்கலாம்.வாழ்க்கையில் பேரும், புகழும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
பணவரவுசரளமாக இருக்கும். செய் தொழில் வளர்ச்சி பெறும். திருமண
தடைகள் நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில்
நல்ல முன்னேற்றம் காணப்படும். சிலர் வெளிநாடு சென்று மேற்கல்வி கற்க , தொழில் செய்ய
, வேலையில் சேர வாய்ப்பு கிடைக்கும். வருமானம் பெருகுவதால் சேமிப்பு நிறைய உண்டாகும்.
கடன்களை தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்,
ஜென்ம சனி விலகி பாத சனியாக மகர ராசிக்கு
தொடரப்போகிறது. மகர ராசிக்கு ஏழரை சனி முழுமையாக விலக இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன.
ஆனாலும் மகர ராசிக்கு சனி பகவான் அதிபதி என்பதால் , சொந்த ராசி நேயர்களுக்கு அதிக தொல்லைகள்
கொடுக்கமாட்டார் என்று உறுதியாக சொல்லலாம்.
வாக்கு சாதுர்யத்தால் எதிரிகளை சமாளிப்பார்கள்.
தாராளமான பண வரவு ஏற்படும். செல்வாக்கு உயரும். சில மகர ராசி நேயர்கள் வெளி நாடு சென்று
உயர் கல்வி கற்கும் யோகம் உண்டாகும். மாணவர்களளின் கல்வியில் நல்ல முன்னேற்றமான போக்கு
காணப்படும்.
ராகு 3ல் இருப்பது அற்புதமான பலன்களை
தரும். மனோதைரியம் மிகுந்து காணப்படும் புதிய முயற்சிகளில்
வெற்றி காணிப்பீர்கள். கேது 9ல் இருப்பதால்
பல கோயில்களுக்கு சென்று வழிபடுவார்கள். தான , தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
உங்கள் குலதெய்வத்தை அடிக்கடி மனதில்
நினைத்து கொள்ளுங்கள்.. அனைத்தும் நலமாக நடைபெறும். சனி கிழமை தோறும் சனி பகவானுக்கு
எள் தீபம் ஏற்றி வழிபட நன்மையான பலன்களே நடைபெறும்.
கும்ப ராசி
கும்ப ராசிக்கு குரு பகவான் வரும் 30 ஏப்ரல் 2024 வரை ராசிக்கு 3ல் சஞ்சரிப்பார்.மனம் அலை பாயும்.
2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு
பகவான் 4ல் அமர்ந்து 8,10,12 இடங்களை பார்வை இடுவார். நல்ல மன நிலை உண்டாகும். மரண பயம் நீங்கும். சிறு
விபத்துக்களே ஏற்பட்டாலும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.தொழிலில் மேன்மை, பதவி
உயர்வு, நீங்கள் பார்க்கும் வேலையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெற்றோரின் உடல் நலம்
சீராகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தெய்வ தரிசனம், மகான்களின் அருள் பெறக்கூடிய
வாய்ப்புகள் உண்டாகும்.
கும்ப ராசி நேயர்களே , சனி பகவான்
உங்கள் ஜென்ம ராசியில் அமரப்போகிறார். ஜென்மசனி
தொடங்குகிறது. சனி பகவான் உங்களுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் இதனால் சச ஏற்படுகிறது. சச யோகத்தால் அணைத்து விதமான நற்பலன்களே ஏற்படும். சனி கும்ப ராசிக்கு அதிபதி
என்பதால் நீங்கள் சந்திக்கும் அணைத்து பிரச்சனைகளில்
இருந்து காப்பாற்ற படுவீர்கள். உழைப்பு ,உழைப்பு என்று 24 மணி நேரமும் உழைப்பீர்கள்..
ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். கடல் கடந்து சென்று மேல் படிப்பு , வேலை வாய்ப்பு
மற்றும் தொழில் செய்யும் யோகம் உண்டாகும்..
அரசு பணிக்கான தேர்வுகளை எழுதியிருப்பவர்கள்
அதில் வெற்றி பெறுவீர்கள்.
ராகு 2ல் மற்றும் கேது 8ல் சஞ்சரிப்பது
, நனமையான பலன்கள் ஏற்பட தடை ஏற்படும். இல்லற வாழ்வில் சற்று விட்டு கொடுத்து போவது நன்மை தரும். சனி கிழமைகளில்
ராகு பகவானுக்கும் செவ்வாய் கிழமைகளில் கேது
பகவானுக்கும் நெய் விளக்கு ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.
உங்கள் குலதெய்வத்தை அடிக்கடி மனதில்
நினைத்து கொள்ளுங்கள்.. அனைத்தும் நலமாக நடைபெறும். சனி கிழமை தோறும் சனி பகவானுக்கு
எள் தீபம் ஏற்றி வழிபட நன்மையான பலன்களே நடைபெறும்.
மீன ராசி
மீன ராசிக்கு குரு பகவான் வரும் 30 ஏப்ரல் 2024 வரை ராசிக்கு 2ல் சஞ்சரிப்பார். பண வரவு சரளமாக இருக்கும்
.திருமணம் தடைபெற்றவர்களுக்கு தற்சமயம் திருமணம் கைகூடும். குடும்பத்தில் குதுகூலம்
நிலவிடும்.
2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு
பகவான் 3ல் அமர்ந்து 7,9,11 இடங்களை பார்வை இடுவார். நல்ல மண வாழ்க்கை, பெற்றோரின்
ஆசி, தொழில் - வியாபாரத்தில் நல்ல கூட்டாளி கிடைப்பார்கள்.கூட்டு தொழில் நல்ல லாபகரமாக
அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், வெளிநாட்டில் வேலையும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். தந்தையின் தொழில் ஆதாயம்
கிடைக்கும்.எதிர்பாராத பொருள் வரவு, அதிர்ஷ்டம் உள்ளிட்ட சுப பலன்களை எதிர்பார்க்கலாம்.
ராகு ஜென்ம ராசியில் இந்த ஆண்டு முழுதும்
சஞ்சரிக்க இருப்பதும் கேது 7ல் சஞ்சரிக்க இருப்பதும் குடும்ப வாழ்வில் விட்டுக்கொடுத்து
போகும் மனப்பான்மை இருந்தால் நன்மை தரும். சனிக்கிழமை ராகு பகவானுக்கும் , செவ்வாய்
கிழமைகளில் கேது பகவானுக்கும் நெய் விளக்கேற்றி வழிபட வாழ்வில் வெற்றிகள் குவியும்.
மீன ராசிக்கு சனி பகவான் 12,ஆம் வீட்டில் பயணம் செய்வது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை
ஆண்டுகள் விரைய சனி. 2023 ஆம் ஆண்டு முதல் மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு விரைய சனியாக
ஏழரை சனி காலம் தொடங்குகிறது. இந்த கால கட்டத்தில் பணத்தை சேமித்து வைத்திருக்காமல் சுப சிலவுகள் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். ராசிக்கு 12ம்
அதிபதியான சனி பகவான் 12ல் ஆட்சி பெற்று காணப்படுவது விமல யோகம் ஆகும். இதனால் மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம்
வீட்டிற்கு அதிபதி. விரைய சனி காலமாக இருப்பதால் லாப சனி காலத்தில் சம்பாதித்த பணத்தை
செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு செய்வது நல்லது. அது தவிர சொத்துக்களாக
வாங்கி முதலீடு செய்வது நல்லது.
சனி கிழமைகளில் சனி பகவானுக்கு எள்
தீபம் ஏற்றி வழிபட்டு வர வாழ்வு வளமாக அமையும். வெற்றிகள் குவியும். உங்கள் குலதெய்வத்தை
அடிக்கடி மனிதில் நினைத்து வழிபட்டு வர வளமான வாழ்வு அமையும்.
No comments:
Post a Comment