துலா ராசி
குரு பகவான் வரும் 30 ஏப்ரல் 2024
வரை துலா ராசிக்கு 7ல் சஞ்சரிப்பார். இந்த கால கட்டத்தில் இது வரை திருமணம் தடை பெட்ரா
துலா ராசி நேயர்களுக்கு திருமணம் நடைபெறும். இல்லற வாழ்கை இனிமையாக இருக்கும். கூட்டு
தொழில் சிறப்பாக இருக்கும்.
வரும். 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல்
குரு பகவான் 8ல் அமர்ந்து 12,2,4 இடங்களை பார்வை
செய்வார்.
ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
தெய்வ தரிசனம், மகான்களின் அருள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.பிரிந்த குடும்பம்
ஒன்று சேரும். தன வரவு சரளமாக இருக்கும். சொத்துக்கள் , வாஹனம் வாங்குவீர்கள். கடன்களை
அடைக்க கூடிய நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக கண்களில் இருந்த பார்வை கோளாறு இப்போது சரியாகும். உங்களுடைய பேச்சு சாதுர்யத்தால் எதிரிகளை
வெல்வீர்கள். ஒரு சில நேயருக்கு தாய் வழி சொத்து கிடைக்கும்.நீண்ட காலமாக இருந்த உடல்
நல பிரச்னைகள் நீங்கி நல்ல ஆரோக்கியம் பெறுவார்கள். மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு
உண்டாகும். ஒரு சிலருக்கு வெளி நாடு சென்று கல்வி கற்கும் யோகம் உண்டாகும்.
சனி பகவான் 5ம் இடத்தில் இந்த ஆண்டு முழுவதும் பஞ்சம சனியாக
சஞ்சரிக்க இருக்கிறார். சனி பகவான் 7,11 மற்றும்
2ம் இடத்தை பார்வை இடுவார். கணவன் மனைவி உறவு மேம்பட விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை
ஏற்படும்.
இந்த ஆண்டு முழுவதும் 6ல் ராகு பகவான்
சஞ்சரிக்க இருப்பது யோகமான பலன்களை தரும்.. எதிரிகளை பந்தாடுவீர்கள். வழக்குகளில் சாதகமான
தீர்ப்பு வரும். உடல் நிலை நன்றாக இருக்கும். கடன்களை தீர்ப்பீர்கள். கேது 12ல் இந்த
ஆண்டு முழுவதும் சஞ்சரிக்க இருப்பது ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். தீர்த்த யாத்திரை
, ஆன்மீக சுற்றுலா பயணத்தை மேற்கொள்வீர்கள். சித்தர்கள் , ஆன்மீக குருவின் அருள் கிடைக்கும்.
வருகின்ற மே மாதம் 2024 முதல் வியாழகிழமைகளில்
குரூ பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர நல்ல யோகமான பலன்களே ஏற்படும்.
No comments:
Post a Comment