விருச்சிக ராசி
குரு பகவான் வரும் 30 ஏப்ரல் 2024
வரை விருச்சிக ராசிக்கு 6ல் சஞ்சரிப்பார். இந்த கால கட்டத்தில் வழக்குகள் இழுபறி நிலை
ஏற்படும். கடன் வாங்கி உங்கள் சிலவுகளை சமாளிக்க நேரிடும். எதிரிகளின் கை ஓங்கும்.
2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு
பகவான் 7ல் அமர்ந்து 11,1,3 இடங்களை பார்வை
இடுவார். 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தை குரு பார்க்கும் போது, உங்களுக்கு எதிர்பாராத
பொருள் வரவு, அதிர்ஷ்டம் உள்ளிட்ட சுப பலன்களை எதிர்பார்க்கலாம்.குரு பகவான் ஜாதகத்தில்
ஜன்ம ராசியை பார்க்கும் போது, உங்கள் வாழ்க்கையில் பேரும், புகழும் கிடைக்கும். விருச்சிக
ராசி நேயருக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை
உயரும்.தைரிய, இளைய சகோதரர் ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கும் போது, உங்களுக்கு எதிரிகள்
தொல்லை விலகும். மனோ தைரியம் மிகுந்து காணப்படும்.
விருச்சிக ராசி நேயர்களுக்கு 2024
முழுவதும் அர்த்தாஷ்ட சனிகாலம் நடைபெற இருக்கிறது..
அர்த்தஷடம சனிபகவான் சங்கடங்களை தருவாரோ என்று
அஞ்ச வேண்டாம். நான்காம் வீட்டு அதிபதி நான்கில்
ஆட்சி பெற்று அமர்வதால் ஜலதி யோகம் அமையப்பெற்றதால்
அதிக சங்கடங்கள் இருக்காது. மேலும் சனி பகவான் 4ல் ஆட்சி பெற்றதால் சச மகா யோகம் அமையப்பெறுகிறது..
சனியின் பத்தாவது பார்வை விருச்சிக ராசி மீது விழுவதால் உங்கள் தொழில் பிரச்சினைகள்
முடிவுக்கு வரும்.
பணியில் இருப்பவர்களுக்கு உத்யோக உயர்வு கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். வீடு, கார்
என சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அதே நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சற்று
கவனம் செலுத்த நேரிடும். நோய்களிலிருந்து பூரணமாக குணம் அடைவீர்கள்.
சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள்
தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். ஸ்ரீ காலபைரவர்
, ஸ்ரீ ஆஞ்சேநேயரை வழிபட்டு வரவும்.
2024 ஆண்டு முழுவதும் கேது 11ல் இருப்பார்.
பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத தன லாபம் ஏற்படும். ராகு 5ல் இந்த ஆண்டு முழுவதும்
இருப்பது உங்கள் குழந்தைகளின் கவலை உங்களை வருத்தும். ராகு பகவானை சனி கிழமைகளில் நெய்
தீபம் ஏற்றி வழிபடவும்.
நீண்ட நாட்களாக வராத பணம் உங்கள் இல்லம்
தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றமான அறிகுறி காணப்படும்.
No comments:
Post a Comment